இந்திய தரைப்படையின் சமூக வலைத்தள பாதுகாப்பு பிரிவு !!

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக இந்திய தரைப்படைக்கு அது தொடர்பான தவறான மற்றும் சட்ட விரோதமான தகவல்கள் அடங்கிய பதிவுகளை நீக்குவதற்கு சமுக வலைதளங்களுக்கு அறிவிக்கை பிறப்பிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது இதற்கு பொறுப்பாக இந்திய தரப்படையின் முலோபாய தகவல் தொடர்பு பிரிவின் கூடுதல் இயக்குனர் ஜெனரல் பொறுப்பில் உள்ள மூத்த தரைப்படை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய தகவல் தொடர்பு சட்டம் 79(3)(b) இன் கீழ் இத்தகைய அறிவிக்கையை பிறப்பிப்பதற்கு அவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது பொறுப்புக்கள் தகவல் தொடர்புச் சட்டம் 2000 மற்றும் தகவல் தொடர்பு விதிகள் 2021 ( இடை விதிமுறைகள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள்) ஆகியவற்றால் வரையறுக்கப்பட்டுள்ளது தரைப்படை தொடர்பான ஏதேனும் தவறான அல்லது சட்ட விரோதமான தகவல்கள் அடங்கிய பதிவுகள் கண்காணிக்கப்பட்டு அது தொடர்பான அறிவிக்கை குறிப்பிட்ட சமூகவலைத்தளத்திற்கு அனுப்பப்படும்.

இந்த புதிய பொறுப்பு மற்றும் பிரிவு மூலமாக இந்திய தரப்படையால் உடனுக்குடன் தவறான தகவல்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும் இதன் மூலமாக இந்த டிஜிட்டல் விபத்தில் தரைப்படையின் கண்ணியத்தை பாதுகாக்க இந்த நடவடிக்கை வழி வகுத்துள்ளது, இதற்கு முன்னதாக இந்திய தரைப்படை இத்தகைய பணிகளுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சகத்தை நாட வேண்டி இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்