52 உளவு செயற்கைக்கோள்கள் திட்டத்திற்கு பாதுகாப்புக்கான அமைச்சரவை கமிட்டி ஒப்புதல் !!

விண்வெளி சார்ந்த இந்தியாவின் பாதுகாப்பு உளவு மற்றும் கண்காணிப்பு திறன்களை அதிகரிக்கும் நோக்கத்துடனான 52 உளவு செயற்கைக்கோள்களை தயாரித்து ஏவும் திட்டத்திற்கு கடந்த திங்கட்கிழமை அன்று பிரதமர் மோடி தலைமையிலான CCS – Cabinet Committee on Security பாதுகாப்புக்கான அமைச்சரவை கமிட்டி மிகவும் சைலன்டாக ஒப்புதல் அளித்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அதாவது சுமார் 27 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டம் SBS – 3 Space Based Surveillance அதாவது விண்வெளி சார்ந்த கண்காணிப்பு திட்டத்தின் மூன்றாவது கட்டமாகும் இதில் 52 உளவு செயற்கைக்கோள்களை விண்வெளியில் பூமியில் இருந்து 160-2000கிமீ உயரத்தில் LEO Low Earth Orbit எனப்படும் தாழ்வான புவி சுற்றுவட்ட பாதையிலும், பூமிக்கு மேல் 12,000-35,000 கிமீ உயரத்தில் GEO GEostationary Orbit எனப்படும் அதிக உயர நிலையான சுற்றுவட்ட பாதையிலும் நிலைநிறுத்த உள்ளனர் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா ஏற்கனவே இந்த விண்வெளி சார்ந்த கண்காணிப்பு திட்டத்தின் கீழ் இரண்டு கட்டங்களாக ஒரு சில ராணுவ அல்லது உளவு செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது அதாவது RISAT CARTOSAT, GSAT வரிசை சேர்க்கை கோள்கள் இதில் அடங்கும் கடந்த 2001 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசு இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது அதில் நான்கு செயற்கை கோள்கள் ஏவப்பட்டன, அதன்பிறகு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு 2013 ஆம் ஆண்டு இரண்டாவது கட்டத்தின் கீழ் ஆறு செயற்கைக்கோள்களை ஏவியது.

தற்போது இந்த மூன்றாவது கட்டத்தின் கீழ் 52 செயற்கைக்கோள்கள் அடுத்த ஐந்து ஆண்டு கால கட்டத்தில் ஏவப்பட உள்ளன இதன் மூலமாக விண்வெளி சார்ந்த இந்தியாவின் கண்காணிப்பு திறன்கள் பல மடங்கு அதிகரிக்கும் விண்வெளியில் இந்தியாவின் கண்களாக இவை திறம்பட செயல்படும் இதன் மூலமாக பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான மேற்கு வடக்கு கிழக்கு நிலப்பகுதி எல்லையோரங்களிலும், இந்திய பெருங்கடல் பகுதியில் சீன கடற்படையின் கண்காணிப்பு கப்பல்கள், இதர போர்க்கப்பல்கள் மற்றும் நீர் மூழ்கி கப்பல்களில் நடமாட்டங்களை கண்காணிக்கவும் முடியும்.

மேலும் இந்த புதிய செயற்கை கோள்களின் சிறப்பம்சம் என்னவெனில் இவற்றில் AI Artificial Intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு திறன் தொழில்நுட்பம் உட்பகுத்தப்படும் இதன் மூலமாக இந்த செயற்கைக்கோள்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு கூட்டாக இணைந்து செயல்பட்டு கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு தகவல்களை சேகரிக்க முடியும் அதாவது 35 ஆயிரம் கிலோமீட்டர் உயரத்தில் இருக்கும் ஒரு செயற்கைக்கோள் ஏதேனும் ஒரு சந்தேகப்படும்படியான ஒன்றைக் கண்டுபிடித்தால் உடனடியாக இந்த செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட தகவல் தொடர்பு வசதி மூலம் பூமிக்கு அருகே பறக்கும் மற்றொரு செயற்கைக்கோளை தொடர்பு கொண்டு அந்த பகுதியை தெளிவாக கண்காணித்து கூடுதல் தகவல்களை சேகரிக்க கேட்டுக்கொள்ள முடியும்.

இந்த செயற்கை நுண்ணறிவு திறன் தொழில்நுட்பம் இந்தியாவுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என ஒரு மூத்த இஸ்ரோ விஞ்ஞானி கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார் அதாவது இந்த செயற்கைக்கோள்களில் உட்பகுத்தப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு திறன் தொழில்நுட்பம் மூலமாக சேகரிக்கப்படும் தகவல்களை மிகவும் கவனமாக அலசி ஆராய்ந்து உடனுக்குடன் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களையும் கண்காணித்து அவற்றையும் ஆராய்ந்து நமக்குத் தேவையான தகவல்களை மட்டுமே அவை அளிக்கும் இதன் மூலமாக குழப்பமான தகவல்கள் சேகரிக்கப்பட்டு குழப்பம் ஏற்படுவதும் தவிர்க்கப்படும் மேலும் அந்த விஞ்ஞானி கூறும்போது இந்த வேகத்தில் இந்த செயற்கைக்கோள்களை ஏவ முடிந்தால் நாட்டுக்கான ஆபத்துக்களை மிகப்பெரிய அளவில் குறைக்க முடியும் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இந்திய தரைப்படைக்கான GSAT – 7B, இந்திய கடற்படைக்கான GSAT – 7 (ரூக்மினி), இந்திய விமான படைக்கான GSAT – 7A (Angry Bird) ஆகிய செயற்கை கோள்களைப் போன்று இந்த 52 செயற்கை கோள்களும் இந்தியாவின் முப்படைகளுக்கும் என குறிப்பிட்ட அளவில் பிரித்து வழங்கப்படும் இவை அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் தொடர்ந்து இயங்கி இந்திய ராணுவத்தின் சிறப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு தேவையான தகவல்களை வழங்கும் மேலும் இவை எந்தவித கால நிலையிலும் எந்த நேரத்திலும் எவ்வித தட்பவெப்ப சூழலிலும் கண்காணிக்கும் திறன் பெற்றவை என்பது கூடுதல் சிறப்பு மிக்க தகவலாகும்