திங்கட்கிழமை அன்று அதாவது நவம்பர் நான்காம் தேதி இந்தியா மற்றும் அல்ஜீரியா இடையே பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது இதில் இந்தியா சார்பில் இந்தியாவின் கூட்டுப்படை தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் மற்றும் அல்ஜீரியா சார்பில் அல்ஜீரியா தரைப்படையின் தலைமை தளபதி சயீத் சானெக்ரிஹா ஆகியோர் கையெழுத்திட்டனர் இந்திய கூட்டுப்படை தலைமை தளபதி ஜெனரல் அனில் சௌகான் அரசு முறை பயணமாக தற்போது அல்ஜீரியா சென்றுள்ளதும் இந்தப் பயணத்தில் தான் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
வடக்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவுக்கு இந்தியாவின் முப்படை தலைமை தளபதி அல்லது கூட்டுப்படை தலைமை தளபதி ஜெனரல் அணில் சவுகான் கடந்த அக்டோபர் 31 முதல் நவம்பர் 4ஆம் தேதி வரையிலான நாட்களில் ஐந்து நாள் அரசு முறை அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணமாக சென்றுள்ளார் அவர் தற்போது தனது பயணத்தை முடித்துக் கொண்டு தாய்நாடு திரும்பி உள்ளார், இந்த சுற்றுப்பயணம் பற்றி இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்தியா அல்ஜீரியா இடையிலான உறவுகளை மேம்படுத்தும் விதமாகவும் ஏற்கனவே வளர்ச்சி அடைந்து வரும் பாதுகாப்பு தொழில்நுட்பம் வர்த்தகம் மற்றும் கல்வி ஆகியவை சார்ந்த இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் அதிகப்படுத்தும் நோக்கத்துடனும் இந்த பயணம் அமைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெனரல் அணில் சவுஹானுடைய பயணம் அந்நாட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத மற்றும் மிக முக்கியமான நிகழ்வான அல்ஜீரிய புரட்சியின் 70 ஆவது ஆண்டு கொண்டாட்டம் மற்றும் அதையொட்டிய ராணுவ அணிவகுப்பு ஆகியவற்றை ஒட்டி அமைந்துள்ளது அங்கு ஜெனரல் அனில் சவுகான் அல்ஜீரிய ராணுவத்தின் உயர்மட்ட போர்க்கல்லூரியின் இயக்குனர் மற்றும் அல்ஜீரிய மக்கள் தேசிய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் அப்போது அவர் இரு நாடுகளுக்கு இடையேயான வரலாற்று ரீதியான உறவுகள் ஒத்த கொள்கைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இருதரப்பு உறவுகளை சுட்டிக்காட்டினார் மேலும் அவர் ஒரு நாட்டின் உலகளாவிய பார்வை அந்நாட்டின் புவியியல் மற்றும் வரலாற்று அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டது எனவும் பேசினார்.
மேலும் அவர் பேசும் போது இந்தியா எப்போதும் உலக பிரச்சினைகளில் சுமுகமான தீர்வை தான் வலியுறுத்தியும் அத்தகைய தீர்வுகளுக்கு ஆதரவளித்து வருவதாகவும் இன்றைக்கு சிக்கலாகி வரும் உலகளாவிய புவிசார் அரசியல் சூழலில் இந்தியா தனது பொறுப்பையும் தனது நோக்கங்களையும் நன்கு உணர்ந்து ஒட்டுமொத்த உலகத்திற்குமான ஒரு நம்பத் தகுந்த பங்காளியாக இருப்பதாகவும் மேலும் இந்தியாவில் அல்ஜீரிய ராணுவத்தின் பிரிவு அல்ஜீரியாவில் இந்திய ராணுவத்தின் பிரிவு ஆகியவை துவங்கப்பட்டதை வரவேற்பதாகவும் கூறினார்.
இது தவிர இந்திய முப்படை தலைமை தளபதி ஜெனரல் அணில் சௌஹான் பேசும்போது இந்திய ராணுவ படைகள் மிகப்பெரிய அளவில் நவீன மயமாக்கல் திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் அதில் தங்களுக்கு கிடைத்துள்ள அனுபவங்களை அல்ஜீரிய ராணுவத்துடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாகவும் அதற்கு தயாராக உள்ளதாகவும் மேலும் மேக் இன் இந்தியா திட்டம் மற்றும் மேக் ஃபார் த வேர்ல்ட் ஆகிய திட்டங்களின் கீழ் வேகமாக அதிகரித்து வரும் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு தளவாட மற்றும் தொழில்நுட்ப உற்பத்தி திறன்களையும் அவர் சுட்டிக் காட்டினார்.
இவரது இந்த சுற்றுப்பயணம் சமீபத்தில் இந்திய ஜனாதிபதி திரவுபதி மூர்மூ அவர்கள் அல்ஜீரியா நாட்டிற்கு அரசு முறை சுற்றுப்பயணமாக சென்றதைப் பின் தொடர்ந்து நடைபெற்று உள்ளதை சுட்டிக்காட்டி பாதுகாப்பு அமைச்சகம் ராஜாங்க ராணுவ மற்றும் முலோபாய ஒத்துழைப்பை அதிகரிப்பதில் காணப்படும் இருதரப்பு உறுதியை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும், கையெழுத்தாகியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்த மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு அடுத்த கட்டத்திற்கு செல்லும் எனவும் இருதரப்பு புரிதலை வலுப்படுத்தி புவிசார் அரசியல் நோக்கங்களை ஒருங்கிணைத்து பல்வேறு துறைகளில் நீண்ட கால ஒத்துழைப்புக்கு வழிவகுக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது கூடுதல் சிறப்பு மிக்க தகவலாகும்