55 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து வந்த சீன உளவு பலூனை இந்திய விமான படையைச் சேர்ந்த ரஃபேல் விமானம் வானிலேயே சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் மூலம் அதிக உயரத்தில் இந்தியாவின் தாக்குதல் திறன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் அமெரிக்க விமானப்படையும் தனது ஐந்தாம் தலைமுறை எப் 22 விமானம் மூலம் சீனாவின் உளவு பலூனை சுட்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்விற்கு பிறகு இந்தியாவும் இது போன்ற ஆபத்தை எதிர் கொள்வதற்கான சாத்தியக் கூறுகள் இருந்தது. மேலும் இவற்றை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து இந்திய விமான படையும் ஆலோசனை செய்தது.
இந்திய விமானப் படையின் கிழக்கு கட்டளையத்திற்கு கீழ் உட்பட்ட ரஃபேல் விமான மூலம் சீனாவின் இந்த உளவு பலூனை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் நடந்த சில மாதங்கள் ஆகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தற்போது விமான படை தளபதியாக உள்ள அமர் பிரீத் சிங் அவர்கள் துணை தளபதியாக இருந்தபோது இந்த ஆபரேஷனுக்கான முழு பொறுப்பையும் ஏற்றுள்ளார். தற்போது அவர் இந்திய விமானப்படையின் தலைமை தளபதியாக உள்ளார்.
மேலும் எதிர்காலத்தில் இது போன்ற சம்பவம் நடைபெற்றால் அவற்றை உடனடியாக எதிர் கொள்ள இந்திய விமானப்படை தயாராக உள்ளது.