EURODRONE எனப்படும் ஐரோப்பிய ஆளில்லா வானூர்தி திட்டத்தில் இணைவதற்கான இந்தியாவின் கோரிக்கையை தொடர்ந்து ஜெர்மனி இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது, இந்தத் திட்டத்தில் ஜெர்மனி பிரான்ஸ் இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து செயல்படுகின்றன இந்த நாடுகளின் பிரதிநிதிகளாக AIRBUS ஏர்பஸ், Dassault Aviation டஸால்ட் ஏவியேஷன் மற்றும் Leonardo லியனார்டோ ஆகிய மூன்று நிறுவனங்கள் வடிவமைப்பு மேம்பாடு மற்றும் தயாரிப்பு ஆகிய பணிகளில் ஈடுபடுகின்றன.
இந்தத் திட்டத்தின் படி ஒரு MALE RPAS – Medium Altitude Long Endurance Remotely Piloted Aircraft System அதாவது நடுத்தர உயரத்தில் மிக நீண்ட நேரம் பறக்கக்கூடிய ஆளில்லா கண்காணிப்பு விமானம் தயாரிக்கப்பட உள்ளது இது ஒரு இரட்டை எஞ்சின் வானூர்தி ஆகும் வருகிற 2027 ஆம் ஆண்டு இதனுடைய முதல் சோதனை மொத்தம் நடைபெறும் எனவும் 2028 ஆம் ஆண்டு படைகளில் இணைக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன, இந்த ஆளில்லா வானூர்தி இந்தியா சமீபத்தில் அமெரிக்காவிடமிருந்து வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ள MQ-9 ஆளில்லா வானூர்திகளை ஒப்பிடுகையில் மூன்றில் ஒரு பங்கு அளவில் பெரியதும் இரண்டு மடங்கு எடை கூடியதும் (11000 கிலோ) ஆகும்.
இந்த யூரோ ட்ரோன் ஆளில்லா வானூர்தியை கண்காணிப்பு, தகவல் சேகரிப்பு, உளவு நடவடிக்கைகள் மற்றும் தரைப்படை பாதுகாப்பு அதாவது தரை தாக்குதல் போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தும் நோக்கத்தோடு வடிவமைத்துள்ளனர், இந்த வானூர்தியில் அமெரிக்க ஆளில்லா வானூர்திகளைப் போல ஒற்றை எஞ்சின் அல்லாமல் இரட்டை எஞ்சின் இருக்க வேண்டும் என்பது ஜெர்மனியின் நிபந்தனையாக இருந்தது காரணம் இவற்றை உள்நாட்டு கண்காணிப்பு பணிகளில் பயன்படுத்தும் போது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒரு இஞ்சின் செயல் இழந்தாலும் மற்றொரு எஞ்சின் மூலம் பொதுமக்கள் மீது விழாமல் தொடர்ந்து இயக்க முடியும் என்பதாகும். அதே நேரத்தில் பிரான்ஸ் இந்த ஆளில்லா வானூர்தியை ஆப்பிரிக்காவில் சாஹெல் போன்ற பிரச்சனை மிகுந்த பயங்கரவாதிகளின் நடவடிக்கை மிகுந்த பகுதிகளில் பயன்படுத்த நினைக்கிறது ஆனால் இதன் அளவும் எடையும் பிரான்சுக்கு கவலை அளிக்கிறது, இந்தத் திட்டத்தை பிரான்ஸ் சார்பில் மேற்பார்வையிடும் பிரெஞ்சு அரசியல்வாதி கிறிஸ்டியன் கேம்போன் அதிக பருமன் பிரச்சனையை கொண்டுள்ளதாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்,
