கனடாவில் வசித்து வந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜார் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டான், இதனைத் தொடர்ந்து கனடிய அரசு இந்திய உளவுத்துறை தான் தனது நாட்டில் வசித்து வந்த ஹர்தீப் சிங் நிஜாரை சட்டவிரோதமாக கொலை செய்ததாக குற்றம் சாட்டியது மேலும் இந்த விவகாரத்தில் கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் இந்திய தூதர் மற்றும் மிக முக்கிய அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதாகவும் அதனால் அவர்களுக்கு எதிராக விசாரணை நடவடிக்கைகளை துவங்க உள்ளதாகவும் அறிவித்திருந்தது இந்த விவகாரம் காரணமாக இந்தியா மற்றும் கனடா இடையே மிக தீவிரமான பிரச்சினைகள் ஏற்பட்டு இரு நாடுகளுக்கு இடையேயான ராஜாங்க உறவுகள் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மோசமான நிலையை சந்தித்துள்ளன.
இந்த நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியு கனடா தலைநகர் ஒட்டாவா நகரத்தில் கனடாவின் பொது தேர்தல் மற்றும் ஜனநாயக அமைப்புகளுக்குள் இருக்கும் வெளிநாட்டு தலையீடுகள் பற்றிய விசாரணை குழு முன்பு ஆஜராகி பேசும் போது ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கில் இந்தியாவுக்கு எதிராக கனடா அரசிடம் ஆதாரங்கள் எதுவும் இல்லை என்ற உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார் அதே நேரத்தில் தங்கள் அரசுக்கு இது பற்றிய உளவுத் துறை தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், ஆனால் அதற்கான ஆதாரங்கள் மட்டுமே தங்களிடம் இல்லை எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர் அந்த விசாரணை குழுவின் முன்பு பேசும்போது கனடா அரசு இந்திய அரசிடம் ஒத்துழைப்பு கூறியதாகவும் ஆனால் இந்திய அரசு தங்களிடம் ஆதாரம் கேட்டதாகவும் ஆகவே கனடா அரசு இந்திய தரப்பிடம் இந்த விவகாரத்தில் ஒத்துழைக்குமாறு கூறியதாகவும் மேலும் விசாரணை நடத்துமாறு கூறியதாகவும் இந்திய அரசு இதை நீங்கள் எப்படி உறுதியாக கூறுகிறீர்கள் என கேட்டதாகவும் இது இது பற்றிய ஆதாரங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என கேட்டதாகவும் அதற்கு கனடா தரப்பில் உங்களுடைய அமைப்புகளுக்குள் நடக்கும் விவகாரங்கள் ஆகவே இதை நீங்கள் விசாரித்து எங்கள் தரப்புடன் ஒத்துழைக்க வேண்டும் என கனடா அரசு தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசும் போது இந்திய தூதர் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் கனடிய குடிமக்கள் பற்றிய தகவல்களை சேகரித்து அவற்றை இந்திய நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்ணோயின் கும்பலுக்கு பரிமாறியதாகவும் ஆனால் இவை கனடா காவல்துறை நடத்திய செய்தியாளர் சந்திப்பிற்கு பிறகு கனடா பிரதமர் கூறிய அவரது சொந்த வாக்குகளுக்கு எதிராக அமைந்துள்ளது அதாவது அந்த நேரத்தில் அவர் கனடா காவல் துறை கண்டுபிடித்துள்ள ஆதாரங்களை கடந்து சென்றுவிட முடியாது எனவும் இதன் மூலம் ஒரு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அதாவது கனடாவின் பொது மக்களின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் கிரிமினல் செயல்பாடுகளுக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் சொந்த நாட்டில் கனடிய மக்கள் பாதுகாப்பாக உணர வேண்டியதை உறுதி செய்வது அரசின் கடமை எனவும் கூறியிருந்தார் தற்போது தங்களிடம் ஆதாரங்கள் இல்லை எனக் கூறியதன் மூலமாக முன்னர் கனடா காவல்துறை ஆதாரங்களை சேகரித்து இருப்பதாக கூறியது பொய்யாகியுள்ளது.
இதற்கிடையே அமெரிக்காவில் வசித்து வரும் காலிஸ்தான் பயங்கரவாதி குர்பந்த்வந்த் சிங் பண்ணுன் கடந்த இரண்டு முதல் மூன்று ஆண்டு காலமாக கனடா பிரதமர் அலுவலகத்துடன் தான் தொடர்பில் உள்ளதாகவும் தான் அளித்த பல்வேறு ஆதாரங்கள் அடிப்படையில் தான் கனடா பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கனடாவில் இந்திய உளவுத்துறையின் செயல்பாடுகள் குறித்த பல்வேறு தகவல்களை தான் அளித்ததாகவும் இந்த செயல்பாடுகள் மூலமாக கனடா அரசின் நீதி சட்ட ஒழுங்கு மற்றும் தேசிய பாதுகாப்பு பற்றிய உறுதித்தன்மை வெளிபட்டுள்ளதாகவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்