உலகப் பிரசித்தி பெற்ற பிரஞ்சு வானூர்தி துறை சார்ந்த பத்திரிக்கையான Avons Legendaires ஆவான்ஸ் லெஜன்டேர்ஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ள செய்தியின் படி கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் அர்மேனிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் இந்தியாவுடன் இந்திய தயாரிப்பு போர் விமானங்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளை துவங்கி உள்ளதாக தெரிய வருகிறது இதன் மூலம் அர்மேனியாவுக்கு இந்திய போர் விமானங்களை வாங்குவதற்கு திட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதாவது இந்த பேச்சுவார்த்தையில் இந்தியாவின் பிரதான மற்றும் முன்னணி வானூர்தி தயாரிப்பு நிறுவனமான அரசுத்துறையை சேர்ந்த HAL Hindustan Aeronautics Limited ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்தியாவிலேயே தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் ரஷ்யாவிடம் இருந்து தொழில்நுட்பம் பெற்று தயாரிக்கும் நேட்டாவால் FLANKER – H என அழைக்கப்படும் Su-30 MKI கனரக பலத்திறன் போர் விமானங்களில் 8 முதல் 12 விமானங்கள் மற்றும் அவற்றிற்கான சிறப்பு ஆயுதங்களையும் வாங்குவதற்கு இருதரப்பு விவாதங்கள் நடைபெற்றுள்ளன.
அதே நேரத்தில் அர்மேனிய பாதுகாப்பு துறை அமைச்சகம் ரஷ்யா உடன் செய்து கொண்டுள்ள எட்டு Su-30 SM FLANKER – C விமானங்களுக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ய எண்ணுவதாகவும் நம்பத் தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு அருமையான விமானப்படைக்கு நான்கு Su-30SM ரக போர் விமானங்களை ரஷ்யா டெலிவரி செய்தது இதைத்தொடர்ந்து மேலும் இத்தகைய எட்டு பூ
போர்விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டது.
ஆனால் அதிலிருந்து தற்போது வரை ஐந்து ஆண்டுகள் ஆகியும் குறிப்பாக அர்மேனிய அரசு ரஷ்யாவுக்கு ஒப்பந்தத்தின் மதிப்பில் சுமார் 70% பணத்தை ஏற்கனவே செலுத்திய பிறகும் இதுவரை ஒரு விமானத்தைக் கூட ரஷ்யா டெலிவரி செய்யவில்லை அதற்கு ஒரு சில காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன அதாவது இந்த ஒப்பந்தம் செய்த பிறகு ரஷ்யா இத்தகைய எந்தவித விமானங்களையும் தயாரிக்கவில்லை அல்லது அப்படி தயாரிக்கப்பட்ட எந்த ஒரு விமானம் ஆனாலும் அது ரஷ்ய விமானப்படையின் தேவையை பூர்த்தி செய்வதற்காக தயாரிக்கப்பட்டவை என்பதாகும்.
தற்போது அர்மேனிய விமானப்படை நான்கு Su-30 SM FLANKER C போர் விமானங்கள் மற்றும் பதினைந்து பழைய Su-25K Frogfoot தரை தாக்குதல் போர் விமானங்களையும் பயன்படுத்தி வருகிறது ஆனால் அசர்பைஜான் உடனான பிரச்சினை நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில் அர்மேனியா தனது ராணுவத்தை நவீனமயமாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அந்த வகையில் இந்தியாவிடம் இருந்து தனது பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் பல்வேறு முக்கிய பிரதான ஆயுத அமைப்புகளை வாங்கி வருகிறது.
குறிப்பாக Swathi WLR – Weapon Locating Radar, Akash -1S வான் பாதுகாப்பு அமைப்பு, பினாகா பல குழல் ராக்கெட் லாஞ்சர் அமைப்புகள், ATAGS – Advanced Towed Artillery Gun System அதிநவீன இழுவை பீரங்கி அமைப்புகள் ஆகியவற்றை கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவுடன் செய்து கொண்ட சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தின் கீழ் இறக்குமதி செய்துள்ளது, இது தவிர PRALAY ப்ரளய் பலிஸ்டிக் ஏவுகணைகள், Su-30 போர் விமானங்கள் வாங்குவதற்கும், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ரஷ்ய தயாரிப்பு போர் விமானங்களை மேம்படுத்துவதற்கும் இந்தியாவிடம் கோரிக்கை வைத்துள்ளது, மேலும் இதில் கூடுதல் சிறப்பு மிக்க தகவல் என்னவென்றால் தற்போது அர்மேனியாவின் மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதியாளராக இந்தியா உருவெடுத்துள்ளது ஆகும்