ஆப்பரேஷன் ட்யூட்ஸ்லேண்ட் என்ற பெயரில் ஜெர்மனி சுமார் 8 லட்சம் வீரர்கள் மற்றும் 2 லட்சம் வாகனங்களுடன் மூன்றாவது உலகப்போருக்கு தயாராவதற்கான ராணுவ நடவடிக்கை திட்டம் பற்றிய ரகசிய ஆவணம் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது அதாவது ரஷ்யாவின் உக்ரைன் மீதான படை எடுப்பு பல நாடுகள் கலந்து கொள்ளும் பலதரப்பு போராக மாறும் என்ற அச்சத்தின் அடிப்படையில் ஜெர்மனி தனது தேசிய பாதுகாப்பையும் ஐரோப்பாவின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தத் திட்டத்தை தயார் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வடகொரியா ரஷ்ய படைகளுடன் இணைந்து உக்ரைனில் போரிடுவதற்காக பத்தாயிரத்திற்கும் அதிகமான வீரர்களை அனுப்பி வைத்துள்ளதும் சமீபத்தில் பின்லாந்து உள்ளிட்ட சில நாடுகள் விரைவில் உக்கிரையின் போர் உக்கிரனை தாண்டி தங்கள் நாடுகளையும் பாதிக்கும் அபாயம் இருப்பதாக கருதி தங்கள் நாட்டு மக்களை போருக்கு ஆயத்தமாக இருக்கும்படி அறிவிக்கைகளை வெளியிட்டதும் அந்த வரிசையில் தற்போது ஜெர்மனியும் இணைந்து பெரும்பாலான ஜெர்மன் அரசியல் தலைவர்கள் இடையே ஒப்புதல் பெற்று இந்த ஆயிரம் பக்க போர் நடவடிக்கை சார்ந்த ஆவணத்தை தயார் செய்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த ஆவணங்களில் உள்ள முக்கிய தகவல்களின்படி சுமார் 8 லட்சம் நேட்டோ ராணுவ படையினர் மற்றும் 2 லட்சம் நேட்டோ ராணுவ கவச வாகனங்கள் ஆகியவற்றை களம் இறக்குவது, முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களுக்கு ராணுவ பாதுகாப்பு அளிப்பது, போர்க்காலத்தில் தேவையான எரிபொருள் உணவுப் பொருட்கள் மருந்து பொருட்கள் ஆகியவற்றை சேகரிப்பது மற்றும் அதன் மூலம் மக்களுக்கும் ராணுவத்தினருக்கும் அவை தடங்கலின்றி கிடைக்க உறுதி செய்வது போன்ற நடவடிக்கைகள் அதேபோல ஹம்பர்க் நகரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் தொழில்துறையினருக்கு போர்க்காலத்தில் அவர்களது தயாரிப்பு திறன்கள் தடை படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் தங்களது தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் டீசல் ஜெனரேட்டர்கள் அல்லது காற்றாலைகள் ஆகியவற்றை நிறுவி மின்சார சப்ளையை உறுதி செய்வது போன்றவை அறிவுறுத்தப்பட்டுள்ளன.
அதேபோல குறிப்பாக போர்க்காலத்தில் ஜெர்மனியில் இந்த சப்ளைகள் தடைபடாமல் கிடைப்பதை உறுதி செய்வதற்கு லாரிகள் மிக முக்கிய பங்காற்றுகின்றன தற்போது ஜெர்மனியில் உள்ள 70% லாரி ஓட்டுநர்கள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர் ஆகவே ஒவ்வொரு நூறு ஜெர்மனிய பணியாளர்களுக்கும் ஐந்து ஜெர்மானிய லாரி ஓட்டுநர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென லெப்ட் நன் கர்னல் ஜோர்ன் ப்ளிஷ்கே வலியுறுத்தியுள்ளார் காரணம் போர் ஏற்பட்டால் இந்த 70% லாரி ஓட்டுநர்களும் ஜெர்மனியில் தொடர்ந்து இருப்பது கேள்விக்குறியாகும் அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் இந்த சப்ளைகள் முற்றிலுமாக முடங்கிப் போகும் அது ஜெர்மனியை ராணுவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும், அத்தியாவசிய பொருட்களின் சப்ளைகள் ரீதியாகவும் மிகக் கடுமையாக பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெர்மன் வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் மால்டே ஹெயின் பேசும்போது போர்க்காலத்தில் ஜெர்மனிக்கு குறிப்பாக அதன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பிற்கு ஒரு வலுவான மற்றும் மிகுந்த தயார்நிலை கொண்ட பொருளாதாரம் எந்த அளவுக்கு தேவை என்பது பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என கூறியுள்ளார் கடந்த ஒரு வருட காலமாக ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சகம் இந்தத் திட்டத்தை தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது பெர்லின் நகரில் அமைந்துள்ள ஜெர்மன் ராணுவத்தில் உள்நாட்டு பாதுகாப்பு கட்டளையகம் போர் முளூம் பட்சத்தில் தனது நாட்டின் எல்லை வழியாக மேல் குறிப்பிட்டபடி நேட்டோ ராணுவ வீரர்கள் மற்றும் வாகனங்கள் ஆகியவற்றை நகர்த்துவது பற்றிய திட்டமும் இதில் உள்ளடங்கும் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே இந்தப் போர் அணு ஆயுதப் போருக்கும் வழி வகுக்கும் என்ற அச்சமும் ஒரு பக்கம் எழுந்துள்ளது இதற்கு பெரும்பாலும் வாய்ப்பில்லை என்றாலும் கூட இது பற்றிய சிறிய ஒரு அச்சம் தற்போது எழுந்துள்ளது காரணம் உக்கிரன் அமெரிக்க மற்றும் இங்கிலாந்து தயாரிப்பு தொலைதூர தாக்குதல் ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யா எல்லைக்குள் தாக்குதல் நடத்துவதும் அதற்கு பதிலாக இத்தகைய தாக்குதல்களை நடத்தும் உக்கிரன் மற்றும் இத்தகைய தாக்குதல்களுக்கு ஆதரவளிக்கும் மேற்கத்திய நாடுகளின் மீதும் ரஷ்யா தாக்குதல் நடத்தும் எனவும் இனி தேவைப்பட்டால் சிறிய அணுகுண்டுகளையும் பயன்படுத்தும் என கொள்கை மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டதும் அமெரிக்காவும் அத்தகைய சூழல் ஏற்பட்டால் சந்திப்பதற்கு தயார் என அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்