அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களுக்கு இணையாகவும் சீன அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை விடவும் நவீனமாகவும் வடிவமைக்கப்படும் இந்திய அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் !!
சமீபத்தில் CCS – Cabinet Committee on Security எனப்படும் பாதுகாப்புக்கான அமைச்சரவை கமிட்டி இந்திய கடற்படைக்கு இரண்டு அணுசக்தியால் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களை தயாரிப்பதற்கான திட்டத்திற்கு அனுமதி வழங்கியதை நாம் அனைவரும் அறிவோம் இந்த இரண்டு அணுசக்தியால் இயங்கக்கூடிய அதிவேக தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களும் இந்தியாவின் கடற்படை பலத்தை பல மடங்கு அதிகரிக்கும் குறிப்பாக நீரடி திறன்களை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
முதலில் இந்த இரண்டு அணுசக்தியால் இயங்கக்கூடிய அதிவேக தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களும் தலா 6000 முதல் 7000 டன்கள் எடை கொண்டவையாக இருக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது ஒவ்வொரு நீர்மூழ்கி கப்பலும் தல 10,000 டன்கள் எடை கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது இதற்கிடையே இந்த நீர்மூழ்கி கப்பல்கள் பற்றி மேலும் சுவாரஸ்யமான சில தகவல்கள் வெளியாகி உள்ளன அதாவது இவை அமெரிக்காவின் அணுசக்தியால் இயங்கும் அதிவேக தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களுக்கு இணையானதாகவும் அதே நேரத்தில் சீனாவின் அணுசக்தியால் இயங்கக்கூடிய அதிவேக தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களை விட நவீனமானதாகவும் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது அமெரிக்க கடற்படையின் விர்ஜீனியா ரக அணுசக்தியால் இயங்கக்கூடிய அதிவேக தாக்குதல் நீர் மூழ்கி கப்பல்கள் பிளாக் 5 இன் எடை 10,200 டன்கள் ஆகும், இந்த வகை நீர்மூழ்கி கப்பல்கள் உலகின் மிகப்பெரிய மற்றும் அதிநவீனமான அணுசக்தியால் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களில் பிரதானமானவை ஆகும் இந்திய கடற்படைக்காக தயாரிக்கப்பட உள்ள இந்த இரண்டு புதிய அணுசக்தியால் இயங்கக்கூடிய அதி வேக தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களும் அளவிலும் சரி நவீன தொழில்நுட்பத்திலும் சரி விர்ஜீனியா ரக அணுசக்தியால் இயங்கும் அதிவேக தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களுக்கு இணையானதாக இருக்கும் என கூறப்படுகிறது.
அதே நேரத்தில் சீன கடற்படையில் பயன்பாட்டில் உள்ள Type 093 Shang ஷாங் ரக அணுசக்தியால் இயங்கும் அதிவேக தாக்குதல் நீர் மூழ்கி கப்பல்கள் வெறுமனே 6400 டன்கள் மட்டுமே எடை கொண்டவை ஆகும் இந்திய அணு சக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்கள் 10,000 டன்கள் எடை கொண்டவை ஆகும் அந்த வகையில் இந்திய நீர்முழ்கி கப்பல்கள் சீன நீர் மூழ்கி கப்பல்களை விடவும் அளவில் ஏறத்தாழ 40 சதவிகிதம் பெரியவை ஆகும் இதன் காரணமாக இந்திய நீர் மூழ்கி கப்பல்களில் அதிக ஆயுதங்கள் சுமக்க முடியும் என்பதும் அதிக நாட்கள் கடலுக்கு அடியில் தொடர்ந்து பயணிக்க முடியும் என்பதும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
தற்போது முதல் கட்டமாக இரண்டு அணுசக்தியால் இயங்கக்கூடிய அதிவேக தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களுக்கு தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது இனியும் இரண்டு கட்டங்களாக மேலும் இத்தகைய நான்கு நீர்மூழ்கி கப்பல்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது அந்த வகையில் இந்திய கடற்படையில் இத்தகைய ஆறு நீர்மூழ்கி கப்பல்கள் எதிர்காலத்தில் சேவையில் இருக்கும் இந்த ஆறு அணுசக்தியால் இயங்கக்கூடிய அதிவேக தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களும் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் இந்திய கடற்படையின் பலத்தை மிகப்பெரிய அளவில் அதிகரித்து இந்திய கடற்படையின் சக்தியை உறுதிப்படுத்தும்.
மேலும் இத்தகைய நீர்மூழ்கி கப்பல்களின் சிறப்புகள் என்னவெனில் இவற்றில் VPT – Vertical Payload Tubes எனப்படும் செங்குத்தாக ஏவுகணைகளை ஏவும் ஏவுகுழாய்கள் இருக்கும் இத்தகைய எத்தனை ஏவு குழாய்கள் ஒரு நீர் மூழ்கி கப்பலில் இருக்கும் என்பது பற்றிய தகவல்கள் இல்லை ஆனால் ஒரே ஏவுகுழாயில் நிர்பய் போன்ற 4 முதல் 6 சப்சானிக் குரூஸ் ஏவுகணைகள் இருக்கும் இல்லையெனில் ஒரு பிரம்மாஸ் – 2 அல்லது ஒரு ஹைப்பர்சானிக் ஏவுகணை இருக்கும் என கூறப்படுகிறது இது தவிர கப்பல் எதிர்ப்பு மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான கனரக நீரடி கணைகளும் இந்தக் கப்பல்களில் இருக்கும்.
இப்படி பல்வேறு அதிநவீன ஆயுதங்களை இந்தக் கப்பல் சுமக்கும் அதே நேரத்தில் இந்த கப்பலின் ஸ்டெல்த் திறன்களை அதிகரிக்கும் விதமாக ஒரு அதிநவீன ஒலி அலைகள் உருவாகாத வகையிலான ஸ்டெல்த் தொழில்நுட்பம் இந்த வகை நீர்மூழ்கி கப்பல்களில் உட்பகுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த நீர் மூழ்கி கப்பல்கள் எதிரிகளுக்கு தெரியாமல் மிக அருகில் சென்று எதிரிகளின் தடுப்பு அமைப்புகளால் தடுக்க முடியாத அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்தி எதிரி இலக்குகளை வெற்றிகரமாக தாக்கி அழிக்க முடியும் அந்த வகையில் இந்த நீர்மூழ்கி கப்பல்கள் இந்திய கடற்படையின் பிரதான அஸ்திரமாக அமையும் என்றால் மிகையாகாது.