சாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள்பாகிஸ்தானுக்கு பயணமாக உள்ளார். அக்டோபர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இந்த மாநாடு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் பயணிக்க உள்ளார்
ஆனால் இந்த பயணத்தின் போது பாகிஸ்தானுடன் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்க போவதில்லை என்று கூறியுள்ளார். ஜெய்சங்கர் அவர்களின் இந்த பாகிஸ்தான் பயணம் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பாகிஸ்தான் வெளி விவகாரத்துறை அமைச்சர் குர்ஷித் முகமது அவர்கள் இது ஒரு முக்கியமான நிகழ்வு எனக் கூறியுள்ளார்.
இந்த பயணம் குறித்து மேலும் பேசிய பாகிஸ்தான் வெளி விவகார துறை அமைச்சர் இந்திய அமைச்சரின் இந்த பயணமானது இரு நாடுகளுக்கு இடையே உள்ள பதற்றத்தை குறைக்க உதவும் என அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று சீன எஞ்சினியர்கள் சென்ற கார்கள் மீது பலுசிஸ்தான் விடுதலைப் போராளிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு சீன பொறியியலாளர்கள் உயிரிழந்தனர். எனவே அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த சந்தேகங்கள் எழுந்துள்ளன.