குவாட் நாடுகளின் கடற் படைகள் பங்கேற்கும் மலபார் கடற்படை போர் பயிற்சி இந்த வருடம் இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் குவாட் நாடுகளின் உறுப்பினர்களான அமெரிக்கா, ஜப்பான் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய நாட்டின் கடற்படைகள் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடும்.
இந்தப் பயிற்சி இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக harbour phase மற்றும் இரண்டாம் கட்டமாக sea phase நடைபெறும். இந்தப் பயிற்சியில் நான்கு நாடுகளின் கடற்படையைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
இந்த பயிற்சியில் நான்கு நாடுகளின் கடற்படையைச் சேர்ந்த போர்க்கப்பல்கள், நீர் மூழ்கிகள், போர் விமானங்கள் வானூர்திகள் ஆகியவை பங்கேற்கும். ஆஸ்திரேலியா கடற்படை சார்பில் Anzac ரக பிரைகேட் கப்பலான HMAS Stuart போர் கப்பலும் மற்றும் பி8 விமானமும் அமெரிக்க கடற்படை சார்பில் arleigh burke ரக டெஸ்ட்ராயர் கப்பலான USS dewey கப்பலும், நீண்டதூர ரோந்து விமானமான பி8 விமானமும் பங்கேற்கும்.
ஜப்பான் சார்பில் Murasame ரக டெஸ்ட்ராயர் கப்பலான JS ariake கப்பலும் பங்கேற்க உள்ளது. இது தவிர நான்கு நாட்டு கடற்படையின் சிறப்பு அடைவிற்கும் இந்த பயிற்சியில் பங்கேற்க உள்ளனர். நான்கு நாடுகளின் கடற்சார் ஒருங்கிணைப்பு தன்மை மற்றும் உறவுகளை மேம்படுத்தவும், போர்க்காலங்களில் இணைந்து செயல்படவும் இந்த பயிற்சிகள் உதவும்.