இஸ்ரேலின் ஈரான் தாக்குதல் திட்டங்களை கசிய விட்ட அதிகாரி மீது அமெரிக்கா அரசு நடவடிக்கை !!

ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து ஈரான் மீது இஸ்ரேல் நடத்தவிருந்த தாக்குதல் பற்றிய திட்டங்கள் சமூக வலைதளத்தில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை நாம் அனைவரும் அறிவோம் மேலும் இந்த ரகசிய தகவல்கள் கசிந்ததன் காரணமாக இஸ்ரேல் உடைய தாக்குதல் திட்டங்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின இதைத்தொடர்ந்து இஸ்ரேல் வலியுறுத்தல் காரணமாகவும் அமெரிக்கா இஸ்ரேல் இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவம் கருதியும் அமெரிக்க அரசு விசாரணையை துவங்கியது.

இதைத்தொடர்ந்து சமீபத்தில் கம்போடியா நாட்டில் வைத்து அமெரிக்க உளவு அமைப்பான சிஏஏவின் முன்னாள் அதிகாரியான ஆசிப் வில்லியம் ரஹ்மான் என்பவரை அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பான FBI கைது செய்தது மேலும் அவர் மீது தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்களை பதுக்கி வைத்தது மற்றும் பொதுவெளியில் பரிமாறியது போன்ற குற்றங்கள் சுமத்தப்பட்டு விசாரணை நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.

ஆசிப் வில்லியம் ரகுமான் வெளியிட்ட ஆவணங்கள் அமெரிக்காவின் தேசிய செயற்கைக்கோள் உளவு அமைப்பால் தயாரிக்கப்பட்டவை ஆகும் செயற்கைக்கோள் மூலமாக ராணுவம் மற்றும் அதி ரகசிய நடவடிக்கைகளுக்கு புகைப்படம் எடுத்து தேவையான தகவல்களை சேகரிப்பது மற்றும் அவற்றை ஆராய்ந்து இறுதி அறிக்கையை தயாரிப்பது இந்த அமைப்பின் வேலையாகும் அப்படி இஸ்ரேல் தொடர்பாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களை தான் ஆசிப் வில்லியம் ரஹ்மான் கசிய விட்டது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் பிரபல ஊடகமான நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியின் படி ஆசிப் வில்லியம் ரஹ்மானுக்கு மிக முக்கியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அனுமதி இருந்ததாகவும் அதை பயன்படுத்தி கடந்த அக்டோபர் மாதம் 17ஆம் தேதி அமெரிக்கா மற்றும் கம்போடியாவில் இருந்து தகவல்களை கசிய விட்டதாகவும், தற்போது விர்ஜினியா மாகாணத்தின் கிழக்கு மாவட்டத்தில் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளதாகவும் விரைவில் குவாம் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர் படுத்தப்பட உள்ளதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ரகசிய ஆவண தகவல்கள் அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது அங்கு ஆசிப் வில்லியம் ரகுமான் தனது அதிகாரப்பூர்வ அனுமதியை பயன்படுத்தி இவற்றை எடுத்து பதுக்கி வைத்து இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்த திட்டம் வகுத்து இறுதி கட்ட தயார் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது தகவல்களை வெளியிட்டது காரணமாக அமெரிக்க மத்திய புலனாய்வு முகமை மற்றும் ராணுவ அதிகாரிகள் கூட்டாக விசாரணை நடத்தியதில் விளைவாக இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்