அமெரிக்காவிடமிருந்து தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்த அடிப்படையில் தொழில்நுட்பம் பெற்று இந்தியாவில் தயாரிக்கப்படும் Trinetra திரி நேத்ரா சிறிய ரக ஆளில்லா கண்காணிப்பு விமானங்களில் 700ஐ வாங்குவதற்கு இந்திய தரைப்படை ஏரோ ஆர்க் என்ற இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஸ்கை டியோ SKYDIO என்ற நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட Skydio Scout ஸ்கைடியோ ஸ்கவுட் என்ற சிறிய ரக ஆளில்லா கண்காணிப்பு வானூர்தியை தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாநகரத்தை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் ஏரோ ஆர்க் Aero Arc என்ற நிறுவனம் தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்த அடிப்படையில் தொழில்நுட்பத்தை பெற்று இந்தியாவிலேயே இந்திய தேவைகளுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்து தயாரித்து வருகிறது.
இந்த சிறிய ரக ஆளில்லா கண்காணிப்பு வானூர்தியானது ஜிபிஎஸ் அமைப்பின் உதவி இன்றி தானாகவே இயங்கும் திறன் கொண்டதாகும் மேலும் இதனை எந்த விதமான சூழலிலும் பயன்படுத்திக் கொள்ள முடியும் மேலும் மிகுந்த நெருக்கமான சூழல் மிகுந்த பகுதிகளிலும் நகரும் இலக்குகளை மிக லாவகமாக துல்லியமாக தொடர்ந்து கண்காணிக்கும் ஆற்றலையும் இந்த ஆளில்லா கண்காணிப்பு வானூர்தி பெற்றுள்ளது.
இந்த த்ரிநேத்ரா பெரிய ரக ஆளில்லா கண்காணிப்பு வானூர்தி இந்திய தரைப்படையின் கண்காணிப்பு மற்றும் வேவு பார்த்தல் திறன்களை பன்மடங்கு அதிகரிக்கும் என கூறப்படுகிறது இவற்றின் தானியங்கி பறக்கும் திறன்கள் மற்றும் இதர அதிநவீன வசதிகள் காரணமாக ராணுவ வாகன கான்வாய்களை மேலிருந்து கண்காணித்து பாதுகாப்பு அளிக்கவும் உதாரணமாக புல்வாமா போன்ற சம்பவங்கள் நிகழ்பெராமல் தடுக்கவும் முடியும் மேலும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது மேலிருந்து கண்காணித்து தகவல்களை அளிக்கவும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்