காஷ்மீரின் கந்தர்பால் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் புகைப்படம் வெளியீடு!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் கந்தர் பால் பகுதியில் கங்கா நீர் மற்றும் சோனு மார்க் ஆகிய பகுதிகளை இணைக்கும் ஸீமார்க் சுரங்கத்தின் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தில் பயங்கரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர் இதில் ஒரு மருத்துவர் மற்றும் ஆறு வெளி மாநில தொழிலாளர்கள் என ஏழு பேர் உயிரிழந்தனர், நேற்று இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் புகைப்படம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது பணியாளர்கள் முகாமில் நிறுவப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் இரண்டு பயங்கரவாதிகள் ஏகே-47 மற்றும் அமெரிக்க தயாரிப்பு எம்-4 ரக இயந்திர துப்பாக்கிகளுடன், கருப்பு மற்றும் சாம்பல் நிற ஷால்களை தோளில் அணிந்து கொண்டு ஞாயிற்றுக்கிழமை இரவு பணி முடித்து உறங்குவதற்கு தொழிலாளர்கள் சென்ற போது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர் இவர்கள் உயரமாக இருந்ததாகவும் தாடிகள் வைத்திருந்ததாகவும் அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

திங்கட்கிழமை அன்று பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் காஷ்மீர் இஸ்லாமிய பிரிவினைவாத பயங்கரவாத இயக்கமான லஷ்கர் இ தொய்பாவால் உருவாக்கப்பட்ட அதன் துணை அமைப்பான TRF The Resistance Front என்ற பயங்கரவாத இயக்கம் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது இந்த தாக்குதலுக்கு மூளையாக இருந்தது ஸ்ரீநகரை சேர்ந்த மேல் குறிப்பிட்ட இயக்கத்தின் தலைவன் ஷேக் சஜாத் குல் ஆவான் மேலும் இந்த தாக்குதலை நடத்தியது காஷ்மீரில் இயங்கி வரும் இந்த அமைப்பின் பயங்கரவாதிகளாக முதல்முறையாக காஷ்மீரிகள் மற்றும் வெளி மாநிலத்தவர் ஒரு சேர குறி வைக்கப்பட்டது தற்போது ஆகும்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தாக்குதலுக்கு மேல் குறிப்பிட்ட தீ ரெஸிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் அமைப்பு ஏறத்தாழ கடந்த ஒரு மாத காலமாக கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு தகவல்களை சேகரித்ததாகவும் இதில் இரண்டு அல்லது மூன்று பயங்கரவாதிகள் ஈடுபட்டு இருக்கலாம் எனவும் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த கோர தாக்குதலை அரங்கேற்றி உள்ளனர் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வெளி மாநில தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல்களில் இது ஒன்று எனவும் கொல்லப்பட்டவர்களில் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களின் பெயர்கள் மருத்துவர் ஷாநவாஸ், சஷி புஷன் அப்ரோல் மற்றும் குர்மீத் சிங் ஆவர்.

தற்போது இந்த தாக்குதல் குறித்து காஷ்மீர் காவல் துறையினர் மற்றும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கூட்டாக விசாரணை நடத்தி வருகின்றனர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தற்போது வரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஏறத்தாழ 40 சந்தேகத்திற்குரிய நபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், இது தவிர தரைப்படை துணை ராணுவ படையினர் மற்றும் காஷ்மீர் காவல் துறையினர் மற்றும் காஷ்மீர் காவல்துறை சிறப்பு நடவடிக்கை குழு கமாண்டோ வீரர்கள் சோனாமார்க் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.