இந்தியா சிங்கப்பூர் இடையேயான அக்னி வீரர் 2024 கூட்டு பயிற்சிகள் துவக்கம் !!

இந்தியா மற்றும் சிங்கப்பூர் தரைப்படைகள் இடையேயான AGNI WARRIOR 2024 அக்னி வீரர் 2024 இருதரப்பு கூட்டு பயிற்சிகள் 28 முதல் வருகிற முப்பதாம் தேதி வரை மகாராஷ்டிரா மாநிலம் தேவலாலியில் இந்திய தரப்படையின் பீரங்கி படை பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளன.

இந்த இருதரப்பு கூட்டுப் பயிற்சியின் மிக முக்கியமான நோக்கம் இந்திய மற்றும் சிங்கப்பூர் தரை படைகளின் பீரங்கி படைகள் இடையேயான தொழில்முறை சார்ந்த ஒத்துழைப்புகளை அதிகப்படுத்துவதாகும். இது தவிர இரண்டு நாட்டு தரை படைகளின் பீரங்கி படைகளும் தங்களின் சிறப்பான அனுபவங்களையும் செயல்முறைகளையும் ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொள்ள உள்ளனர் இது தவிர இரண்டு நாட்டு கலாச்சாரங்களும் பரிமாறப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் முனைவர் ஹென் இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வ பயணமாக வந்து இந்தியா சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர்கள் இடையேயான ஆறாவது ஆண்டு பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டு சென்றதற்குப் பிறகு ஒரு மாதம் கழித்து நடைபெற உள்ளதும் வருகிற 2025 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையேயான உறவுகள் 60-வது ஆண்டை தொடர்புள்ளதைத் தொடர்ந்து இரண்டு நாட்டு அமைச்சர்களும் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகப்படுத்த இந்த சந்திப்பின்போது ஒப்புக்கொண்டனர்.

மேலும் இரு நாட்டு ராணுவ கூட்டு பயிற்சிகளை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நீட்டிப்பதற்கும், பாதுகாப்பு தளவாடங்களை கூட்டாக தயாரிப்பதற்கும் கூட்டாக மேம்படுத்துவதற்கும் இருநாட்டு பாதுகாப்பு தொழில்துறைகள் இடையேயான ஒத்துழைப்பை அதிகப்படுத்துவதற்கும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டது மேலும் கூடுதல் சிறப்பு மிக்க தகவலாகும்.இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கும் இந்திய படையணி பற்றிய தகவல்கள் தற்போது வெளியிடப்படவில்லை, சிங்கப்பூர் சார்பில் 23வது பீரங்கி படையணி இந்த கூட்டு பயிற்சிகளில் பங்கு பெறுவது குறிப்பிடத்தக்கதாகும்