ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் திட்டங்களை வெளியிட்டதாக கூறப்படும் ஈரான் வம்சாவளி அமெரிக்க பாதுகாப்பு துறை பெண் அதிகாரி !!

சமீபத்தில் ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் திட்டங்கள் பற்றிய முக்கிய தகவல்கள் மற்றும் விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனில் இருந்து கசிய விடப்பட்டு ஈரான் பின்னணி கொண்ட telegram கணக்கு ஒன்றில் வெளியிடப்பட்டது உலக அளவில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்படுத்தியது, இந்த விவகாரம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான இருதரப்பு பாதுகாப்பு உறவுகளின் நம்பகத்தன்மையை பாதித்த நிலையில் தற்போது இந்த ஆவணங்களை கசிய விட்டதாக ஒரு அமெரிக்க அதிகாரி மீது சந்தேகம் எழுந்துள்ளது.

அரியான் தபாத்தபாய் என்கிற ஈரானிய வம்சாவளி அமெரிக்க பெண்மணி தற்போது அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சகத்தில் அமெரிக்க ராணுவத்தின் சிறப்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பான துணை பாதுகாப்புச் செயலாளரின் பணியாளர்களின் தலைவராக பணியாற்றி வருகிறார் இதன் காரணமாக உலகம் முழுவதும் குறிப்பாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க கடற்படை மற்றும் சிறப்புப்படை நகர்வுகள் பற்றிய அனைத்து தகவல்களும் இவர் பார்வைக்கு உட்பட்டதாகும் எனவும் இவர்தான் ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் திட்டங்களை கசிய விட்டவர் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இவர் ஏற்கனவே பலமுறை ஈரானிய அதிகாரிகள் அமைச்சர்கள் மற்றும் ஈரான் ராணுவ அதிகாரிகள் மேலும் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர படையின் அதிகாரிகள் ஆகியோரை தொடர்பு கொண்டதாகவும் அவர்களிடம் பல்வேறு விவகாரங்கள் குறித்து மின்னஞ்சல் மூலமாக கருத்துக்கள் கேட்டதாகவும் அவர்களை பலமுறை சந்தித்ததாகவும் நெருக்கமான உறவுகளை கொண்டிருந்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

ஈரானுக்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி ராபர்ட் மாலெயும் இந்த விவகாரத்தில் தொடர்புடையவராக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது இது தவிர கடந்த ஆண்டு இவர் ஈரானிய உளவுத்துறை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளித்ததாக கூறப்படுகிறது மேலும் இவர் தான் அரியான் தபாத்தபாயை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரியாக நியமனம் செய்வதில் முக்கிய பங்காற்றியதாகவும் கூறப்படுகிறது பின் நாட்களில் ராபர்ட் மீதான குற்றச்சாட்டுகள் காரணமாக அவரது அதிகாரங்கள் பறிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கதாகும், இவர்கள் இருவருடன் மாஹிர் பித்தார் என்பவர் மீதும் சந்தேகங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் இந்த விவகாரத்திற்கும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள அரியான் தபாத்தபாய்க்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அறிக்கை வெளியிட்டுள்ளது அதாவது சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த பென்டகன் செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் பேட் ரைடர் அரியான் தபத்தபாய் என்கிற அந்த அதிகாரி மீது எவ்வித சந்தேகம் இல்லை எனவும் அவர் விசாரணை வளையத்தில் உட்பட்டவர் அல்ல எனவும் தெரிவித்துள்ளது கூடுதல் தகவலாகும்