மாலதி அதிபர் முகமது மூய்சூ தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது சபையின் 79 ஆவது வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார் அங்கு ஐக்கிய நாடுகள் பொது சபையில் உரையாற்றிய அவர் பின்னர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு பேசினார்.
அதாவது புகழ்பெற்ற பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் டீன்ஸ் லீடர்ஷிப் சீரிஸ் என்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட அங்கு அவரிடம் மாலத்தீவு அரசு இந்தியாவிற்கு எதிராக சீனாவிற்கு ஆதரவாக செயல்படுகிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது அப்போது அதற்கு பதில் அளித்த மாலத்தீவு அதிபர் முகமது மூய்சூ மாலத்தீவு அரசு ஒருபோதும் இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டதில்லை என கூறினார்.
அதாவது நாங்கள் ஒருபோதும் ஒரு நாட்டிற்கு எதிராகவும் செயல்பட்டதில்லை மாலத்தீவு அரசின் செயல்பாடுகள் இந்தியாவிற்கு எதிரானது அல்ல மாறாக மாலத்தீவு மண்ணில் வெளிநாட்டு ராணுவத்தின் இருப்பு எங்களுக்கு ஒரு பிரச்சினையாக இருந்து வந்தது மாலத்தீவு நாட்டின் மக்கள் ஒரு வெளிநாட்டு ராணுவ வீரர் கூட மாலத்தீவு மண்ணில் இருப்பதை விரும்பவில்லை என கூறியதாகவும் மாலத்தீவு நாட்டின் ஆன்லைன் செய்தி ஊடகமான அதாது செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தற்போதைய மாலத்தீவு அதிபர் முகமது மூய்சூ அங்கு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது முதல் சீனா ஆதரவு நிலைப்பாடு கொண்டவராக அறியப்பட்ட அவர் மாலத்தீவில் இருந்து 90 இந்திய ராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்ன பிரச்சனை செய்ததை தொடர்ந்து இந்தியா படை வீரர்களை பின்பற்றி அவர்களுக்கு பதிலாக சிவிலியன் பணியாளர்களை மாலத்தீவில் நிறுத்தியுள்ளது. இவர்கள் அங்கு வானூர்திகளை சரிபார்க்கும் பராமரிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல மாலத்தீவு அதிபர் மேலும் பேசும்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தனது அமைச்சரவை சகாக்கள் அருவருக்கத்தக்க கருத்துக்களை வெளியிட்டதையும் அதைத் தொடர்ந்து அவர்களுக்கு எதிராக தான் நடவடிக்கை எடுத்ததையும் சுட்டிக்காட்டி பேசினார் அப்படி பேசும் போது யாரும் யாருக்கு எதிராகவும் இத்தகைய கருத்துக்களை தெரிவிக்கக் கூடாது அது ஒரு நாட்டின் தலைவராக இருந்தாலும் சரி அல்லது சாதாரண மனிதனாக இருந்தாலும் சரி ஒவ்வொரு மனிதருக்கும் சுயமரியாதை உண்டு இத்தகைய செயல்பாடுகளை நான் பொறுத்துக் கொள்ளவே மாட்டேன் ஆகவே அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தேன் என கூறினார்.
இந்தாண்டில் ஆரம்பத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் லட்சத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் விதமாக புகைப்படங்கள் பதிவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து மாதத்தில் விளையாட்டு துறையில் உள்ள துணை அமைச்சர்கள் இந்திய பிரதமருக்கு எதிராக மிகவும் மோசமான அருவருக்கத்தக்க கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டனர் இதைத்தொடர்ந்து இந்திய அரசு இதற்கு எதிராக மாலத்தீவு அரசிற்கு கண்டனங்கள் தெரிவித்தது மேலும் அதைத் தொடர்ந்து மாலத்தீவு அதிபர் அந்த துணை அமைச்சர்களை தற்காலிக பதவி நீக்கம் செய்ததும் கூடுதல் தகவலாகும்