அமெரிக்காவின் 47 வது அதிபராக டோனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக தனி மெஜாரிட்டியுடன் தனிப்பட்ட முறையிலும் நாடாளுமன்றத்திலும் வெற்றி பெற்று மீண்டும் வெள்ளை மாளிகைக்கு திரும்புகிறார், உலகின் மிகவும் சக்தி வாய்ந்த நபர்களில் ஒருவராக கருதப்படும் அமெரிக்க அதிபர் பதவிக்கு நடைபெற்ற இந்த தேர்தலின் இந்த முடிவு ஒட்டுமொத்த உலகத்தாலும் குறிப்பாக மத்திய கிழக்கு ஐரோப்பா இந்தோ பசிபிக் பிராந்தியம் ஆகியவற்றை சேர்ந்த நாடுகளால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது தற்போது இந்த பகுதியை சேர்ந்த நாடுகளுக்கு இவரது வெற்றியை தொடர்ந்து காத்திருப்பது என்ன என்பது பற்றி பார்க்கலாம்.
முதலாவதாக ஐரோப்பாவில் உக்ரைனை பொறுத்தவரை அதிபர் ட்ரம்ப் குறைந்தபட்சம் போர்க்களம் முன்னணிகளில் போர் நிறுத்தத்தை உறுதி செய்வதற்கு தீவிர முயற்சிகளை எடுப்பார் என நம்பப்படுகிறது அது சாத்தியமானால் கடந்த 2014 ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைனிடமிருந்து கைப்பற்றி தனது நாட்டுடன் இணைத்த க்ரைமியா பகுதியையும், கடந்த 2022 ஆம் ஆண்டு உக்கிரையின் மீது படை எடுத்த பிறகு தற்போது வரை ரஷ்யா கைப்பற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் ரஷ்யாவுக்கு சொந்தமானதாக அங்கீகரிக்கப்பட்டு ஒரு நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது, மட்டுமின்றி ரஷ்ய அதிபர் புடினுடைய கோரிக்கையான உக்ரைன் நேட்டோவில் சேருவதை தவிர்ப்பதையும் அங்கீகரிக்க கூடும் எனவும் உக்ரைனுடைய ஐரோப்பிய நட்பு நாடுகளையும் இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு ஒப்பந்தத்தை இறுதி செய்யவும் வற்புறுத்துவார் ஏற்கனவே ட்ரம்பிற்கு நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் உள்ள ஐரோப்பிய நாடுகள் குறைவாக செலவு செய்வதில் மிகுந்த கோபமுண்டு ஆகவே மீண்டும் நேட்டோவில் இருந்து வெளியேறப் போவதாக மிரட்டி ஐரோப்பிய நாடுகளை பணிய வைக்கவும் அதிபர் ட்ரம்ப் முயற்சி செய்வார் என கருதப்படுகிறது.
மத்திய கிழக்கை பொறுத்தவரையில் அதிபர் ட்ரம்ப் ஏற்கனவே சவுதி அரேபியா இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் தீவிர ஆதரவாளராக கருதப்படுகிறார் மேலும் இதற்கு முந்தைய முறை பக்ரைன் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே ஆபிரகாம் ஒப்பந்தம் என்ற அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த காரணமாக அமைந்தார், இது மத்திய கிழக்கின் வரலாற்றில் யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்தது தற்போது லெபனான் காசா ஆகிய பகுதிகளில் தீவிர ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது, மட்டுமின்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூ ஹமாஸ் ஹிஸ்புல்லா ஏமனின் ஹூத்தி ஆகியவற்றை கூண்டோடு அழிக்கவும் ஈரானுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு ஈரானுடைய ராணுவ திறன்களை குறைக்கவும் திட்டமிட்டு வருகிறார் இதற்கிடையே இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரை தனது செயல்பாடுகளை விமர்சித்த காரணத்தால் பதவி நீக்கவும் செய்துள்ளார் ஆகவே இதன் மூலம் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவோ குறைக்கவும் போவதில்லை என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார்.
தொடர்ந்து அவர் லெபனானில் இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கைகளை தீவிர படுத்தவும் இஸ்ரேல் மீதான ஈரானுடைய தாக்குதலுக்கு மிக தீவிரமான பதிலடி கொடுக்கவும் ஈரானுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளார் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளது செயல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவுக்கு மேலும் தைரியத்தை கொடுக்கும் மேலும் இதன் மூலம் அதிபர் ட்ரம்ப் ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக மேலும் வலுவான நிலையை எட்ட உதவும் அதாவது மேலே குறிப்பிட்டபடி அமெரிக்கா ஏற்படுத்த நினைக்கும் உக்ரைன் ஒப்பந்தத்தை ரஷ்யாவும் ஏற்றுக் கொள்வதற்கு இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளை குறைப்பதை பகடை காயாக பயன்படுத்தி ரஷ்யா உக்ரைன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள அதிபர் ட்ரம்பால் வலியுறுத்த முடியும், ஈரான் உக்கிரேனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்கு தளவாடங்கள் மற்றும் ஆயுதங்களை அழித்து உதவி புரிவது குறிப்பிடத்தக்கது.
