கடந்த வியாழக்கிழமை அன்று சீன வெளியுறவுத் துறையின் செய்தி தொடர்பாளர் லின் ஜியான் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது அமெரிக்க அணு ஆயுதப் படைகளின் முக்கிய அதிகாரியான ரியர் அட்மிரல் தாமஸ் புகான்னன் அணு ஆயுத போருக்கு அமெரிக்கா தயார் எனவும் ஒரு நாட்டின் மீது அனைத்து அணு ஆயுதங்களையும் பிரயோகிக்காமல் குறிப்பிட்ட அளவிலான அணு ஆயுதங்களை தங்கள் மீது இதர எதிரி நாடுகள் தாக்குதல் நடத்தாமல் இருப்பதை உறுதி செய்வோம் வகையில் பாதுகாப்பாக தயார் நிலையில் வைத்திருப்போம் என சமீபத்தில் கூறியதை சுட்டிக்காட்டி சீன அரசின் சார்பில் கடும் கண்டனங்களை பதிவு செய்தார்.
அதாவது மேல் குறிப்பிட்ட அமெரிக்க அதிகாரியின் பேச்சு உலக கட்டுப்பாடு மற்றும் போட்டியே இல்லாத ராணுவ பலம் என்ற அமெரிக்காவின் அரச பழைய சிந்தனைகளை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் சமீப காலமாக அமெரிக்கா தனது அணு ஆயுத திறன்களை பல மடங்கு அதிகரித்து உள்ளதாகவும் தனது தேசிய பாதுகாப்பு கொள்கையில் அணு ஆயுதங்களின் பங்களிப்பை அதிகப்படுத்தி உள்ளதாகவும் தனது நட்பு நாடுகளுடனான அணு ஆயுத பங்கீட்டை அதிகரித்துள்ளதாகவும் அத்தகைய நாடுகளில் அமெரிக்காவின் எதிரி சக்திகளாக பார்க்கப்படும் நாடுகளுக்கு எதிராக பலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் வான் பாதுகாப்பு ஆயுதங்கள் போன்றவற்றை குவித்து வருவதாகவும்
அமெரிக்காவின் இத்தகைய மேற்குறிப்பிட்ட செயல்பாடுகள் உலக ராணுவ சமநிலையை மிக கடுமையாக பாதித்துள்ளதாகவும் இதன் காரணமாக பல்வேறு நாடுகளுக்கு இடையேயான ராணுவ மற்றும் ஆயுத போட்டிகள் அதிகரித்து உள்ளதாகவும் மற்றும் பல்வேறு நாடுகளுக்கு இடையே ராணுவ மோதல்கள் பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் இது தவிர மிக முக்கியமாக அணு ஆயுத போருக்கான வாய்ப்புகளும் பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் லின் ஜியான் கூறியுள்ளார்.
மேலும் லின் ஜியான் பேசும்போது அமெரிக்கா இனியும் காலம் தாழ்த்தாமல் மிக விரைவாக அணு ஆயுத குறைப்பு தொடர்பான தனது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் எனவும் மேலும் கணிசமான அளவுக்கு தனது அணு ஆயுதங்களை குறைக்க வேண்டும் எனவும் இதன் மூலமாக அணு ஆயுதங்கள் இல்லா உலகத்தை உருவாக்குவதற்கும் இத்தகைய உலகத்திற்கே ஆபத்து விளைவிக்கும் சூழல்களை தவிர்ப்பதற்கும் உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றிற்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளது கூடுதல் தகவல் ஆகும்