இந்த ஆளில்லா வானூர்தி அதிகபட்சமாக மணிக்கு 500 கிலோ மீட்டர் வேகத்தில் தொடர்ந்து 18 முதல் 40 மணி நேரம் வரை ஏறத்தாழ 14 கிலோ மீட்டர் உயரம் வரை பறக்கும் ஆற்றல் கொண்டதாகும் மேலும் இதனால் சுமார் 2300 கிலோ எடையிலான ஆயுதங்கள் மற்றும் கருவிகளை சுமந்து பறக்க முடியும் இதனுடைய இரண்டு என்ஜின்களும் ஜெர்மனியின் MT-Propeller Entwicklung GmbH நிறுவனத்தால் தயாரிக்கப்படுபவை ஆகும், இந்த ஆளில்லா வானூர்தியில் ஆயுதங்களாக GBU – 49 Enhanced Paveway 2 மேம்படுத்தப்பட்ட லேசர் வழிகாட்டப்பட்ட குண்டுகள், Brimstone ப்ரிம்ஸ்டோன் தரை தாக்குதல் ஏவுகணைகள் மற்றும் Akeron LP ஆக்கரான் எல்.பி தரை டாங்கி எதிர்ப்பு மற்றும் வான் தாக்குதல் ஏவுகணைகள் பயன்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா ஏற்கனவே தனது ராணுவத்தின் கண்காணிப்பு திறன்களை அதிகரிக்கும் விதமாக MALE நடுத்தர உயரத்தில் நீண்ட நேரம் தொடர்ச்சியாக பறக்கும் திறன் கொண்ட ஆளில்லா விமானங்களை வாங்குவதற்கு திட்டமிட்டு வரும் நிலையில் இந்தியாவின் அதானி பாதுகாப்பு மற்றும் வான்வெளி நிறுவனம் தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்த அடிப்படையில் இஸ்ரேலிடம் இருந்து தொழில்நுட்பத்தை பெற்று இந்தியாவில் தயாரிக்கும் திருஷ்டி-10 நடுத்தர வீரத்தில் நீண்ட நேரம் பறக்கும் ஆளில்லா விமானங்களும் ராணுவத்திற்கு போதிய திருப்தி அளிக்காத நிலையில் ஜெர்மனி இந்த யூரோ ட்ரோன் திட்டத்தில் இணைவதற்கு இந்தியாவுக்கு அழைப்பு கொடுத்துள்ளது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது காரணம் எதிர்காலத்தில் இந்தியாவின் தேவையை இந்த திட்டம் சந்திப்பதற்கு அதிக அளவில் வாய்ப்புகள் எழுந்துள்ளன.
அதாவது தற்போதைக்கு இந்தியா பார்வையாளராக இந்தத் திட்டத்தில் இணைவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது ஒருவேளை இந்தியாவுக்கு இந்த ட்ரோன் விற்பனை செய்யப்படாவிட்டாலும் கூட பார்வையாளர் என்ற முறையில் இந்த ஆளில்லா வானூர்தியின் திறன்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் பற்றிய தகவல்கள் பரிமாறப்படும் அதன் அடிப்படையில் எதிர்காலத்தில் இந்தியா முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே இத்தகைய நடுத்தர உயரத்தில் நீண்ட நேரம் பறக்கும் ஆளில்லா வானூர்தி ஒன்றை தயாரிக்கும் திட்டத்தில் ஈடுபட்டால் அதற்கும் யூரோ டிரோன் திட்டத்தின் அனுபவம் உபயோகப்படும் என பாதுகாப்பு நிபுணர்களால் கூறப்படுகிறது.
இந்த அறிவிப்பு சமீபத்தில் ஜெர்மன் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் இந்தியா வந்தபோது நடைபெற்ற ஏழாவது இந்திய ஜெர்மன் அரசுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையில் வெளியானது, மேலும் இரு தரப்பு அரசுகளும் பாதுகாப்பு துறையில் இரு நாடுகளின் பாதுகாப்பு தொழில்துறை மட்டத்திலான ஒத்துழைப்பை அதிகப்படுத்தவும் தொழில்நுட்பம் மற்றும் ராணுவ தளவாட வடிவமைப்பு மேம்பாடு மற்றும் தயாரிப்பு/ கூட்டு தயாரிப்பு ஆகியவற்றில் ஒருங்கிணைப்பை அதிகரிக்கவும் உறுதி செய்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்