இந்திய தரைப்படைக்கு ஏற்கனவே சேவையில் உள்ள PINAKA MBRL Multi Barrel Rocket Launcher பல குழல் ராக்கெட் லாஞ்சர் ஏவும் அமைப்பை அடிப்படையாகக் கொண்ட புதிய அதிநவீன MB – LML Multi Barrel Loitering Munition Launcher அதாவது பல குழல் மிதவை குண்டுகள் ஏவும் அமைப்பை வாங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது, இந்த மிதவை குண்டுகள் தற்கொலை தாக்குதல் ட்ரோன்கள் எனவும் அறியப்படுகின்றன இந்த அடுத்த தலைமுறை வான்வழி தாக்குதல் அமைப்புகள் இந்திய தரைப்படையின் துல்லிய தாக்குதல் திறன்களை பல மடங்கு அதிகரிக்கும்.
இந்த மிதவை குண்டுகள் ஏவப்பட்டதும் பறந்து சென்று இலக்கை நோக்கி நகர்ந்து அதாவது ஒரே இடத்தில் தேவைப்பட்டால் நிலையாக நின்று இலக்கை அடையாளம் கண்டதும் அதன் மீது மோதி வெடித்து அழிக்கும் திறன்களை கொண்டவை ஆகும் பீரங்கி குண்டுகளைப் போலவோ ஏவுகணைகளைப் போலவோ அல்லாமல் இலக்கை தாக்குவதற்கு முன் ஒரே இடத்தில் நிலையாக நின்று தகவல் சேகரித்து இலக்கை அடையாளம் கண்டு அதைப்பற்றிய தகவலையும் சேகரித்து அதை உறுதி செய்த பின்னர் தாக்கும் திறன் கொண்டவை ஆகும் இந்த அதிநவீன தொழில்நுட்ப ஆயுதங்கள் போர்க்களத்தில் எதிரி இலக்குகளை அழிப்பதற்கு அதிக அளவில் வீரர்களையோ படைகளையோ களம் இறக்கும் நிர்பந்தத்தை மாற்றும் தன்மை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த மிதவை குண்டுகள் இப்படி தாக்குதல் நடத்துவதால் மிக துல்லியமான தாக்குதலை நடத்த முடியும் மேலும் இதன் காரணமாக இலக்கை தவிர வேறு பகுதிகளுக்கோ மக்களுக்கு பாதிப்பை ஏற்படாமல் தாக்குதல் நடத்த முடியும், மிக முக்கியமான இலக்குகளை மிகவும் துல்லியமுடன் எளிதாக தாக்கி அழிக்க முடியும் அதே நேரத்தில் இலக்கு தவறிவிட்டால் தேவையின்றி தாக்குதல் நடத்தாமல் அவற்றை திரும்ப அழைத்து மீண்டும் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும் என்பது இவற்றின் கூடுதல் சிறப்பம்சம் ஆகும்.
சீனா ஏற்கனவே தனது தரைப்படையில் SR-5 பலக்குழல் ராக்கெட் ஏவு அமைப்பை இணைத்து பயன்படுத்தி வருகிறது இந்த அமைப்பில் இருந்து மிதவை குண்டுகளையும் ஏவ முடியும் இது இந்தியாவுக்கு பாதுகாப்பு சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது இதனைத் தொடர்ந்து இந்திய தரைப்படை ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள GRAD, SMERCH, PINAKA போன்ற மிகவும் சக்தி வாய்ந்த ராக்கெட் ஏவும் அமைப்புகளில் மிதவை குண்டுகளையும் ஏவும் வசதியை உட்புகத்த திட்டமிட்டு வருகிறது இது படை தலைவர்களுக்கு போர்க்களத்தில் எதிரிகள் மீது மிக சக்தி வாய்ந்த துல்லிய தாக்குதல் நடத்துவதற்கான திறன் மிக்க ஆயுதங்களை அளிக்கும்.
பொதுவாக இந்த மிதவை குண்டுகளை தனித்தனியாக ஏவ வேண்டும் அதற்கு மிக அதிக அளவில் வீரர்கள் பலம் இறக்கப்பட வேண்டும் ஆனால் மேற்குறிப்பிட்ட அமைப்புகள் மூலமாக ஒரே இரவும் அமைப்பிலிருந்து நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான மிதவை குண்டுகளை அதிக வீரர்கள் இன்றி ஏற்கனவே இந்த அமைப்புகளை இயக்கம் ஒற்றை இலக்க வீரர்களை கொண்டு ஏவ முடியும் இது தற்போது பயன்பாட்டில் உள்ள பீரங்கி படையின் அமைப்புகளை அதிகரித்து குறைந்த கால அளவிற்குள் மிகத் துல்லியமான மிகத் தீவிரமான அல்லது ஆக்ரோஷமான தொலைதூர தாக்குதல்களை தரைப்படையால் மேற்கொள்ள முடியும் என்பது இதன் சிறப்பாகும்.
இந்த அமைப்பிற்கு இந்திய ராணுவம் தேவையானவை என குறிப்பிட்டுள்ளது கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை பார்க்கலாம்
1) இந்த அமைப்புகளை இயக்குவதற்கு தேவையான பயிற்சி பெறுவதற்கான சிமுலேட்டர் அமைப்புகள்
2) பல குழல் விதவை குண்டு ஏவும் அமைப்பு
3) எஞ்சின் அமைப்பு – விதவை குண்டுகள் மிக நீண்ட தூரம் பயணிப்பதை உறுதி செய்வதற்கானவை
4) அதிவேகத்தில் உடனடியாக திசை மாற்றம் திறன்களை வழங்கும் தொழில்நுட்ப வசதிகள்
5) மிதவை குண்டுகளில் கணினி மற்றும் சென்சார் அமைப்புகள்
6) தொலைதூர தகவல் தொடர்பு அமைப்புகள்
7) வெடிகுண்டு மற்றும் ஃபியுஸ்
8) ஜாம்மர் எதிர்ப்பு கருவிகள்
9) தரை கட்டுப்பாட்டு மையம்
ஆகியவை ஆகும்.