நேற்று இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக 29 போர் விமானம் ஒன்று உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து வெடித்து சிதறியது இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக போர் விமானி விமானத்தை விட்டு வெளியேறி உயிர் தப்பினார், இதைத்தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரவிய வீடியோக்கள் ஆக்ரா நகருக்கு அருகே உள்ள சோங்கா கிராமத்தில் விமானம் விழுந்து வெடிப்பதையும் விமானம் விபத்துக்குள்ளான இடத்தை சுற்றி நிற்பதையும் விமானியின் வெளியேறும் இருக்கையை சுற்றி நிற்பதையும் காண முடிகின்றது.
இந்த போர் விமான விபத்து பற்றி இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக 29 கனரக பலதிறன் முன்னணி போர் விமானம் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு கட்டுப்பாட்டை இழந்து இதனைத் தொடர்ந்து விமானத்தை இயக்கிய போர் விமானி விமானத்தை மக்கள் இல்லாத பகுதிக்கு அதாவது குடியிருப்புகளோ மக்களோ இல்லாத பகுதிக்கு கொண்டு சென்றதாகவும் அதன் பிறகு விமானம் முழுவதும் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அவர் தனது வெளியேறும் இருக்கை மூலம் வெளியேறியதாகவும் தொடர்ந்து விமானம் தரையில் விழுந்து விபத்தை சந்தித்ததாகவும் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த மிக் 29 போர் விமானம் சோவியத் ரஷ்ய ஒன்றிய காலகட்ட தயாரிப்பாகும் கடந்த 1987 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் இந்த போர் விமானம் இணைக்கப்பட்டது, இவை மிகவும் பாதுகாப்பான வரலாறு கொண்டவை ஆகும் இந்த மிக் 29 வான் ஆதிக்க பல திறன் போர் விமானம் இந்தியாவில் BAAZ பாஸ் எனவும் நேட்டோ ராணுவ கூட்டமைப்பால் Fulcrum எனவும் அழைக்கப்படுகிறது, தற்போது விபத்துக்குள்ளான விமானம் இதன் மேம்படுத்தப்பட்ட வடிவமான Mig-29 UPG ஆகும்.
கடந்த இரண்டு மாதங்களில் விபத்துக்குள்ளாகும் இரண்டாவது 29 போர் விமானம் இதுவாகும் இதற்கு முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலம் பார்மர் அருகே இரவு நேர பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படையின் மிக 29 போர் விமானம் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது இந்த விபத்திலும் விமானத்தை இயக்கிய போர் விமானி அதிர்ஷ்டவசமாக தனது வெளியேறும் இருக்கை மூலமாக வெளியேறி உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கதாகும்.
மிக் 29 போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் வெளியேறும் இருக்கை Zvezda K-36D zero zero ரக வெளியேறும் இருக்கைகள் ஆகும் அதாவது நிலையான நிலையில் இருந்தும் விமானிகள் விமானத்தை விட்டு வெளியேற இவை உதவும் குறிப்பாக மிக தாழ்வாக பறக்கும் போது அல்லது மிக குறைந்த வேகத்தில் பறக்கும் போது அல்லது தரையிறங்கும் போதோ மேலெழும்பும்போதோ ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால் உடனடியாக வெளியேற இவை உதவும், தேஜாஸ் விமானத்தில் பயன்படுத்தப்படும் இங்கிலாந்தின் மார்ட்டின் பேக்கர் நிறுவனத்தின் Zero Zero ரக வெளியேறும் இருக்கைகள் தயாரிக்கப்பட்ட போது ரஷ்யாவும் இந்த வகை இருக்கைகளை தயாரித்தது, இந்த வகை இருக்கைகள் உலகின் மிக நவீனமான வெளியேறும் இருக்கைகளில் ஒன்று என்பதும் நமது சு- 30 கனரக வான் ஆதிக்க பல திறன் போர் விமானங்களில் பயன்படுத்தப்படுவதும் குறிப்பிடத்தக்கது.