அர்மேனியாவிற்கு PINAKA MBRL Multi Barrel Rocket Launcher system பினாகா பலக்குழல் ராக்கெட் லாஞ்சர் அமைப்புகளை இந்தியா ஏற்றுமதி செய்த பிறகு தற்போது ஐரோப்பாவின் மிக முக்கியமான நாடும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மிக முக்கியமான உறுப்பு நாடும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவ கூட்டமைப்பின் மிக முக்கியமான உறுப்பு நாடு ஆன பிரான்ஸ் தற்போது இந்தியாவின் மேல் குறிப்பிடப்பட்ட பினாகா பல குழல் ராக்கெட் லாஞ்சர் அமைப்புகளை வாங்குவதற்கான சோதனைகளை நடத்தி வருவதாக மூத்த பிரெஞ்சு ராணுவ அதிகாரி ஒருவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
பிரெஞ்சு தரைப்படையின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான பிரிகேடியர் ஜெனரல். ஸ்டெபான் ரிச்சோ இந்தியாவை சேர்ந்த ANI ஊடக நிறுவனத்திற்கு அளித்த பிரத்தியேக பேட்டியின் போது தங்கள் ராணுவத்திற்கு இத்தகைய பல குழல் ராக்கெட் லாஞ்சர் ஏவும் அமைப்புகள் தேவைப்படுவதாகவும் அந்த வகையில் பல்வேறு முன்னணி ஆயுத தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நாடுகள் தங்களுக்கு அளிக்க முன்வந்துள்ள அமைப்புகளை சோதனை செய்து வருவதாகவும் இந்தியாவும் அத்தகைய ஒரு நாடு எனவும் ஆகவே பினாகா பல குழல் ராக்கெட் லாஞ்சர் ஏகும் அமைப்புகளையும் சோதனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரெஞ்சு தரைப்படையை சேர்ந்த இந்த இரண்டு நட்சத்திர அந்தஸ்து அதிகாரி இது தொடர்பான இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதற்காக தற்போது இந்தியா வந்துள்ளார் மேலும் அவர் பேசும் போது இந்தியாவும் பிரான்சும் வர்த்தக உறவுகளை தாண்டிய ஆழமான உறவுகளைக் கொண்டுள்ளதாகவும் இரு நாடுகளும் மேலும் தங்களுக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை அதிகப்படுத்த விரும்புவதாகவும் இதுவே இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான பொதுவான எதிர்கால நோக்கமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மேல் குறிப்பிடப்பட்ட பினாகா பல குழல் ராக்கெட் லாஞ்சர் அமைப்புகள் இந்திய அரசுக்கு சொந்தமான இந்தியாவின் முன்னணி மற்றும் பிரதான ஆயுத வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு அமைப்பான DRDO Defence Research & Development Organisation பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு தற்போது பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டு தயாரிப்பு திட்டத்தின் கீழ் இந்தியாவை சேர்ந்த தனியார் துறை பாதுகாப்பு தொழில்துறை நிறுவனங்களான டாட்டா அட்வான்ஸ்டு சிஸ்டம் லிமிடெட் TASL Tata Advanced Systems Limited, Larsen & Toubro எல் அண்ட் டி என பிரபலமாக அறியப்படும் லார்சன் மற்றும் டூப்ரோ, சோலார் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அரசுக்கு சொந்தமான பொதுத்துறை பாதுகாப்பு தொழில்துறை நிறுவனமான ஆயுத தொழிற்சாலை வாரியம் ஆகியவை இவற்றை தயாரிக்கின்றன.
சுமார் 75 கிலோ மீட்டர் தூரம் சென்று இலக்குகளை தாக்கி அழிக்கும் இந்த ஆயுத அமைப்பில் பல்வேறு ரகங்கள் உள்ளன, ஏற்கனவே ஆர்மீனியா இவற்றை வாங்கியுள்ள நிலையில் மேலும் பல நாடுகள் இந்த ஆயுத அமைப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன இந்தியாவும் இந்த ஆயுத அமைப்பை இன்னும் தொலைதூர தாக்குதலுக்கு ஏற்றவாறு நவீனப்படுத்தி மேம்படுத்தி வருகிறது. இந்தியா தற்போது சர்வதேச ஆயுத சந்தையில் தனது பங்களிப்பை அதிகப்படுத்த தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதேபோல கடந்த 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது வரை மூன்று மடங்கு ஆயுத ஏற்றுமதி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த ஆண்டு துவக்கத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி ஜெனரல் அணில் சவுகான் பிரான்ஸ் நாட்டிற்கு அதிகாரப்பூர்வ சுற்று பயணமாக சென்ற போது இந்த ஆயுத அமைப்பின் விற்பனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார், மேலே குறிப்பிடப்பட்ட பிரெஞ்சு தரைப்படை மூத்த அதிகாரி பேசும்போது இரு நாடுகளும் அதிநவீன தொழில்நுட்பங்களை பரிமாறிக் கொள்வதாகவும் அதற்கு மிக முக்கியமான உதாரணம் இந்தியாவிலேயே பிரான்ஸ் தயாரிப்பான ஸ்கார்பின் அதிநவீன நீர் மூழ்கி கப்பல்கள் இந்திய கடற்படைக்காக கட்டப்பட்டு வருவது ஆகியவற்றை சுட்டிக்காட்டினார்.
பிரான்ஸ் தரைப்படை தற்போது அமெரிக்க தயாரிப்பான M270 – A1 ரக பல குழல் ராக்கெட் லாஞ்சர் அமைப்புகளை பயன்படுத்தி வருவதும் இவற்றை வருகிற 2027 ஆம் ஆண்டு முதல் படையிலிருந்து விலக்கி புதிய பல குழல் ராக்கெட் லாஞ்சர் அமைப்புகளை படையில் சேர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான பணிகளை தற்போது தொடங்கியுள்ளதாகவும் அதில் இந்தியாவின் பினாக பலக்குழல் ராக்கெட் லாஞ்சர் அமைப்புகளும் பிரான்ஸ் தரைப்படையால் பரிசீலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது .
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரான்ஸ் தான் இந்தியாவிடம் இருந்து அதிக அளவில் ஆயுத இறக்குமதி செய்யும் நாடு என்பது மற்றும் ஒரு மிக முக்கியமான சிறப்புமிக்க தகவலாகும். இந்த ஆண்டு 25 ஆவது முறையாக இந்தியா மற்றும் பிரான்ஸ் தரை படைகள் இடையே நடைபெற உள்ள சக்தி கூட்டு போர்ப்ப பயிற்சிகளுக்கு மிக வலுவான படையணியை ஃபிரான்ஸ் இந்தியாவிற்கு அனுப்பி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.