சீனாவை பொருத்தவரையில் அமெரிக்காவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைகளில் எந்த மாற்றமும் ஏற்படாது மாறாக அதிபர் ட்ரம்பின் முந்தைய ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் இந்த ஆட்சியிலும் தொடரும் என கருதப்படுகிறது இதில் மிகவும் ஆச்சரியத்தக்க விஷயம் என்னவென்றால் தற்போதைய அதிபர் பைடன் இதற்கு முன்பு அதிபராக ட்ரம்ப் இருந்தபோது சீனாவுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளை தொடர்ந்தார் தற்போது அதிபர் ட்ரம்ப் இந்தத் திட்டங்களையும் செயல்பாடுகளையும் மிகவும் தீவிர படுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது மேலும் பொருளாதாரத்தின் வணிகத்தையும் சீனாவுக்கு எதிராக ஆயுதங்களாக பயன்படுத்த முயற்சி செய்வார் எனவும் குறிப்பாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 60% வரியை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது, இது தவிர நேட்டோவை போல அதிபர் ட்ரம்ப் தைவான் ஜப்பான் தென் கொரியா பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுடனான பாதுகாப்பு உறவுகள் மற்றும் ஒப்பந்தங்களில் தீவிரமான உறுதியை வெளிப்படுத்த மாட்டார் என்பது பரவலான கருத்தாகும், ஏற்கனவே தென்கொரியா அமெரிக்காவை நம்ப முடியாது ஆகவே சொந்தமாக அணு ஆயுதங்களை தயாரிப்பது பற்றிய எண்ணங்களை வெளிப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
வடகொரியாவை பொறுத்தவரையில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் யாரும் எதிர்பார்க்காத முடிவுகளை எடுப்பவர் ஆவார் இதற்கு முன்பு ஜனாதிபதியாக பதவி வகித்த போது முதல் முறையாக வடகொரிய தலைவர் ஒருவரை சந்தித்த அமெரிக்க தலைவர் என்ற பெயரைப் பெற்றார் யாரும் எதிர்பார்க்காத வகையில் வடகொரிய அதிபர் கிம் ஜான் உன்னை சந்தித்து பேச்சுவார்த்தையும் நடத்தினார் ஆனால் மீண்டும் யாரும் எதிர்பார்க்காத வகையில் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் சோதனையை நடத்தியபோது வடகொரியாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்த இது கிட்டத்தட்ட ஒரு போர் ஏற்படும் சூழலை உருவாக்கியது ஒருபோதும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ரஷ்யா உடன் இணைந்து செயலாற்றும் அணு ஆயுத சக்தியாக வடகொரியா மாறுவதை ஏற்றுக்கொள்ள மாட்டார் ஒரு வகையில் சீனாவுக்கும் இது நல்லது காரணம் வடகொரியா மற்றும் ரஷ்யா இடையே அதிகரித்து வரும் பாதுகாப்பு உறவுகள் சீனாவுக்கு கவலையை அளித்துள்ளன.
மத்திய கிழக்கையும் ஐரோப்பாவையும் பொறுத்தவரையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப போர் நிறுத்தம் மற்றும் அமைதி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பார் என நம்பப்படும் நிலையில் உக்ரேனும் ரஷ்யாவும் அதற்கு முன்னதாக எந்த அளவுக்கு இடங்களை கைப்பற்ற முடியுமோ அந்த அளவுக்கு இடங்களை கைப்பற்ற முயற்சிக்கும் அதேபோல இஸ்ரேலும் காசாவிலும் லெபனானிலும் எந்த அளவுக்கு உக்கிரமான ராணுவ தாக்குதலை நடத்த முடியுமோ அந்த அளவுக்கு தாக்குதல் நடத்தும் அதாவது அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன் ஹமாஸ் மற்றும் இஸ்புல்லாவுக்கு எந்த அளவுக்கு சேதம் ஏற்படுத்த முடியும் அந்த அளவுக்கு சேதம் ஏற்படுத்த இஸ்ரேல் நிலைக்கு இதன் காரணமாக இந்த இரண்டு பகுதிகளிலும் போர் வரும் நாட்களில் உக்கிரமடையும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
தெற்காசியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவை பொருத்தவரையில் புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பு சவால்கள் வித்தியாசமானவை ஆகும் தற்போது இந்தோ பாசிபிக் பிராந்தியத்தில் சீனாவும் அமெரிக்காவும் ஒரு தவிர்க்க முடியாத மோதலில் ஈடுபட்டுள்ளனர் இது ஒரு தவிர்க்க முடியாத போரையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது காரணம் Thuclydes Trap எனும் விதிப்படி ஏற்கனவே சக்தி வாய்ந்த நாடாக அதே நேரத்தில் சக்தி குறைந்து வரும் நாடாக இருக்கும் ஒரு சக்தி மற்றொருபுறம் எழுச்சி பெற்று வரும் மற்றொரு நாடும் ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத ஒரு போரில் ஈடுபட்டு ஆக வேண்டும், இந்த தவிர்க்க முடியாத சிக்கலில் தான் தற்போது அமெரிக்காவும் சீனாவும் சிக்கி உள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு குறிப்பாக வாகனங்கள் டெக்ஸ்டைல் மற்றும் மருந்துகள் ஆகியவற்றிற்கு அதிகமாக வரி விதிக்கப்படும் என கூறப்படுகிறது இந்த வரி சுமார் 20% வரை அதிகரிக்கப்படும் எனவும் கூறியுள்ளார், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 60% அளவிற்கு வரி உயர்த்தப்படும் என அவர் தெரிவித்துள்ள அதே நேரத்தில் சீனாவை தவிர்த்து இந்தியாவுக்கும் இந்த நிலை ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன இது இந்திய பொருளாதாரத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது அதேபோல ஹெச் ஒன் பி விசாக்களுக்கான விதிமுறைகளை கடினமாக்கவும் வாய்ப்புகள் உள்ளது இது இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையை பாதிக்கும்.
