ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் சமீபத்தில் இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான நான்காவது ராணுவ ஒத்துழைப்புக்கான செயல்பாட்டு குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த அமைப்பு இரு நாட்டு அரசுகளால் ராணுவ ஒத்துழைப்பு மற்றும் ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு விவகாரங்களை மேற்பார்வையிடவும் செயல்படுத்தவும் உருவாக்கப்பட்டதாகும் ஒவ்வொரு ஆண்டும் இந்தக் குழு சந்தித்து ராணுவ ஒத்துழைப்பு தொடர்பான காரியங்களை விவாதித்து அவற்றை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
இந்த ஆண்டுக்கான சந்திப்பு நடைபெற்று முடிந்த பிறகு இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகள் இடையேயான வரலாற்று சிறப்புமிக்க மிக நீண்ட நெடிய வரலாறு கொண்ட இருதரப்பு உறவுகளில் மிக முக்கியமான முன்னேற்றத்திற்கு இந்த சந்திப்பு வழி வகுத்துள்ளதாகவும் அப்படி ஏற்கனவே ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களில் இது ஒரு மைல்கல் எனவும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு இந்த சந்திப்பின்போது ஒருமனதாக தொடர்ச்சியான அறிவு பரிமாற்றம் மற்றும் முலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் கூட்டு செயல்பாடுகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது மேலும் இரு நாட்டு ராணுவங்கள் இடையேயான இருதரப்பு கூட்டு பயிற்சிகளை அதிகரிப்பது மற்றும் இருநாட்டு ராணுவங்கள் இடையேயான கூட்டு செயல்பாடுகளுக்கு வலுவான அடித்தளம் அமைப்பது ஆகியவற்றிற்கும் ஒருமனதாக சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான முலோபாய ஒத்துழைப்பு கடந்த 2000 ஆவது ஆண்டில் கையெழுத்தானது இது கடந்த 2010 ஆம் ஆண்டில் சிறப்பு மற்றும் முன்னுரிமை கொண்ட ஒத்துழைப்பாக அடுத்த கட்டத்திற்கு இரண்டு நாட்டு அரசுகளாலும் எடுத்து செல்லப்பட்டது இந்த செயல்பாட்டு குழுவானது இந்திய ரஷ்யா இடையிலான ராணு ஒத்துழைப்பு மிக முக்கியமான அமைப்பாகும் இந்த அமைப்பு ஏற்கனவே உள்ள ராணுவ ஒத்துழைப்புகளை வலுவாக்குவது மற்றும் ஒவ்வொரு நாளும் மாறிவரும் பாதுகாப்பு சூழல்கள் மற்றும் உருவாகும் பாதுகாப்பு சவால்களுக்கு ஏற்ப ராணுவ ஒத்துழைப்புகளை அதிகரிக்க வேண்டிய புதிய பகுதிகளை கண்டறியும் பணிகளை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கதாகும்.