துக்காராம் கோபால் ஓம்பில் அசோக சக்ரா

துக்காராம் அவர்கள் மகாராஷ்டிரா காவல்துறையில் துணை ஆய்வாளராக பணியாற்றியவர். இந்திய ராணுவத்தின் சிக்னல் கார்ப்சில் பணியாற்றிய பிறகு 1991இல் மகாராஷ்டிரா காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியில் இணைந்தார்

2008ல் பயங்கரவாதிகள் மும்பையில் தாக்கியபோது துணை ஆய்வாளராக துக்காரம் அவர்கள் D.B. மார்க் காவல் நிலையத்தில் அன்று இரவு பணி செய்து கொண்டிருந்தார்.

அன்று நடுஇரவில் வயர்லெஸ் போனில் இரண்டு பயங்கரவாதிகள் marine drive நோக்கி செல்வதாக தகவல் கிடைத்தது. இதைக் கேட்ட துக்காராம் அவர்கள் பயங்கரவாதிகளை தடுப்பதற்காக சாலையில் தடுப்பணைகள் அமைத்தார். பயங்கரவாதிகள் வந்த கார் தடுப்பணை அருகில் நின்றதும் உள்ளே இருந்த பயங்கரவாதி ஒருவன் சுடத் தொடங்கினான்.

பயப்படாமல் உடனே காரின் இடது புறம் சென்ற துக்காராம் அவர்கள் அஜ்மல் கசாப் அவனின் ஏகே 47 துப்பாக்கியை பறிக்க முயன்றார். துப்பாக்கியின் முனை துக்காராம் அவர்களை நோக்கி இருக்க பயங்கரவாதி கசாப் பற்றி சுடத் தொடங்கினான்.

பாய்ந்து வந்த தோட்டாக்கள் துக்காராம் அவர்களின் உடம்பை துளைத்துச் சென்றது. ஆனால் அவர் அஜ்மல் கசாப்பை விடவில்லை தனது இறுதி மூச்சுவரை அவனை இறுகப் பிடித்துக் கொண்டே வீர மரணம் அடைந்தார். அவர் அஜ்மல் கசாப் வேறு யாரையும் சுடாத வண்ணம் அவனை  இறுகப் பிடித்துக் கொண்டார்.அவரது முயற்சியால் தான் அஜ்மல் கசாப் உயிருடன் பிடிபட்டான்.

அவர் ஒரு ராணுவ வீரர் படையிலிருந்து ஓய்வு பெற்றாலும் அந்த வீரம் ஓய்வு பெறாது. அவரது இணை இல்லா வீரம் மற்றும் பயங்கரவாதியைப் பிடிக்க காட்டிய துணிச்சல் மற்றும் நாட்டுக்காக செய்த தியாகம் காரணமாக அவருக்கு இந்திய அரசின் மிக உயரிய விருதான அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது.

மேலும் சிஎன்என் இந்திய விருது அவருக்கு வழங்கப்பட்டது.

மும்பையின் சௌப்பாட்டியில் அவருக்கு அவரது தியாகத்தை நினைவூட்டும் வகையில் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.