மொராக்கோ: தர சோதனைகளில் சீன கவச வாகனத்தை வீழ்த்திய இந்திய கவச வாகனம் !!

மொராக்கோ தரைப்படை தனது ராணுவ நவீன மயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக புத்தம் புதிய கவச வாகனங்களை படையல் இணைக்க திட்டமிட்டுள்ளது அதன் ஒரு பகுதியாக கவச வாகனங்களுக்கான சோதனையை கடந்த மாதம் இறுதியில் மொராக்கோ தரைப்படை நடத்தியது இதில் இந்தியாவின் WhAP கவச வாகனம் சீனாவின் Type80 கவச வாகனங்களை வீழ்த்தியுள்ளதாக மொராக்கோ ராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் தனியார் பாதுகாப்பு தொழில்துறை நிறுவனமான TASL – Tata Advanced Systems Limited மற்றும் DRDO Defence Research & Development Organisation எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை கூட்டாக வடிவமைத்து தயாரித்த WhAP – Wheeled Armoured Platform கவச வாகனம் சீன அரசுக்கு சொந்தமான NORINCO எனப்படும் வடக்கு சீன தொழில்துறை கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் Type80 கவச வாகனங்கள் மொராக்கோவின் சர்வதேச டெண்டர் விதிமுறைகளின் படி சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

கடந்த 2022ஆம் ஆண்டு இந்த வாகனங்கள் சுமார் 4 மாத சோதனையில் ஈடுபடுத்தப்பட்டன அப்போது கடினமான நிலப்பரப்புகள் மலைப்பிரதேச பகுதிகள் பாலைவனப் பகுதிகள் ஆகியவற்றில் மிகக் கடுமையான சோதனைகளை சந்தித்தன இந்த சோதனைகளில் இந்தியாவின் WhAP கவச வாகனம் மிகவும் திறமையாக செயல்பட்டது அதே நேரத்தில் சீனாவின் Type80 ரக கவச வாகனமானது இந்த சோதனைகளில் மிகவும் திணறியது குறிப்பாக அதன் செயல்திறன் குறைந்து அவ்வப்போது தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டன இதன் காரணமாக மொராக்கோ தரைப்படை சீன வாகனத்தை நிராகரித்து இந்திய வாகனத்தை தேர்வு செய்தது.

இதைத் தொடர்ந்து தான் மொராக்கோ இந்த வாகனங்களை தனது நாட்டிலேயே தயாரிப்பதற்கு இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது, இந்த வாகனங்களில் மொராக்கோவின் தேவைக்கேற்ப சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன மேலும் இவற்றில் 50 சதவிகிதம் மொராக்கோ தயாரிப்பு பாகங்கள் பொருத்தப்படும் எனவும் கூறப்படுகிறது அந்த வகையில் இத்தகைய 100 வாகனங்கள் அடுத்த மூன்று ஆண்டுகளில் மொராக்கோ தரைப்படைக்கு தயாரித்து வழங்கப்பட உள்ளது.

மேலும் மொரக்கோவில் அமைக்கப்பட உள்ள தொழிற்சாலை மூலமாக மொராக்கோவில் இருந்து இத்தகைய கவச வாகனங்களை பிற ஆஃப்பிரிக்க நாடுகளுக்கும் தயாரித்து ஏற்றுமதி செய்ய முடியும் என்பதும் அவற்றின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியும் என்பதும் கூடுதல் சிறப்பு மிக்க தகவலாகும்.