சீனாவின் நொரிங்கோ நிறுவனத்தை தோற்கடித்து மொராக்காவில் ஆர்டரை பெற்ற டாடா நிறுவனம்
மொராக்காவில் தொழிற்சாலை அமைத்து அந்நாட்டு இராணுவத்திற்கு 8×8 காலாட்படை கவச வாகனத்தை வழங்கும் ஆர்டரை இந்திய நிறுவனமான டாடா பெற்றது நாம் அனைவரும் ஏற்கனவே அறிந்ததே. இதற்காக நடைபெற்ற போட்டியில் சீன நிறுவனமான நொரிங்கோ- ஐ இந்தியாவின் டாடா நிறுவனம் தோற்கடித்து இந்த ஆர்டரை பெற்றுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. நொரிங்கோ நிறுவனம் தனது டைப்-08 ரக வாகனத்தை மொராக்கோ நாட்டிற்கு வழங்க முன்வந்தது.
இரு நிறுவனங்களுக்கும் இடையே நடைபெற்ற கடினமான போட்டியை அடுத்து இந்திய நிறுவனமான டாடா வெற்றி பெற்றுள்ளது. இது சர்வதேச அளவில் இந்திய நிறுவனத்திற்கு கிடைத்த அங்கீகாரம் ஆகும். சீன நிறுவனம் விலை குறைவான அளிக்க முன்வந்த போதிலும் தரம் மற்றும் செயல்பாடு காரணமாக இந்தியாவின் டாடா நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளுக்கு சீனாவே பிரதானமான தளவாட ஏற்றுமதி செய்யும் நாடாக உள்ளது. ஏற்றுமதிக்கு பிறகு சீனா சர்வீஸ் போன்ற செயல்பாடுகளில் அதிருப்தியுடன் செயல்படும் காரணமாக இந்தியா போன்ற மற்ற நாடுகளின் தளவாடங்களை வாங்க ஆப்பிரிக்க நாடுகள் முன்வருகின்றன. உலக நாடுகளுக்கு ஏற்றுமதி முனைப்புடன் இருக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கு இது நல்ல வாய்ப்பாக அமைகிறது.
டாடா நிறுவனம் தற்போது மொராக்கோ நாட்டில் தொழிற்சாலை அமைக்க உள்ளதால் , மற்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இந்த கவச வாகனத்தை ஏற்றுமதி செய்ய முடியும்.