கடந்த இரண்டு வார காலத்திற்கும் மேலாக இந்தியாவை சேர்ந்த பல்வேறு விமான நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தன அதாவது கடந்த அக்டோபர் 13 முதல் 26ஆம் தேதி வரையிலான 13 நாள் காலகட்டத்தில் சுமார் 300க்கும் அதிகமான விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன இவற்றில் ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், அகாஸா ஏர் போன்ற நிறுவனங்கள் அதிகம் பாதிக்கப்பட்டன, குறிப்பாக அக்டோபர் 22 ஆம் தேதி மட்டும் 50 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன குறிப்பாக அன்று மட்டும் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான 26 (தலா 13 வீதம்) விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது, இத்தகைய அனைத்து வெடிகுண்டு மிரட்டல்களும் போலியானவையாகும் மேலும் இவை அனைத்தும் சமூக வலைதளங்கள் மூலமாக கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் திரு கிஞ்சராப்பு ராம் மோகன் நாயுடு, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பல்வேறு முக்கிய அதிகாரிகள் இந்த முறை வெடிகுண்டு மிரட்டல்களுக்கு பின்னணியில் உள்ளவர்களை கண்டுபிடித்து கைது செய்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிட்டு முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தனர் மேலும் விமான பாதுகாப்பு சட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்வதற்கும் திட்டமிடப்பட்டது இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில காவல்துறை இந்த வெடிகுண்டு மிரட்டல்களுக்கு பின்னணியில் உள்ள நபரை கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன அதாவது நாக்பூர் மாவட்ட காவல்துறையினர் கோண்டியா பகுதியை சேர்ந்த 35 வயது நபர் தான் இந்த மிரட்டல்களுக்கு பின்னணியில் உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
நாக்பூர் நகர காவல் துறையின் சிறப்பு பிரிவு அதிகாரிகள் பயங்கரவாதம் பற்றிய புத்தகத்தை எழுதிய ஜெகதீஷ் உய்க்கி என்ற நபர் தான் பொதுமக்கள் மத்தியில் பதட்டத்தையும் பாதுகாப்பு வட்டாரங்கள் மத்தியில் கவலையையும் விமான நிறுவனங்களுக்கு நஷ்டத்தையும் மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் நேர விரையத்தையும் விமான நிலையங்கள் மற்றும் மிக முக்கியமான பகுதிகளுக்கு தேவையில்லாமல் அதிக பாதுகாப்பு வழங்கும் சூழலையும் ஏற்படுத்திய வெடிகுண்டு மிரட்டல்களுக்கு பின்னணியில் உள்ள நபர் எனவும் இவர் ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டவர் எனவும் மின்னஞ்சல் மூலமாக இவர் மிரட்டல்கள் விடுத்ததை வைத்து இவரை கண்டுபிடித்ததை உணர்ந்து கொண்ட அந்த நபர் தற்போது தலைமுறைவாக உள்ளதாகவும் நாக்பூர் நகர சிறப்பு பிரிவு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை நாக்பூர் நகர காவல் துறை இணை ஆணையர் ஸ்வேதா கட்கர் தலைமையில் நடைபெற்றதும் அவர் தலைமையிலான குழு தான் வெடிகுண்டு மிரட்டல்கள் அனுப்பப்பட்ட மின்னஞ்சலை வைத்து இந்த மேல் குறிப்பிடப்பட்ட நபரை கண்டுபிடித்ததும் கூடுதல் சிறப்பாகும், ஜெகதீஷ் உயிக்கி பிரதமர் அலுவலகம், இந்திய ரயில்வே அமைச்சர், மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ், மகாராஷ்டிரா மாநில காவல்துறை இயக்குனர், ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் விமான நிறுவனங்களின் அலுவலகங்கள் ஆகியவற்றிற்கும் பல்வேறு மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளான்.
ஜெகதீஷ் உயிக்கி பயங்கரவாதம் தொடர்பான ஒரு முக்கிய தகவலை கண்டுபிடித்துள்ளதாகவும் அதனை துணை முதல்வரை சந்தித்து தெரிவிக்க வேண்டும் எனவும் இல்லையெனில் அவர் வீட்டின் முன்பு மிக பயங்கரமான போராட்டம் நடத்துவேன் எனவும் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளான் இதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா மாநில காவல்துறை கடந்த திங்கட்கிழமை முதல் நாக்பூர் நகரத்தில் அமைந்துள்ள மகாராஷ்டிர துணை முதல்வரும் அம்மாநில உள்துறை அமைச்சருமான தேவேந்திர பத்னவிஸ் அவர்களின் வீட்டிற்கு கடந்த திங்கட்கிழமை முதல் பாதுகாப்பை அதிகரித்தது மட்டுமின்றி அவன் இதைப் பற்றி இந்திய பிரதமருடனும் விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்துள்ளான்.
மேலும் இந்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும், ரயில்வே பாதுகாப்பு படைக்கும் மற்றும் மகாராஷ்டிரா மாநில காவல்துறை இயக்குனருக்கும் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளான் இதனைத் தொடர்ந்து பல்வேறு ரயில்வே நிலையங்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர் மேலும் அவர்கள் பேசும் போது தற்போது தலைமுறைவாக உள்ள ஜெகதீஷ் உயிக்கியை மிக விரைவாக கண்டுபிடித்து கைது செய்வதற்கு ஒரு சிறப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது கூடுதல் தகவலாகும்