ஹிஸ்புல்லா இயக்கத்தால் தாக்கப்பட்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இல்லம், தவறு இழைத்து விட்டீர்கள் எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் பிரதமர் !!

ஹமாஸ் இயக்கத்தின் தலைவன் யாஹ்யா சின்வர் கொல்லப்பட்ட சில நாள் கழித்து நேற்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூ வசிக்கும் சிசேரியா நகரத்தில் உள்ள இஸ்ரேலிய பிரதமரின் இல்லத்தின் மீது லெபனானில் இருந்து இயங்கும் ஹிஸ்புல்லா இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு ஏவிய ஒரு தற்கொலை தாக்குதல் ஆளில்லா வானூர்தி மோதி வெடித்தது இந்த தாக்குதல் நேற்று உலகம் முழுவதும் குறிப்பாக மத்திய கிழக்கு முழுவதும் மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதல் பற்றி இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவின் செய்தி தொடர்பாளர் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்புகளில் இந்த தாக்குதல் நடைபெற்ற போது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா நெதன்யாகூ ஆகியோர் அந்த இல்லத்தில் இல்லை எனவும் இந்த தாக்குதலில் பெரிய அளவில் பொருட்சேதமோ வேறு பாதிப்புகளோ ஏற்படவில்லை எனவும் மனித உயிர்களுக்கு எவ்வித சேதமோ காயமோ ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு சற்று முன்னதாக இஸ்ரேலிய ராணுவம் இந்த தற்கொலை தாக்குதல் ஆளில்லா வானூர்தி லெபனானில் இருந்து ஏவப்பட்டதாகவும் மேலும் வேறு இரண்டு ஆளில்லா தற்கொலை தாக்குதல் வானூர்திகளும் ஏவப்பட்டதாகவும் அவற்றில் இரண்டை இஸ்ரேலிய இராணுவம் சுட்டு வீழ்த்தியதாகவும் ஒன்றுதான் இஸ்ரேலிய பிரதமரின் வீட்டை தாக்கியதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது அதே நேரத்தில் லெபனானில் இஸ்ரேலுக்கு எதிராக சண்டையிட்டுக் கொண்டிருக்கும் ஹிஸ்புல்லா இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு உடனடியாக இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை லெபனானில் பிஸ்மில்லா பிராந்திய கட்டளையகத்தை இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி அழித்த அடுத்த நாள் இந்த தாக்குதல் நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூ, என்னையும் எனது மனைவியையும் ஈரானிய ஏஜெண்டுகள் கொல்ல முயற்சித்து மிகப்பெரும் தவறு செய்து விட்டதாகவும் இது என்னையோ இஸ்ரேலையோ எங்கள் தலைமுறைகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் போர் நோக்கங்களை தடை செய்து விடாது எனவும் இஸ்ரேலின் குடிமக்களை தாக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் அதற்கு மிக அதிகமான விலையை கொடுக்க வேண்டி இருக்கும் எனவும் உங்கள் பயங்கரவாதிகளை நாங்கள் தொடர்ந்து அழிப்போம் காசாவில் இருந்து இஸ்ரேலில் பழைய கைதிகளை மீட்போம் வடக்கிலிருந்து எங்கள் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் தலைமுறைகளுக்கு இந்தப் பிராந்தியத்தில் பாதுகாப்பு நிலவரத்தை அடியோடு மாற்றி அமைப்போம் எனவும் அதிரடி எச்சரிக்கையை விடுத்துள்ளார்