ஆனால் அவரது இந்த கொள்கைகள் சீனாவுக்கு மட்டும் விதிக்கப்பட்டு இந்தியாவுக்கு தளர்வு அளிக்கப்பட்டால் அல்லது இந்திய பொருட்களுக்கான வரி உயர்வு மிகவும் குறைவாக இருந்தால் சீன பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அமெரிக்க தொழில்துறை தயக்கம் காண்பிக்கும் அதற்கு மாற்றாக இந்திய தொழில்துறையின் தயாரிப்புகளை அதிகமாக இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளது அதுபோல எரிசக்தி துறையை எடுத்துக் கொண்டால் அதிபர் பைடனின் நிர்வாகம் மரபு சார்ந்த எரிபொருட்களை தவிர்த்து புதிய தலைமுறை எரிசக்தி ஆதாரங்கள் மீது அதிக கவனம் செலுத்தி வந்தது ஆனால் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பெரும்பாலும் மரபு சார்ந்த எரிபொருட்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக இந்தியா புதிய தலைமுறை எரிசக்தி ஆதாரங்களில் கவனம் செலுத்தி வந்த நிலையில் அமெரிக்கா தற்போது அதற்கு அளித்து வரும் உதவிகள் குறைவதற்கான அல்லது நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது, ஆனால் இது அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கான பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதியை ஊக்குவிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது.
பாதுகாப்புத் துறையை பொறுத்தவரையில் சீனாவுக்கு எதிராக இந்தியாவுடனான உறவுகளை அமெரிக்கா அதிகப்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன இதற்கு முந்தைய ஆட்சியின் போது அதிபர் ட்ரம் சீனாவுக்கு எதிரான குவாட் கூட்டணியை வலுப்படுத்தினார் ஆகவே தற்போது சீனாவுக்கு எதிராக இந்தியாவுக்கு ஆதரவளிக்கும் விதமாக குவாடு நாடுகள் இடையான ராணுவ பயிற்சிகள் அதிகப்படுத்தப்படும் அது போல் இந்தியா மற்றும் அமெரிக்க ராணுவங்களுக்கு இடையேயான பயிற்சிகளும் அதிகமாக்கப்படும் மேலும் இந்திய ராணுவத்திற்கான ஆயுத விற்பனை அதிகமாகப் படும் சீனாவுக்கு எதிராக அரசியல் ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் உதவிகளை அமெரிக்கா அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
வெளியுறவு கொள்கைகள் மற்றும் இருதரப்பு உறவுகளை பொறுத்தவரையில் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எடுப்பார் என கருதப்படுகிறது இந்தியா இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு கனடா மற்றும் அமெரிக்க அரசுகள் காலிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஏற்படுத்தியுள்ள கலங்கத்தையும் சேதத்தையும் களைவதற்கான வாய்ப்பாக இது அமையும் மேலும் ரஷ்யா உடன் நிற்கும் பாராட்டுவதற்காக இந்தியா மீதி இருக்கும் விமர்சனங்களை மாற்றுவதற்கும் இது ஒரு வாய்ப்பாக அமையும் குறிப்பாக காலிஸ்தான் விவகாரத்தில் இந்தியா மீதான அழுத்தத்தை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குறைப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஒரு மூத்த வெளியுறவுத்துறை அதிகாரி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார், சீனாவை அமெரிக்காவின் போட்டியாளராக கருதுவது காரணமாக ஒரு வலுவான இந்தியாவை உருவாக்குவதற்கான முயற்சிகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து தனது முந்தைய ஆட்சியைப் போலவே இந்த ஆட்சியிலும் தொடர்வார் என வெளியுறவுத்துறை அதிகாரிகள் நம்புகின்றனர், ஒட்டுமொத்தத்தில் வணிகத்தை தவிர்த்து பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறையில் இந்தியாவுக்கு அதிக ஆதாயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன மேலும் இந்தியாவுக்கு மேற்குலக நாடுகளுடன் இருக்கும் உரசல்கள் மற்றும் கசப்புகளை களைவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும் என்றால் மிகை ஆகாது எனினும் வரும் நாட்களில் தான் புவிசார் அரசியல் நகர்வுகள் கள நிலவரத்தை நமக்கு வெளிப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது