சத்தம் இன்றி நான்காவது அணுசக்தியால் இயங்கும் அணு ஆயுத தாக்குதல் நீர்மூழ்கி கப்பலை கடலில் இறக்கிய இந்தியா !!

கடந்த அக்டோபர் மாதத்தின் இறுதியில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நகரத்தில் அமைந்துள்ள இந்தியாவின் எதிர்கால அணுசக்தியால் இயங்கும் நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் SBC Ship Building Center அதாவது கப்பல் கட்டுமான மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியாவின் நான்காவது அணுசக்தியால் இயங்கும் அணு ஆயுத ஏவுகணைகளை சுமந்து அணு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆற்றல் கொண்ட நீர்மூழ்கி கப்பலை இந்தியா சத்தம் இன்றி மிகப்பெரிய விளம்பரம் இன்றி கடலில் இறக்கி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன இதன் மூலம் இந்தியாவின் எதிரிகளுக்கு எதிரான இந்தியாவின் அணு ஆயுத தாக்குதல் திறன்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த புதிய அணுசக்தியால் இயங்கும் அணு ஆயுத தாக்குதல் நீர்மூழ்கி கப்பல் ஆனது S4* s4 ஸ்டார் ரகத்தை சேர்ந்ததாகும் இதில் உள்ள 75% அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள் இந்திய தயாரிப்பாகும் இந்த வகை நீர்மூழ்கி கப்பல்கள் சுமார் 3500 கிலோ மீட்டர் தூரம் வரை அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட K-4 SLBM Submarine Launched Ballistic Missiles நீர் மூழ்கியிலிருந்து செங்குத்தாக ஏவப்படும் பலிஸ்டிக் ஏவுகணைகளை சுமக்கும் திறன் கொண்டவை ஆகும், இந்த வரிசையில் வந்த முதல் நீர் மூழ்கி கப்பலான INS ARIHANT வெறுமனே 750 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் K-15 SLBM ஏவுகணைகளை சுமப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த புதிய எஸ்4 ஸ்டார் ரக நீர்மூழ்கி கப்பலானது இதற்கு முந்தைய அணுசக்தியால் இயங்கும் அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல்களை விடவும் பல்வேறு வகைகளில் மேம்படுத்தப்பட்டது மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் கொண்டதாகும் பராமரிப்பு உணவு தேவைகள் மற்றும் குழுவினரின் களைப்பு ஆகியவற்றை தவிர்த்து இவை தொடர்ந்து பல ஆண்டுகள் நீருக்கடியிலேயே வெளிவராமல் தங்கி இருந்து இயங்கும் தன்மை கொண்டவை ஆகும் அதாவது உணவு நிரப்பி கொள்வதற்கும் குழுவினரை மாற்றுவதற்கும் பராமரிப்பு பணிகளுக்கு மாத்திரம் கரைக்கு வரவேண்டிய அவசியம் உள்ளது, முதல் இரண்டு அணுசக்தியால் இயங்கும் அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல்கள் ஆன INS ARIHANT மற்றும் INS ARIGHAT ஆகியவை தற்போது இந்திய கடற்படையின் சேவையில் ஆழ்கடல் நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களால் இந்தியாவின் இரண்டாவது அணுசக்தியால் எங்கும் அணு ஆயுத ஏவுகணைகள் மூலம் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட இரண்டாவது நீர்மூழ்கி கப்பலான INS ARIGHAT அரிகாத் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது, இந்த வரிசையில் கட்டுமானத்தை முடித்து கடல் சோதனைகளில் தற்போது ஈடுபடுத்தப்பட்டு உள்ள இந்திய கடற்படையின் மூன்றாவது அணுசக்தியால் இயங்கும் அணு ஆயுத ஏவுகணைகள் மூலம் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட மூன்றாவது நீர்மூழ்கி கப்பலான INS ARIDHAMAN அரிதாமன் அடுத்த ஆண்டு அதாவது 2025 ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளது.

மேலும் கடந்த அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி பாதுகாப்புக்கான அமைச்சரவை கமிட்டி இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் இந்திய கடற்படையின் பலத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் கூடிய இரண்டு அணுசக்தியால் இயங்கும் அதிவேக தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களை உள்நாட்டிலேயே கட்டமைப்பதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது இது தவிர வருகிற 2028 ஆம் ஆண்டு ரஷ்யாவிடம் இருந்து தற்போது கட்டுமானத்தில் உள்ள புத்தம் புதிய Akula அகுலா ரக K-519 Iribis ஐரிபிஸ் என பெயரிடப்பட்ட அணுசக்தியால் இயங்கும் அதிவேக தாக்குதல் நீர் மூழ்கி கப்பல் வருகிற 2028 ஆம் ஆண்டு குத்தகை அடிப்படையில் இந்திய கடற்படையில் இணைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜநாத் சிங் அவர்கள் இந்திய கடற்படையின் வருங்கால அணுசக்தியால் இயங்கும் நீர் மூழ்கி கப்பல் திட்டங்களை பற்றி பேசும்போது இந்தத் திட்டங்கள் இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளதாகவும் இந்தியாவுடன் கடல் எல்லையை பகிர்ந்து கொள்ளும் அல்லது தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள கடல் சார் நாடுகள் கடல்சார் பாதுகாப்பு ஒரு கூட்டு நடவடிக்கை என்பதையும் இந்தப் பகுதியை சேராத பிற நாடுகளை அழைப்பது இந்தக் கூட்டு உறவுகளை பாதிக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும், வங்க கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதி ஆகியவற்றில் அமைதியை உறுதி செய்வது தலையாயக் கடமை எனவும் இந்த முயற்சியில் இந்தியாவின் நட்பு நாடுகளின் ஒத்துழைப்பு மிகவும் இன்றி அமையாது எனவும் இதில் ஒரு நாடு விடுபட்டாலும் இந்தியாவின் பாதுகாப்பு சக்கரம் உடைந்து விடும் எனவும் தெரிவித்தார்.

இந்தியாவின் முதல் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் ரஷ்யாவிடம் இருந்து குத்தகை அடிப்படையில் பெறப்பட்ட INS CHAKRA ஆகும், இது S1 என அறியப்பட்டது இதைத் தொடர்ந்து தான் தற்போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தயாரிக்கப்பட்டு வரும் அணுசக்தியால் இயங்கும் நீர் மூழ்கி கப்பல்களான INS ARIHANT S2 எனவும் INS ARIGHAT S3 எனவும், INS ARIDHAMAN S4 எனவும், இன்னும் பெயரிடப்படாத நான்காவது நீர்மூழ்கி கப்பல் S4* எனவும் அழைக்கப்படுகின்றன, வருங்கால இந்திய அணுசக்தியால் இயங்கும் நீர் மூழ்கி கப்பல்கள் குறிப்பாக S5 ரக அணுசக்தியால் இயங்கும் அணு ஆயுத தாக்குதல் நீர்முள்ளி கப்பல்கள் சுமார் 13 ஆயிரத்து 500 டன்கள் எடை கொண்டவை ஆகவும் 6000 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும் K-5 மற்றும் 12000 கிலோமீட்டர் வரை ஒன்றுக்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் K-6 MIRV SLBM ஏவுகணைகளையும் சுமக்கும் திறன் கொண்டவையாக இருக்கும் என்பது கூடுதல் சிறப்பு மிக்க தகவல் ஆகும்