மூன்றாவது இந்திய ஆஸ்திரேலிய தரைப்படைகள் இடையேயான ஆஸ்ட்ராஹிந்த் கூட்டுப் போர் பயிற்சிகள் துவக்கம் !!

கடந்த நவம்பர் எட்டாம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் அமைந்துள்ள இந்திய தரைப்படையின் வெளிநாட்டு பயிற்சி மையத்தில் மூன்றாவது முறையாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தரைப்படைகள் இடையே நடைபெறும் வருடாந்திர கூட்டு போர் பயிற்சியான AUSTRAHIND – 2024 ஆஸ்ட்ரா ஹிந்து 2024 துவங்கி நடைபெற்று வருகிறது வருகிற 21 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த இரு தரப்பு கூட்டு போர் பயிற்சிகள் இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் கூட்டு ராணுவ நடவடிக்கை திறன்களை வளர்த்துக் கொள்வது ஆகியவற்றை வெளிப்படுத்தும் கூட்டு ஒத்துழைப்பு முயற்சி ஆகும்.

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல்முறையாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தரைப்படைகள் இடையேயான முதலாவது ஆஸ்ட்ரா ஹிந்து கூட்டு போ பயிற்சிகள் ராஜஸ்தான் மாநிலத்தில் துவங்கி நடைபெற்றன இதற்குப் பிறகு கடந்த ஆண்டு அதாவது 2023 ஆம் ஆண்டு இந்த இரு தரப்பு கூட்டு ராணுவ பயிற்சிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றன இந்த ஆண்டு மீண்டும் இந்தியாவில் நடைபெற்று வருகிறது இந்த கூட்டு ராணுவ பயிற்சியில் இந்திய தரைப்படையின் சார்பில் டோக்ரா ரெஜிமென்ட் மற்றும் இந்திய விமானப்படையின் கருட் கமாண்டோ சிறப்பு படையை சேர்ந்த 140 வீரர்களும், ஆஸ்திரேலியா தரைப்படை சார்பில் பத்தாவது ப்ரிகேடை சேர்ந்த 13-வது லைட் ஹார்ஸ் ரெடிமெண்ட்டை சேர்ந்த 120 வீரர்களும் கலந்து கொள்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஏழாவது ஷரத்தின் விதிமுறைகள் படி நடைபெறும் இந்த இரு தரப்பு கூட்டு ராணுவ பயிற்சிகளில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் தரைப்படை வீரர்கள் சண்டைக்கு பக்குவப்படுதல் மற்றும் முலோபாய பயிற்சிகளை முதல் கட்டத்தில் மேற்கொள்கின்றனர் இரண்டாவது கட்டத்தில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், தேடி அழித்தல் நடவடிக்கைகள், ஹெலிகாப்டர் இறங்கு தளங்களை கைப்பற்றுதல், ட்ரோன்களை இயக்குதல் மற்றும் எதிரி டிரோன்களை முடக்குதல் மற்றும் அழித்தல் ஆகிய நடவடிக்கைகள் மற்றும் கூட்டு ராணுவ நடவடிக்கை மையத்தை அமைத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்புகள் சமீப காலமாக மிகவும் வலுவடைந்து வருகின்றன, அஸ்ட்ரா ஹிந்து இருதரப்பு ராணுவ பயிற்சிகள் தவிர ஆஸ்திரேலியா விமானப்படை நடத்தும் பிட்ச் ப்ளாக் கூட்டு பயிற்சிகளில் இந்திய விமானப்படை பங்கு பெறுகிறது, அதுபோல இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கடற்படைகள் இடையேயான ஆசின்டெக்ஸ் கூட்டுப் போர் பயிற்சியும் நடைபெற்று வருகிறது இது தவிர 2+2 பேச்சுவார்த்தைகள் அதாவது இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் இடையேயான கூட்டு பேச்சுவார்த்தைகள், கொள்கை விவாதங்கள் ஆகியவையும் நடத்தப்படுவது மிக குறிப்பிடத்தக்க விஷயமாகும்.