பாகிஸ்தான் பாதுகாப்பு படைகளை நம்ப வேண்டாம் சீனாவில் சீன அதிபருக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு !!

சமீப காலமாக பாகிஸ்தானில் உள்ள சீன முதலீடுகள் சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நிறுவனங்கள் மற்றும் அங்கு பணியாற்றும் சீனர்கள் ஆகியோர் மீது நடைபெறும் தாக்குதல்கள் காரணமாக சீனாவில் சீனா அதிபர் சி ஜின்பிங்குக்கு எதிராக எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன குறிப்பாக சீனர்களின் பாதுகாப்பு மற்றும் சீன முதலீடுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பாகிஸ்தான் படைகளை நம்ப வேண்டாம் என எதிர்ப்புக் குரல்கள் பரவலாக எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

குறிப்பாக சீன அதிபருக்கு எதிராக சீன தொழிலதிபர்கள் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களிடம் இருந்து இந்த விவகாரம் தொடர்பாக கடுமையான அழுத்தம் தரப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன பாகிஸ்தான் உடைய பஞ்சாப் மாநிலத்தில் தங்கி தொழில் நடத்தி வரும் சீன தொழிலதிபர் ஒருவர் கூறுகையில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் மீதான நம்பிக்கையை தாங்கள் இழந்து விட்டதாகவும் அதற்கு பதிலாக சீன படையினர் தங்களுக்கு பாதுகாப்பு அளித்தால் நன்றாக இருக்கும் எனவும் இதே நிலைமை தொடர்ந்தால் பாகிஸ்தானில் தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போய்விடும் எனவும் பல சீனர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறும் எண்ணத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அதேபோல பாகிஸ்தானில் தொழில் செய்து வரும் பல்வேறு சீன நிறுவனங்கள் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் மீது நம்பிக்கையே இழந்து விட்ட நிலையில் சீன பாதுகாப்பு நிபுணர்களிடம் உதவி கோரி கூறியுள்ளன அதாவது ஏதேனும் அசம்பாவித சூழல் ஏற்பட்டால் அவற்றை கையாள்வது, பணிக்கு வரும் பாகிஸ்தான் நாட்டவர்களின் பின்விவரங்களை சேகரிப்பது, உளவு தகவல்கள் சேகரிப்பது, தனியார் பாதுகாப்பு நிறுவனங்களை கையாள்வது போன்ற பணிகளை தங்களது நிறுவனங்களின் பாதுகாப்பிற்காக மேற்கொள்ள சில நிறுவனங்கள் கோரி வருகின்றன.

சீனா பாகிஸ்தானில் சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் என்ற திட்டத்தில் சுமார் 62 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பணத்தை முதலீடு செய்துள்ளது இது இந்திய மதிப்பில் 5 லட்சத்து 27 ஆயிரம் கோடி ரூபாயாகும், இந்த சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் சீன அதிபரின் கனவு திட்டமான பெல்ட் ரோடு திட்டத்தில் மிக முக்கிய அம்சமாகும் இந்த முதலீடுகள் மற்றும் இவற்றில் பணியாற்றும் சீனர்கள் ஆகியோரை பாகிஸ்தான் பிரிவினைவாதிகள் அவ்வப்போது தாக்கி வருகின்றனர் கடந்த மாதம் நடைபெற்ற தாக்குதலில் கூட இரண்டு சீன பொறியாளர்கள் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானுக்கும் இந்த திட்டம் மிக முக்கியமானது சீன முதலீடுகள் மற்றும் சீன பணியாளர்களை பாதுகாப்பதற்காக பாகிஸ்தான் 15000கும் அதிகமான பாதுகாப்பு படையினரை கொண்ட இரண்டு டிவிஷன்களை களம் இறக்கி உள்ளது இது தவிர மாநில காவல் துறைகளில் இருந்தும் வீரர்களை களமிறக்கி உள்ளது ஆனாலும் இது பாதுகாப்பை உறுதி செய்யவில்லை மேலும் இந்தப் பாதுகாப்புக்கு சீனா எவ்வித நிதி ஆதாரத்தையும் ஒதுக்கீடு செய்யவில்லை, சமீபத்தில் கூட இரண்டு சீன பணியாளர்கள் பாகிஸ்தான் காவலாளிகளாலேயே சுட்டுக் கொல்லப்பட்டது மேலும் நிலைமையை மோசமாக்கி உள்ளது.

பாகிஸ்தான் பாதுகாப்பு படைகளின் இந்த தோல்வியும் சீனாவின் பிரம்மாண்ட முதலீடு எதிர்கொள்ளும் ஆபத்து மற்றும் பாகிஸ்தானில் சீன பணியாளர்கள் சந்தித்து வரும் தாக்குதல்களும் சீனாவில் பாகிஸ்தானுக்கு சீன பாதுகாப்பு படைகளை அனுப்பி வைப்பதற்கான குரல்களை எழுப்பியுள்ளது. பாகிஸ்தானின் லாகூர் நகரத்தின் மெட்ரோ திட்டத்தில் பணியாற்றிய முன்னாள் சீன பாதுகாப்பு நிபுணர் ஸோ சாவ் பேசும்போது பாகிஸ்தானில் வெளிநாட்டு பாதுகாப்பு நிறுவனங்கள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சீன அரசு பாகிஸ்தானில் சீனர்களின் பாதுகாப்பை சீனர்கள் பார்த்துக் கொள்வதற்கு வழிகாட்டல்களை பிறப்பித்து இருந்தாலும் சீன அரசின் கட்டுப்பாடுகள் காரணமாகவும் சீன பாதுகாப்பு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இயங்குவதற்கு முட்டுக்கட்டைகள் உள்ளதாகவும் தற்போது பாகிஸ்தானில் உள்ள சீன நிறுவனங்கள் முக்கிய பகுதிகளில் சீன பாதுகாப்பு அதிகாரிகளை பணிய அமர்த்தி உள்ளதாகவும் அவர்களுக்கு கீழ் பாகிஸ்தான் காவலாளிகளை பணிய அமர்த்தி உள்ளதாகவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது