சமீபத்தில் இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு தினம் கடந்த அக்டோபர் மாதம் எட்டாம் தேதி சென்னை தாம்பரம் விமானப்படை தினத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்டது இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இந்திய விமானப்படையின் தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அமர் ப்ரித் சிங் “VISION 2047 – விஷன் 2047” எனப்படும் தொலைநோக்கு திட்டத்தை அறிமுகப்படுத்தினார், இந்தத் திட்டத்தின் படி வருகிற 2047 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பு போர் விமானங்கள் அதிநவீன ஆளில்லா கண்காணிப்பு வானூர்திகள் மற்றும் அதிநவீன ஆயுத அமைப்புகள் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த விஷன் 2047 தொலைநோக்கு திட்டத்தின் நோக்கமானது இந்தியாவின் ஆத்ம நிற்பார் பாரத் எனப்படும் சுதேசி தயாரிப்புகளைக் கொண்டு தன்னிறைவு அடையும் திட்டத்துடன் ஒத்துப் போவதாகும் இது பற்றி ஏர்சீப் மார்ஷல் அமர் பிரீத் சிங் ஊடகவியலாளர்களிடம் பேசும் போது இந்தத் திட்டம் வெறுமனே இந்திய விமானப்படையில் உள்ள வெளிநாட்டு தயாரிப்பு தளவாடங்களை உள்நாட்டு தயாரிப்புகளை கொண்டு மாற்றி அமைப்பது அல்ல 2047 ஆம் ஆண்டு இந்திய விமானப்படை முழுவதும் இந்திய தயாரிப்பு தளவாடங்களைக் கொண்டு இயங்கும் ஒரு படையாக மாறுவதை இப்போதே நாங்கள் உருவகம் செய்து வைத்திருக்கிறோம்.
இதற்கு இந்திய தயாரிப்பு தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் மாற்றம் அடைந்து வரும் வான் போர் முறைகளுக்கு ஏற்ப இந்த நவீன கால வான் போர் முறை சவால்களை சந்திப்பதற்கு ஏதுவாக இருப்பது அவசியம் என்றும் இந்த லட்சியத் திட்டம் இந்திய விமானப்படை இந்திய பாதுகாப்பு தொழில்துறை மற்றும் ஆய்வு நிறுவனங்கள் இடையேயான தொடர்ச்சியான கூட்டு உறவுகளையும் கூட்டு முயற்சிகளையும் நம்பியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார், இந்தப் பாதையில் ஏற்கனவே இந்திய விமானப்படை நல்ல முன்னேற்றத்தை கண்டு வருகிறது அந்த வகையில் இந்தியாவின் சொந்த தயாரிப்பான இலகு ரக தேஜாஸ் போர் விமானம் தற்போது இந்திய விமானப்படையின் தவிர்க்க முடியாத அங்கமாக மாறியுள்ளது இது வான்வெளி துறையில் அதிகரிக்கும் இந்தியாவின் திறன்களையும் சுட்டிக் காட்டுகிறது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இந்த விஷன் 2047 சுதேசி தொலைநோக்கு திட்டத்தின் அடித்தளமாக இருக்கப் போவது நாம் சொந்தமாக உள்நாட்டிலேயே தயாரித்து வரும் AMCA – Advanced Multirole Combat Aircraft அதிக நவீன பல திறன் போர் விமானம் ஆகும் இது ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமாக கூறப்பட்டாலும் விஞ்ஞானிகள் இதில் ஒரு சில ஆறாம் தலைமுறை தொழில்நுட்பங்களும் இடம்பெறும் என கூறுகின்றனர் இந்த ஆம்கா போர் விமான திட்டம் பற்றி இந்திய விமானப்படை தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங் கூறும் போது DRDO Defence Research & Development Organisation எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடனும் தனியார் துறை பாதுகாப்பு நிறுவனங்களுடனும் இந்திய விமானப்படை இந்தத் திட்டத்தின் வெற்றியை உறுதி செய்ய கூட்டாக இயங்கி வருவதாக குறிப்பிட்டார்.
அதே நேரத்தில் இந்திய விமானப்படை போர் விமானங்களை தவிர வேறு பல தொழில்நுட்பங்களிலும் இந்திய தயாரிப்புகளை நாடுகிறது அந்த வகையில் கண்ணுக்கு எட்டாத தொலைவில் உள்ள இலக்குகளையும் போர் விமானி கண்டறிந்து சுட்டு வீழ்த்த உதவும் சுதேசி ASTRA BVRAAM – Beyond Visual Range Air to Air Missile அஸ்திரா தொலைதூர மான் இலக்கு தாக்குதல் ஏவுகணை ஏற்கனவே இந்திய விமானப்படையில் சேவையில் உள்ளது தொடர்ந்து இந்த ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட தொலைவு நீட்டிக்கப்பட்ட அதிநவீன வடிவங்களும் தயாரிப்புகளில் உள்ளன இந்த வரிசையில் மேலும் சுதேசி வான் பாதுகாப்பு அமைப்புகள் , ரேடார் அமைப்புகள், மின்னணு போர் முறை அமைப்புகள் ஆகியவற்றை இந்திய பாதுகாப்பு தொழில் துறையினர் தயாரித்து வருகின்றனர் அவற்றில் பல ஏற்கனவே இந்திய விமானப்படையால் பயன்படுத்தி வரப்படுவதும் கூடுதல் சிறப்பு மிக்க தகவலாகும்.
அதே நேரத்தில் இந்திய விமானப்படை தலைமை தளபதி இந்தத் திட்டத்தில் உள்ள சிக்கல்களையும் சுட்டிக்காட்டி பேசினார். உதாரணமாக உள்நாட்டு தளவாட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளில் தொடர்ச்சியான முதலீடு, உலகளாவிய சப்ளை செயல்களில் உள்ள சிக்கல்கள் தடங்கல்கள் ஆகியவற்றைக் கடந்து தகுந்த நேரத்தில் முக்கிய தளவாடங்களை தயாரித்து டெலிவரி செய்வது ஆகியவற்றில் பிரச்சனை நிலவுகிறது எது எப்படியோ இந்திய விமானப்படை தளபதி இந்தியாவின் அதிவேக வளர்ச்சி அடைந்து வரும் பாதுகாப்பு தொழில்துறை மற்றும் அந்தத் துறையில் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கூட்டு முயற்சிகள் பங்களிப்பு ஆகியவை நம்பிக்கை அளிப்பதாக தெரிவித்தார், மேலும் இந்த விஷன் 2047 தொலைநோக்குத் திட்டம் இந்தியா தனது வான் சக்தியை அதிகரிக்க தீவிர முயற்சி எடுத்து வரும் நிலையில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்