காஷ்மீர் என்கவுண்டர் மூன்று பயங்கரவாதிகளை 27 மணி நேரத்தில் அதிரடியாக வீழ்த்திய ராணுவம் !!
1 min read

காஷ்மீர் என்கவுண்டர் மூன்று பயங்கரவாதிகளை 27 மணி நேரத்தில் அதிரடியாக வீழ்த்திய ராணுவம் !!

கடந்த அக்டோபர் 28ஆம் தேதி இந்திய தரைப்படையின் 18ஆவது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் படையணியின் (ராஜ்புதானா ரைஃபிள்ஸ் ரெஜிமென்ட்) வாகனங்கள் அக்னூர் அருகே சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோது மூன்று பயங்கரவாதிகள் அந்த கான்வாயை சேர்ந்த ஆம்புலன்ஸ் மற்றும் வேறோரு வாகனத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர் அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் எந்த வீரருக்கு காயமோ அல்லது யாருக்கும் மரணமோ ஏற்படவில்லை.

இதனைத் தொடர்ந்து இந்திய தரைப்படை மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை ஆகியவை இணைந்து அக்னூர் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையை துவங்கின இந்த நிலையில் தாக்குதல் நடைபெற்ற 27 மணி நேரத்தில் அதை நடத்திய மூன்று பயங்கரவாதிகளும் ராணுவத்தின் அதிரடி நடவடிக்கையால் கொல்லப்பட்டுள்ளனர், இந்த நடவடிக்கையின் போது ஜம்மு காஷ்மீர் காவல்துறை அதிரடி படை வீரர்கள் வெளிப்புறத்தில் சுற்றி வளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்,

தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் BMP-2 ஷரத் கவச வாகனங்கள் வரவழைக்கப்பட்டன, ராணுவ மோப்பநாய் குழு, 9ஆவது பாரா சிறப்பு படையணி வரவழைக்கப்பட்டன மற்றும் கடைசிகட்ட தாக்குதலுக்கு தேசிய பாதுகாப்பு படை கமாண்டோ படையினரும் களம் இறக்கப்பட்டனர், மேற்குறிப்பிட்ட கவச வாகனம் ஒன்றை இறுதிகட்ட தாக்குதலின்போது பயங்கரவாதி ஒருவன் மீது ஏற்றி ராணுவத்தினர் கொன்றுள்ளனர். தொடர்ந்து பயங்கரவாதிகளின் M4, AK ரக துப்பாக்கிகளும், PKM LMG Light Machine Gun இலகுரக இயந்திர துப்பாக்கி ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த மூன்று பயங்கரவாதிகளும் பாகிஸ்தான் உடனான எல்லை கட்டுப்பாட்டு கோட்டை கடந்து இந்திய காஷ்மீருக்குள் ஊடுருவி இருப்பதாகவும் இவர்கள் பாகிஸ்தான் தரைப்படையின் சிறப்புப்படையான SSG பின்புலம் கொண்டவர்களாக இருக்கலாம் எனவும் இந்திய ராணுவ அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர், இந்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்பது துரதிஷ்டவசமாக ஃபேண்டம் என்ற ராணுவ மோப்பநாய் வீர மரணம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.