இந்திய விமானப்படை மற்றும் இந்திய தரைப்படையில் உள்ள சேத்தக் (Aérospatiale Alouette III) மற்றும் சீட்டா (Aérospatiale SA 315B Lama) ஆகிய ஹெலிகாப்டர்கள் வயதாகி வருவதால் அவற்றை மாற்றி விட்டு அவற்றுக்கு பதிலாக உள்நாட்டிலேயே HAL Hindustan Aeronautics Limited ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட LUH – Light Utility Helicopter இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர் தற்போது இந்திய தரைப்படை மற்றும் இந்திய விமானப்படை ஆகியவற்றால் சிறிய அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவில் இவருக்கான ஒப்பந்தம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய கடற்படையிலும் மேல் குறிப்பிட்ட சீட்டா மற்றும் சேத்தக் ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டில் உள்ளன அதேபோல இந்திய கடலோர காவல் படையிலும் சேத்தக் ரக ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டில் உள்ளன, இவற்றிற்கும் வயதாகி வருவதால் ஒரு கடல்சார் இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர்க்கான தேவை எழுந்தது இதைத்தொடர்ந்து ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் ஏற்கனவே தான் வடிவமைத்து உருவாக்கிய இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டரின் கடல்சார் வடிவத்தையும் தற்போது மேம்படுத்தி தயாரித்து வருகிறது இதற்கு MUH – Maritime Utility Helicopter என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு அதாவது 2025 மே மாதம் இந்த ஹெலிகாப்டரின் முதல் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன இந்திய கடற்படைக்கு இத்தகைய சுமார் 111 ஹெலிகாப்டர்களின் தேவை ஏற்பட்டுள்ளது கடலில் குறிப்பாக போர்க்கப்பல்களில் இருந்து படையினரின் போக்குவரத்து, சரக்கு சப்ளை மற்றும் டெலிவரி, மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபடக்கூடிய திறன் கொண்ட ஹெலிகாப்டர்கள் மிக இன்றியமையாத தேவையாக உள்ளது.
தற்போது சோதனை ஓட்டம் மேற்கொள்வதற்கான ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அதே நேரத்தில் இந்த ஹெலிகாப்டர்களில் பொருத்தப்பட உள்ள அமைப்புகள் வேறொரு சோதனை ஹெலிகாப்டரில் பொருத்தப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் ஆகவே அடுத்த ஆண்டு மே மாதம் நெருங்கும் போது இந்த ஹெலிகாப்டர்களின் கட்டமைப்பு பணியும் நிறைவடைந்து இந்த அமைப்புகளின் சோதனையும் நிறைவடைந்து இந்த அமைப்புகளை தயாரிக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர்களில் இணைத்து சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கடல்சார் இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட இலகு ரக பயன்பாட்டு ஹெலிகாப்டரை அடிப்படையாகக் கொண்டதானாலும் இதில் பல்வேறு மேம்பாடுகள் மற்றும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது ஆகவே இது கிட்டத்தட்ட ஒரு புத்தம் புதிய வகை ஹெலிகாப்டரை போன்றது எனவும் இந்திய கடற்படைக்கு இத்தகைய தேவை ஏற்பட்டபோது முதலில் ஒரு வெளிநாட்டு நிறுவனத்தை இந்தியாவிலேயே இத்தகைய இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர்களை தயாரித்து வழங்கும் படி திட்டமிடப்பட்டிருந்ததாகவும் பின்னர் அது கைவிடப்பட்டு HAL நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் மேலும் கடல் சார் நடவடிக்கைகளுக்கு ஏற்ற மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் மூத்த அதிகாரிகள் கூறுவது கூடுதல் சிறப்பு மிக்க தகவலாகும்