வெற்றிகரமாக தொலைதூர ஹைப்பர்சானிக் ஏவுகணை சோதனையை நடத்தி உலகின் வெகு சில நாடுகளின் பட்டியலில் இணைந்த இந்தியா !!

நேற்று இரவு இந்தியா முதல்முறையாக தொலைதூர ஹைப்பர்சனிக் ஏவுகணையை ஏவி வெற்றிகரமாக சோதனை செய்துள்ள தகவல் இன்று உலகம் முழுவதும் பரபரப்பை கிளப்பியுள்ளது ஒடிசா மாநிலத்தில் வங்க கடல் பகுதியில் அமைந்துள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து இந்த ஹைப்பர்சனிக் ஏவுகணை வெற்றிகரமாக ஏவி சோதனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாதுகாப்பு அமைச்சர் ராஜநாத் சிங் இது பற்றி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ஹைப்பர்சானிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதன் மூலம் இந்தியா சாதனை புரிந்துள்ளதாகவும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு தொழில்துறை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இதற்காக தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும், இதன் மூலம் இத்தகைய அதி நவீன மிக முக்கியமான தொழில் நுட்பங்களை பெற்றுள்ள மிக சில நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இடம்பிடித்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது அமெரிக்கா ரஷ்யா சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே வெற்றிகரமாக ஹைப்பர்சனிக் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளனர் அதிலும் குறிப்பாக ரஷ்யா மற்றும் சீனா ஆகியவை மட்டுமே ஹைப்பர்சானிக் ஆயுதங்களை படையில் இணைத்துள்ளன அந்த வரிசையில் இந்தியாவும் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தானும் தன்னிடம் ஹைபர்சானிக் ஏவுகணை இருப்பதாக கூறிக் கொள்ளும் நிலையில் அது உறுதி செய்யப்படவில்லை இங்கிலாந்து 2030 ஆம் ஆண்டு பைபர் சாமிக்கு ஏவுகணையை சோதனை செய்து படையில் இணைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது, இது தவிர ஆஸ்திரேலியா தென் கொரியா வட கொரியா பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளும் ஹைபர்சனிக் ஏவுகணை ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த சோதனையின் போது ஹைப்பர்சானிக் ஏவுகணை அனைத்து நோக்கங்களையும் பூர்த்தி செய்ததாகவும் அதனுடைய அனைத்து துணை அமைப்புகளும் சிறப்பாக வேலை செய்ததாகவும் ஏவுகணையின் செயல்திறனை பல்வேறு இடங்களில் நிறுவி இருந்த கண்காணிப்பு அமைப்புகள், ரேடார்கள் மற்றும் எலக்ட்ரோ ஆப்டிகல் ட்ராக்கிங் சிஸ்டம் ஆகியவை மூலமாக கண்காணித்ததாகவும் பறக்கும் போதே இந்த ஏவுகணை பல்வேறு உயரங்களில் தேவைக்கேற்ப வேகத்தை அதிகரித்து சூழலுக்கு ஏற்ப அங்கும் இங்கும் நகர்ந்து பயணித்ததாகவும் ஏவுகணை சிறப்பான செயல் திறனை கொண்டிருப்பதை உறுதி செய்வதற்காக அதிநவீன ஏவியானிக்ஸ் மற்றும் மென்பொருள் ஆகியவை பொருத்தப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இந்த ஹைப்பர்சனிக் ஏவுகணை தனது இலக்கை மிக துல்லியமாக அடைந்ததாகவும் கூறப்படுகிறது இது சுமார் 1500 கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்து சென்று இலக்கை வெற்றிகரமாக தாக்கி அளிக்கும் தொலைதூர ஹைப்பர்சானிக் ஏவுகணை ஆகும், இதனுடைய மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் இந்திய ராணுவத்தின் முப்படைகளும் அதாவது தரைப்படை விமானப்படை மற்றும் கப்பல் படை ஆகியவை தங்களது தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதாகும்.

இன்றைய மாறிவரும் தொழில்நுட்ப யுகத்தில் ஹைபர்சானிக் ஆயுதங்கள் மிகவும் இன்றி அமையாதவைஆகும், இவை ஒலியை விட சுமார் ஐந்து முதல் 25 மடங்கு அதாவது ஒரு நொடியில் ஒன்றரை முதல் எட்டரை கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் அசாத்திய திறன் கொண்டவை ஆகும் இவை ஒரு மணி நேரத்தில் சுமார் 6125 கிலோமீட்டர் தூரம் முதல் ஏறத்தாழ 31,000 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கக் கூடியவை ஆகும் இவற்றின் அசூர வேகத்தால் எதிரி வான் பாதுகாப்பு ஆயுதங்களால் இவற்றை தடுக்க முடியாது இவை போர்க்களத்தின் சூழலை அடியோடு மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவை ஆகும் மேலும் எதிரி தாக்குதல்களுக்கான பதிலடி நேரத்தை மிகவும் குறைக்கக் கூடியவை அதேபோல எதிரி சுதாரித்துக் கொள்வதற்கான நேரத்தையும் இவை அளிக்காது.

இந்தியா சோதனை செய்துள்ள இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் வேகம் தற்போது வெளியிடப்படவில்லை இதை வடிவமைத்து மேம்படுத்தியவர்கள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் பல்வேறு ஆய்வகங்கள், தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் அமைந்துள்ள அப்துல் கலாம் ஏவுகணை மையம் மற்றும் அதனுடைய ஆய்வகங்கள் ஆகும். இந்த ஏவுகணை சோதனை மூத்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானிகள் மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது கூடுதல் சிறப்பு மிக்க தகவலாகும்.