சாகோஸ் தீவுக் கூட்டத்தை மொரிஷியஸிடம் திரும்ப அளித்த இங்கிலாந்து, அமைதியாக சாதித்த இந்தியா !!
1 min read

சாகோஸ் தீவுக் கூட்டத்தை மொரிஷியஸிடம் திரும்ப அளித்த இங்கிலாந்து, அமைதியாக சாதித்த இந்தியா !!

இந்திய நாட்டின் தென்கோடி முனையான கன்னியாகுமரிக்கு தென் மேற்கே ஏறத்தாழ 1700 கிலோமீட்டர் தொலைவில் மாலத்தீவிற்கும் கீழே அமைந்துள்ளது தான் சாகோஸ் தீவுக்கூட்டம், கடந்த 1814 ஆம் ஆண்டு முதல் இந்த தீவுக் கூட்டத்தை இங்கிலாந்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது மேலும் கடந்த 1965 ஆம் ஆண்டு மொரிசியஸ் நாட்டிற்கு சொந்தமான இந்த தீவை முற்றிலுமாக அந்த நாட்டிடம் இருந்து துண்டித்து பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் பிராந்தியம் என்ற கடல் கடந்த இங்கிலாந்து நாட்டின் நிலப்பரப்பு ஒன்றை உருவாக்கியது

பின்னர் கடந்த 1968 மற்றும் 1973 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் இந்தத் தீவுக் கூட்டத்தின் மிகப்பெரிய தீவான டியாகோ கார்சியாவில் வசித்து வந்த 2000க்கும் மேற்பட்ட பழங்குடியினரை இங்கிலாந்து அங்கு இருந்து நிரந்தரமாக அப்புறப்படுத்தி ராணுவ தளம் ஒன்றை அமைத்தது பின்னர் இதனை அமெரிக்காவுக்கு இங்கிலாந்து குத்தகை அடிப்படையில் வழங்கியது இங்கே இங்கிலாந்துடன் இணைந்து அமெரிக்கா ஒரு ராணுவ தளத்தை அமைத்து இயக்கி வருகிறது இந்த தளம் அமெரிக்காவின் ஈரான் புரட்சி வளைகுடா போர்கள் அதாவது குவைத் யுத்தம் ஈராக் யுத்தம் ஆப்கானிஸ்தான் யுத்தம் போன்ற நிகழ்வுகளில் மிகவும் முக்கியமான பங்கு வகித்துள்ளது.

இந்த தீவுக் கூட்டத்தை முதலில் போர்த்துக்கீசியர்கள் தான் கடந்த 1512 ஆம் ஆண்டில் கண்டுபிடித்தனர், பின்னர் பிரான்ஸ் இதனை கண்டுபிடித்து தொழு நோயாளிகளை நாடு கடத்தி தங்க வைக்கும் இடமாக பயன்படுத்தி வந்தது பின்னர் தென்னை தோப்புகளை உருவாக்கி அதிலிருந்து பொருளாதார ஆதாயத்தை பிரான்ஸ் பெற்றது 18 ஆம் நூற்றாண்டுக்கு பிறகு பிரான்ஸ் அரசன் மாவீரன் நெப்போலியன் காலகட்டத்தில் இங்கிலாந்துடன் நடைபெற்ற போரில் பிரான்ஸ் தோல்வியடைந்து இந்த தீவுக் கூட்டத்தை பிரிட்டிஷாரிடம் இழந்தது எனினும் இந்தத் தீவு மொரிசியஸ் நாட்டிற்கு சொந்தமானதாக இருந்து வந்தது ஆனால் கடந்த 1965 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக இங்கிலாந்து இந்தத் தீவை முற்றிலுமாக மொரிஷியஸிடம் இருந்து துண்டித்து தனது முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.

மொரிசியஸ் அரசு மிக நீண்ட காலமாகவே இந்த சாகோஸ் தீவுக் கூட்டத்தின் உரிமையை கோரிவந்தது மேலும் இங்கிலாந்து இந்த தீவுக் கூட்டத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ளதாகவும் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது இந்த வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு சாகோஸ் தீவு கூட்டத்தை இங்கிலாந்து நிர்வகிப்பது சட்ட விரோதமானது என தீர்ப்பளித்தது இந்தத் தீர்ப்பிற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பும் தனது முழு ஆதரவை தெரிவித்த நிலையில் இங்கிலாந்து இந்தத் தீர்ப்பு தங்களை கட்டுப்படுத்த முடியாது என தெரிவித்து விட்டது மேலும் சற்று முன்னதாக கடந்த 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்து அமெரிக்காவுடனான இந்த தீவின் குத்தகையை மேலும் 36 ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொண்டது.

