இறுதிக்கட்டத்தை எட்டும் நேத்ரா அவாக்ஸ் திட்டம் – அடுத்து நடக்கப்போவது என்ன?
இந்தியாவின் நேத்ரா எனப்படும் Airborne early warning and Control system திட்டம் தனது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. விரைவில் இந்தத் திட்டத்திற்கு Final operation clearance (FOC) வழங்கப்பட உள்ளது.
இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு நிறுவனம் இந்த வருட இறுதியில் நேத்ரா திட்டத்திற்கான FOC வாங்க உள்ளது. தற்போது இந்திய விமான படைப்பு விமானங்கள் தேவையாக உள்ளன. இந்த திட்டம் வெற்றிகரமாக முடியும் பட்சத்தில் இந்த விமானப்படைக்கான தேவையை டி ஆர் டி ஓ பூர்த்தி செய்யும்.
இப்போது இந்திய விமானப்படை இரண்டு நேத்ரா AEW& CS விமானங்களை இயக்கி வருகிறது. இவை பிரேசிலின் எம்பரேயர் விமானங்களை கொண்டு மேம்படுத்தப்பட்டவை ஆகும். மேலும் மூன்றாவது அவாக்ஸ் விமானம் சோதனைக்காக டிஆர்டிஓ மற்றும் விமானப்படை பயன்படுத்தி வருகிறது.
இந்த வருடம் மேலும் ஆறு அவாக்ஸ் விமானங்களை வாங்க இந்திய விமானப்படை முடிவெடுத்தது.இந்த விமானங்கள் முன் உள்ள அவாக்ஸ் அமைப்புகளை விட அதிநவீனமாகவும் திறன் கொண்டதாக இருக்கும்.இந்த அமைப்புகள் A321 விமானங்களில் பொருத்தப்பட்டு விமானப்படையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் இந்திய விமானப்படைக்கு மிக முக்கியமான திட்டம் ஆகும். வான் பகுதியை கண்காணித்து அதற்கேற்ப திட்டங்களை வகுக்க இந்த விமானங்கள் விமானப்படைக்கு உதவும்.