நேற்று அதாவது புதன்கிழமை அன்று இந்திய கடற்படையின் புத்தம் புதிய மற்றும் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட அணுசக்தியால் இயங்கும் அணு ஆயுத தாக்குதல் நீர் மூழ்கி கப்பலான INS ARIGHAT ஐ என் எஸ் அரிகாத் நீர் மூழ்கி கப்பலில் இருந்து அணு ஆயுத திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் பலிஸ்டிக் ஏவுகணையை ஏவி வெற்றிகரமாக இந்தியா சோதனை செய்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
சோதனை செய்யப்பட்ட ஏவுகணை திட எரிபொருளை பயன்படுத்தும் இரண்டு நிலை கொண்ட 19000 கிலோ எடை கொண்ட மற்றும் 2000 கிலோ எடை கொண்ட அணுகுண்டை சுமந்து ஏறத்தாழ நான்காயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை மிகத் துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்ட K-4 SLBM Submarine Launched Ballistic Missile அதாவது நீர் மூழ்கியிலிருந்து ஏவப்படும் பலிஸ்டிக் ஏவுகணையை சப்தமே இன்றி நேற்று இரவு தெற்கு வங்க கடலில் இந்திய கடற்படை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
இந்த சோதனையின் சிறப்பம்சம் என்னவென்றால் முதல் முறையாக தற்போது தான் இந்த ஏவுகணை ஒரு நீர் மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்படுகிறது என்பதாகும் இதற்கு முன்பாக இந்த ஏவுகணையின் சோதனைகள் நீர் மூழ்கி கப்பல்களில் இருந்து ஏவி நடத்தப்படவில்லை மாறாக நீருக்குள் அமைக்கப்பட்டிருந்த ஒரு சிறப்பு அமைப்பிலிருந்து ஏவி சோதனை செய்யப்பட்டது, 6000 தன் எடை கொண்ட அரிகாத் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணையானது எதிர்பார்த்தபடியே அனைத்து தொழில்நுட்ப எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்து வெற்றிகரமாக இலக்கை அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா சொந்தமாக தயாரித்த முதலாவது அணு சக்தியால் இயங்கும் அணு ஆயுத நீர் மூழ்கி கப்பலான ஐ என் எஸ் அரிஹந்த் மேல் குறிப்பிட்ட கே4 போன்ற பெரிய ஏவுகணைகளை சுமக்காது மாறாக வெறுமனே 750 கிலோமீட்டர் தூரம் மட்டுமே செல்லக்கூடிய சிறியராக கே-15 ரக ஏவுகணைகளை தான் சுமக்கும் ஆனால் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி இந்திய கடற்படையில் இணைந்த இந்தியாவின் இரண்டாவது உள்நாட்டிலேயே முழுவதும் தயாரிக்கப்பட்ட ஐ என் எஸ் அரிகாத் நீர் மூழ்கி கப்பல் இத்தகைய பெரிய ஏவுகணைகளையும் சுமக்கும் திறன் கொண்டதாகும்.
கடந்த சில நாட்களுக்கு முன்பதாக இந்திய அரசு நவம்பர் 27 முதல் முப்பதாம் தேதி வரையிலான காலகட்டத்திற்கு வங்க கடலில் குறிப்பிட்ட பகுதியில் சுமார் 3 490 கிலோமீட்டர் நீளம் கொண்ட பகுதியில் ஏவுகணை சோதனை நடைபெற உள்ளதாகவும் அதை தொடர்ந்து அந்த பகுதியில் விமானங்கள் பயணிப்பதற்கு தடை விதித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது இந்த ஏவுகணையின் தாக்குதல் வரம்பில் ஒட்டுமொத்த பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் ஈரானின் சில பகுதிகளும் மத்திய ஆசியாவின் சில பகுதிகளும் பெரும்பாலான சீனாவின் பகுதியும் பெரும்பாலான தென்கிழக்கு ஆசிய நாடுகளும் உள்ளடங்கும் என்பது கூடுதல் சிறப்பாகும்.