நீண்ட தூரம் பயணம் செய்து தரை இலக்குகளை தாக்கக்கூடிய குரூஸ் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இந்தச் சோதனையின் வெற்றியை பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை தளத்தில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது. இந்தச் சோதனையின் போது ஏவுகணை சிறப்பாக செயல்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் ஏவுகணையின் அனைத்து துணை பாகங்களும் சரியாக செயல்பட்டுள்ளன.
இந்தியாவின் டி ஆர் டி ஓ நிறுவனம் இந்த ஏவுகணையை மேம்படுத்தியுள்ளது. இந்த ஏவுகணையை தரையில் இருந்தும் போர்க் கப்பல்களில் இருந்தும் ஏவ முடியும். அனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக முடியும் பட்சத்தில் பாரத் டைனாமிக் லிமிடெட் ( Bharat dynamics limited) மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ( Bharat electronics limited ) இந்த ஏவுகணை தயாரிப்பை மேற்கொள்ளும்.
நெடுந்தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்க இந்திய பாதுகாப்பு படைகளுக்கு இந்த ஏவுகணை பேருதவியாக இருக்கும். இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு இந்த ஏவுகணை மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.