ரஷ்யாவிற்கு வடகொரியா வீரர்களை அனுப்பியதை அடுத்து உக்ரேனுக்கு ஆயுதம் சப்ளை செய்வோம் எச்சரிக்கை விடுத்த தென் கொரியா !!

சமீபத்தில் தென் கொரியாவின் உளவு அமைப்பான தேசிய உளவு சேவை நிறுவனம் வடகொரியா ஏறத்தாழ 13 ஆயிரம் வீரர்களை ரஷ்யாவிற்கு உக்ரைனுடனான போரில் சண்டையிட அனுப்பி வைக்க உள்ளதாகவும் ஏற்கனவே 1500 வீரர்கள் ரஷ்யா சென்றடைந்து விட்டதாகவும் அங்கு அவர்கள் ரஷ்யப்படைகளுடன் இணைந்து ஒருங்கிணைப்பு பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்த பயிற்சிகள் நிறைவடையும்போது அவர்கள் போர்க்கள முன்னணிக்கு அனுப்பி வைக்கப்படுவர் எனவும் வடகொரியா அனுப்பும் படையினரில் சிறப்பு படை வீரர்களும் உள்ளடங்குவர் எனவும் தகவல் வெளியிட்டு இருந்தது. இதை தென் கொரிய அதிபர் தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் மூத்த தென் கொரிய அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இந்த நிலையில் தற்போது தென்கொரியா அரசு வடகொரியா ரஷ்யாவிற்கு உக்ரைன் போரில் உதவும் விதமாக படைவீரர்களை அனுப்பியதை தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவாக நேரடியாக ஆயுத சப்ளை செய்வது தொடர்பாக பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததை தொடர்ந்து அமெரிக்கா தலைமையில் ரஷ்யாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதார தடை நடவடிக்கைகளில் தென் கொரியாவும் பங்கெடுத்தது. மேலும் உக்ரேனுக்கு மனிதாபிமான மற்றும் நிதி உதவிகளை செய்து வந்தது, ஆனால் ஆயுத உதவி செய்யாமல் இருந்த நிலையில் தற்போது அதையும் செய்வதற்கு தென்கொரிய அரசு சிந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தென் கொரிய அரசை பொருத்தவரையில் இப்படி வடகொரியா உக்ரைன் உடனான போரில் ரஷ்யாவிற்கு ஆதரவாக படைவீரர்களை அனுப்புவது மற்றும் இதர உதவிகளை செய்வதன் மூலமாக வடகொரியாவின் அணு ஆயுத தாக்குதல் திறன்களை மேம்படுத்த நவீனப்படுத்த தேவையான தொழில் நுட்பங்களை ரஷ்யா நன்றி கடனாக வடகொரியாவிற்கு அளிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அப்படி நடந்தால் அந்த ஆயுதங்களைக் கொண்டு எதிர்காலத்தில் வடகொரியா தென் கொரியாவை துல்லியமாக தாக்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும் எனவும் இது தென்கொரியாவிற்கும் ஒட்டுமொத்த பிராந்தியத்திற்கும் ஆபத்து என கருதுகின்றனர்.

மேலும் தென்கொரியா மூத்த அதிகாரி ஒருவர் இது பற்றி கூறும்போது வடகொரியா அரசு ஒரு கிரிமினல்களின் கூட்டமைப்பு எனவும் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் சட்டவிரோதமான நியாயமற்ற போரில் அப்பாவி வடகொரிய இளைஞர்களை ஈடுபடுத்துவதாகவும் தென் கொரியா இனி வடகொரியாவின் இத்தகைய நகர்வுகளை எதிர்கொள்ள சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயல்படும் எனவும் மேலும் பொருளாதாரம் ராணுவம் மற்றும் ராஜாங்கரீதியாகவும் அனைத்து விதமான எதிர் நடவடிக்கைகளையும் எடுப்போம் எனவும் மேலும் தற்காப்பு ஆயுதங்களை உக்கிரனுக்கு சப்ளை செய்வோம் எனவும் தேவைப்பட்டால் தாக்குதல் ஆயுதங்களையும் சப்ளை செய்வோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தென்கொரியா அரசின் இன்றைய எச்சரிக்கை செய்தி மூலமாக ரஷ்யா மேலும் சூழலை தனக்கு சிக்கலாக்கிக் கொள்ளாமல் வடகொரிய படைகளை திரும்ப அனுப்பும் என எதிர்பார்த்து மேல் குறிப்பிட்ட செய்தியை வெளியிட்டுள்ளனர், மேலும் நேரடியாக வடகொரிய படைகளை ரஷ்யாவில் இருந்து திரும்ப அனுப்பி வைக்க வேண்டும் எனவும் தென்கொரியா அரசு வலியுறுத்தியுள்ளது. தென்கொரியா அரசின் இந்த அறிவிப்புகள் தென்கொரியா உளவு அமைப்பின் எச்சரிக்கையை தொடர்ந்து நடைபெற்ற தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு வெளியாகி உள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

தென் கொரிய அதிபர் யூன் சூக் யோலின் அலுவலகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள தகவலின் படி கடந்த இரண்டு ஆண்டுகளாக குறிப்பாக ரஷ்யா உக்ரைன் போருக்கு பிறகான காலகட்டத்தில் ரஷ்யா மற்றும் வடகொரியா இடையேயான பாதுகாப்பு உறவுகள் பல மடங்கு மேம்பட்டுள்ளதாகவும் அதிகரித்துள்ளதாகவும் கடந்த ஜூன் மாதம் இருநாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டதும் அதன் காரணமாக இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் ராணுவ ரீதியாக தாக்கப்படும்போது செய்து கொள்ள வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளது கூடுதல் தகவலாகும்.