இந்தியா எப்போதும் இந்த தீவுக்கு கூட்டம் இங்கிலாந்து வசம் அல்லது அமெரிக்கா வசம் இருப்பதை விரும்பவும் இல்லை ரசித்ததும் இல்லை மேலும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தத் தீவை இங்கிலாந்தும் அமெரிக்காவும் ஆக்கிரமித்து வைத்துள்ளது இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் அமைதிக்கு மிகப்பெரிய ஆபத்து என கூறி இந்த தீவில் அமைந்துள்ள ராணுவ தளத்தை அப்புறப்படுத்த வேண்டும் என மிகவும் கடுமையாக வலியுறுத்தி வந்தது இந்திய அரசு தரப்பிலும் இந்தத் தீவு மூலமாக இந்திய பெருங்கடல் பகுதியில் வெளிநாட்டு சக்திகள் அதிலும் மேற்கத்திய சக்திகள் ஆழமாக காலுன்றுவது ரசிக்கத்தக்கதாக பார்க்கப்படவில்லை இதன் காரணமாக இந்த தீவு விவகாரம் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவுகளிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது பின்னர் காலப்போக்கில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவுகள் மேம்பட்ட நிலையில் கடந்த 2001 முதல் 2004 வரையிலான காலகட்டத்தில் இந்திய மற்றும் அமெரிக்க கடற்படைகள் இந்த தீவில் கூட்டு பயிற்சிகளை நடத்தினது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே தற்போது இந்த தீவுக் கூட்டத்தை மீண்டும் மொரீஷியஸ் அரசிடம் ஒப்படைப்பதாகவும் டியாகோ கார்சியா தீவில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் மீண்டும் இங்கு குடியேறலாம் எனவும் இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது, இதுகுறித்து இங்கிலாந்து மற்றும் மொரீஷியஸ் அரசுகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த கால தவறுகளை சரி செய்யும் விதமாகவும் இங்கு வாழும் மக்களின் நலன் கருதியும் மொரீஷியஸ் அரசு இங்கு மீள் குடியமர்த்தல் பணிகளை துவங்கும் எனவும் இங்கிலாந்து சார்பில் இங்கு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக ஒரு புதிய நிதி உருவாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆனால் அதே நேரத்தில் டியாகோ கார்சியா தீவில் உள்ள ராணுவ தளத்தின் பயன்பாட்டை இங்கிலாந்து தொடர்ந்து வைத்துக் கொள்ளவும் இரு தரப்பும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

இந்தத் தீவில் இங்கிலாந்துடன் கூட்டாக ராணுவ தளத்தை அமைத்து செயல் படுத்தி வரும் அமெரிக்கா சார்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த ஒப்பந்தத்தை வரலாற்று சிறப்புமிக்கது என புகழ்ந்துள்ளார் மேலும் இந்த ஒப்பந்தம் மூலமாக மொரிஷியஸ் மற்றும் இங்கிலாந்து இடையே சாகோஸ் தீவு கூட்டத்தின் உரிமை சார்ந்த மிக நீண்ட நாள் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளதாகவும் ராஜாங்க ரீதியான ஒத்துழைப்புகள் மூலமாக மிக அமைதியான மற்றும் இருதரப்பிற்கும் பலனளிக்கும் வகையில் மிக நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு கொண்டு வரப்படலாம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே இங்கிலாந்து மற்றும் மொரீசியஸ் இடையான இந்த தீவுக்கூட்டம் தொடர்பான பிரச்சனை முடிவுக்கு வந்ததில் இந்தியாவின் பங்களிப்பு மிக முக்கியமான காரணியாக இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன அதாவது இந்திய அரசு மொரிசியஸ் நாட்டின் நிலைப்பாட்டை துளி அளவு கூட பின் வாங்காமல் ஆதரித்ததாகவும் அதே நேரத்தில் இரு நாடுகளும் திறந்த மனதுடன் அமர்ந்து பேசி இருதரப்பிற்கும் பலனளிக்கும் விதமான முடிவை எட்டுவதற்கு வலியுறுத்தியதாகவும் தற்போது இந்த விவகாரம் முடிவுக்கு வந்து ஒப்பந்தம் இறுதியாகி உள்ள நிலையில் இந்திய அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக இதில் எட்டப்பட்டுள்ள இறுதி முடிவு அனைத்து தரப்பிற்கும் பலன் அளிப்பதாக அமைந்துள்ளதாகவும் மேலும் நீண்ட காலப் போக்கில் இந்திய பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு மிக்க தகவலாகும்