கிராமத்தினராலும் குடும்பத்தாலும் நேசிக்கப்படும் அமெரிக்கா தேடும் இந்திய உளவாளி !!

சமீபத்தில் அமெரிக்க அரசு அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியும் காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதியுமான குர்ப்ந்த்வந்த் சிங் பன்னூனை கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறி விகாஷ் யாதவ் என்ற இந்திய துணை ராணுவ படை அதிகாரியின் பெயர் மற்றும் விவரங்களை வெளியிட்டது, அமெரிக்க அரசின் மத்திய புலனாய்வு அமைப்பான FBI Federal Bureau of Investigation விகாஷ் யாதவின் விவரங்களை வெளியிட்டுள்ளது அவரது கிராமத்தினரையும் குடும்பத்தினரையும் அதிரச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது.

தலைநகர் டெல்லியில் இருந்து 105 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஹரியானா மாநிலத்தின் ரேவாரி மாவட்டத்தில் அமைந்துள்ள ப்ரான்புரா கிராமத்தை சேர்ந்தவர் தான் 39 வயதான CRPF Central Reserve Police Force மத்திய ரிசர்வ் காவல் படையில் துணை கமாண்டன்ட் ஆக பணியாற்றிய விகாஷ் யாதவ். இவரது தந்தை காலம் சென்ற ராம் சிங் யாதவ் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றியவர் ஆவார், இவரது தாயார் 65 வயதான சுதேஷ் யாதவ், சகோதரர் அஜய் யாதவ் ஹரியானா காவல்துறையில் காவலராக குர்கான் நகரில் பணியாற்றி வருகிறார், விகாஷ் யாதவின் மனைவி மற்றும் மகள் டெல்லியில் வசித்து வருகின்றனர்.

விகாஷ் யாதவ் மீது அமெரிக்க நீதித்துறை விசாரணை அறிக்கை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்ட போது அவரும் அவருடன் சேர்த்து நிகில் குப்தா என்பவரும் சேர்ந்து 15000 அமெரிக்க டாலர்களை (12 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய்) ஒரு கூலிப்படைக்கு கொடுத்து குர்ப்ந்த்வந்த் சிங் பன்னூனை கொல்ல முயற்சி செய்ததாகவும் விகாஷ் யாதவ் இந்தியாவின் RAW Research & Analysis Wing இல் பணியாற்றும் உளவாளி எனவும் குற்றம்சாட்பப்பட்டது, இதற்கு அமெரிக்க சட்டப்படி 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என கூறப்படுகிறது.

ஆனால் இவரது குடும்பத்தினரும் கிராமத்தினரும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வருகின்றனர் இவரது உறவினர் ஒருவர் பேசும்போது விகாஷ் யாதவும் வீடை காட்டி இந்த வீட்டை பாருங்கள் இங்கே மெர்சிடிஸ் அல்லது ஆடி கார் ஏதேனும் நிற்கிறதா ? விகாஷ் யாதவால் எப்படி இவ்வளவு பெரிய தொகையை கொடுக்க முடியும் என கேள்வி எழுப்புகிறார், அவரது சகோதரரும் தாயாரும் பேசும்போது விகாஷ் யாதவ் நாட்டுக்காக பணியாற்றி வருவதாகவும் அமெரிக்க அரசின் குற்றச்சாட்டுகளில் எந்த வித உண்மையும் இல்லை எனவும் தங்கள் குடும்பம் முழுவதும் நாட்டுக்காக உழைத்தவர்கள் எனவும் விவகாரத்தில் உண்மை என்ன என்பது விகாசுக்கும் இந்திய அரசுக்கும் மட்டுமே தெரியும் எனவும், இந்திய அரசு இந்த விவகாரத்தில் விகாஷ் யாதவின் பாதுகாப்பை உறுதி செய்யும் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும் எனவும் நம்பிக்கை தெரிவித்தனர்.

விகாஷ் யாதவின் கிராமத்தை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் ஊடகவியலாளர்களிடம் இது பற்றி பேசும்போது விகாஷ் யாதவ் என்ன தவறு செய்தார் ?? குர்ப்ந்த்வந்த் சிங் பன்னூன் இந்தியாவுக்கு எதிரான செயல்களை செய்து வரும் ஒரு பிரிவினைவாதி மற்றும் பயங்கரவாதி, விகாஷ் யாதவ் தேச பாதுகாப்பிற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை தான் செய்தார், அவர் தனது கடமையை சரியாக செய்தவர் அவர் மீது எந்த தவறும் கிடையாது, அமெரிக்க அரசு பொய் சொல்கிறது, மும்பை தாக்குதலில் தொடர்புடைய அமெரிக்க குற்றவாளி டேவிட் ஹெட்லியை அவர்கள் நம்மிடம் ஒப்படைத்தார்களா என சரமாரியாக கேள்விகளை எழுப்பி உள்ளார்.

மேலும் விகாஸ் யாதவின் குடும்பத்தினர் பேசும்போது கடந்த ஒரு ஆண்டு காலமாக அவரை அவர்கள் சந்திக்கவில்லை எனவும் தொலைபேசியில் கூட சரியாக பேசிக் கொள்ளவில்லை எனவும், கடைசியாக அவருக்கு மகள் பிறந்த போது மகளைக் காண வீட்டுக்கு வந்ததாகவும் அப்போது கூட தான் கைது செய்யப்பட்டதாக எதுவும் சொல்லவில்லை எனவும் கூறியுள்ளனர், அமெரிக்க அரசு இவர் மீது குற்றம் சாட்டிய அடுத்த மூன்று வார காலத்திற்குள் தில்லி காவல்துறையினர் விகாஷ் யாதவ் கடத்தல் வழக்கு ஒன்றில் கைது செய்துள்ளனர், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள விகாஷ் யாதவ் இந்திய அரசு பணியில் தற்போது இல்லை என இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

விகாஷ் யாரும் கடந்த 2009ஆம் ஆண்டு மத்திய ரிசர்வ் காவல்படையில் அதிகாரியாக இணைந்துள்ளார், உடற்பயிற்சியில் தீவிர ஆர்வம் கொண்டவர் எனவும் நன்கு படிப்பவர் எனவும் கூறுகின்றனர். கடந்தாண்டு நவம்பர் 25ஆம் தேதி இவருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பில் மத்திய நிர்வாக நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பில் Cabinet Secretariat மத்திய அமைச்சரவை செயலகத்தின் கீழ் இயங்கும் Director General of Security பாதுகாப்பக்கான இயக்குனர் ஜெனரல் அலுவலகத்தின் பொறுப்பில் இயங்கும் ARC – Aviation Research Center ல் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது தற்போது ARC இந்தியாவின் வெளிநாட்டு உளவு அமைப்பான RAW – Research & Analysis Wing ல் இணைக்கப்பட்டுள்ளது, இந்த அமைப்பு வான்வழி கண்காணிப்பு, செயற்கைகோள் மற்றும் வானூர்தி புகைப்பட கண்காணிப்பு போன்ற பணிகளை மேற்கொள்கிறது என்பது கூடுதல் தகவலாகும்.