இந்தியா மற்றும் இந்தோனேஷியா தரை படைகளின் சிறப்பு படைகளுக்கு இடையே வருடாந்திர ரீதியில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது இந்த ஆண்டு ஒன்பதாவது முறையாக இந்த பயிற்சிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகருக்கு அருகே உள்ள சிஜான்தூங் பகுதியில் அமைந்துள்ள சிறப்பு படை தளத்தில் கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி தொடங்கி நவம்பர் 12ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த சிறப்புப்படை பயிற்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய தரைப்படையின் சிறப்புப்படை சார்பில் 40 வீரர்களும் இந்தோனேஷியா தரைப்படையின் சிறப்பு படையின் சார்பில் 40 வீரர்களும் கலந்துகொண்டு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், நீர் சார்ந்த நடவடிக்கைகள், நகர்ப்புற மற்றும் காட்டுப்பகுதிகளில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது, விதவிதமான துப்பாக்கி சூடு முறைகளில் பயிற்சி மேற்கொள்வது போன்றவற்றில் ஈடுபட்டனர், இந்திய தரைப்படையின் பேரா சிறப்பு படை மற்றும் இந்தோனேசிய தரைப்படையின் கொபாசஸ் சிறப்பு படை ஆகியவை கலந்து கொண்டன.
இன்று சிஜான்தூங் சிறப்புப்படை தளத்தில் நடைபெற்ற நிறைவு விழா நிகழ்ச்சியில் இந்தோனேசியாவுக்கான இந்திய தூதர் சந்தீப் சக்கரவர்த்தி, இந்தோனேசியாவுக்கான இந்திய பாதுகாப்பு துறை பிரதிநிதி கேப்டன் சிவக்குமார், மற்றும் இந்தோனேசியா ராணுவத்தின் சார்பில் கர்னல் ஜே எஸ் ஆலிங் ஆகியோர் கலந்து கொண்டனர் பின்னர் இரு தரப்பினரும் நினைவு பரிசுகளை பரிமாறிக் கொண்டனர் இந்த கருடா சக்தி சிறப்புப்படை பயிற்சிகளில் இந்திய தரப்பின் சார்பில் இந்த ஆண்டு தலா 25 வீரர்களும் இந்தோனேசியா தரப்பில் 40 வீரர்களும் பங்கு பெற்றது கூடுதல் சிறப்பு மிக்க தகவலாகும்.
இந்தோனேசியாவை பொருத்தவரையில் இந்தியாவின் தென்கிழக்கு ஆசியாவுக்கான கொள்கையில் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. இந்தோனேசியா மற்றும் இந்தியா இடையேயான இருதரப்பு உறவுகள் இந்த ஆண்டுடன் 75வது ஆண்டை தொட்டு வைர விழாவை காண்பதும் இந்த கருடா சக்தி பயிற்சிகள் கடந்த 2012 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் முதல் முறையாக துவங்கியதும் அதற்கு பிறகு சில காரணங்களால் இரண்டு ஆண்டுகள் நடைபெறாமல் இருந்ததும் தற்போது ஒன்பதாவது முறையாக இந்தோனேஷியாவில் இந்த பயிற்சிகள் நடைபெற்று முடிந்துள்ளதும் கூடுதல் சிறப்பு மிக்க தகவல் ஆகும்