ரஷ்யா தனது சொந்த கனரக ஆளில்லா ஸ்டீல் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது. இந்த நிகழ்வு ரஷ்யாவின் ட்ரோன் மேம்பாடு திட்டத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. S-70 எனப்படும் ஆளில்லா விமானத்தை தான் ரஷ்யா தனது சுகாய் 57 ரக விமானத்தை கொண்டு சுட்டு வீழ்த்தியுள்ளது.
ரஷ்யா தனது சொந்த ஆள் இல்லாத விமானத்தை சுட்டு வீழ்த்தியது தொடர்பாக காணொளிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. சேதமடைந்த ஆளில்லா விமானம் கீழே நொறுங்கி விழுவது போன்ற காணொளிகள் வெளியாகி வருகிறது. நொறுங்கி விழுந்த விமானம் உக்ரேன் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பகுதிக்குள் விழுந்துள்ளது. நொறுங்கிய பாகத்தில் உள்ள சிவப்பு நட்சத்திரம் அது ரஷ்ய ட்ரோன் தான் என்பதை உறுதி செய்கிறது.
சோதனையின் போது ட்ரோன் தனது கட்டுப்பாட்டை இழந்ததாகவும் அது எதிரிகளின் கைக்கு அகப்படாமல் இருப்பதற்காக ரஷ்யாவே தனது ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இருந்தாலும் தற்போது வரை உண்மையான காரணங்கள் வெளியிடப்படவில்லை.
தற்போது உக்ரேன் அந்த விமானத்தின் உடைந்த பாகங்களை கைப்பற்ற முனைப்பில் இருப்பதாகவும் அவை மீண்டும் ரஷ்யத் தாக்குதலில் சேதப்படுத்துவதற்கு முன்பு உக்ரேன் அதை கைப்பற்றி ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.