சமீபத்தில் இந்திய விமானப்படை சீனாவுடனான கிழக்கு எல்லையோர பகுதியில் போலி செயற்கைகோள்கள் என அறியப்படும் சீனாவின் மிக அதிக உயரத்தில் பறக்கக்கூடிய கண்காணிப்பு மற்றும் உளவு பார்க்கும் திறன் கொண்ட பலூன்களை வானிலேயே சுட்டு வீழ்த்தும் திறன்களை நிரூபித்துக் காட்டியது அதாவது சுமார் 55 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த இத்தகைய இலக்கை இந்திய விமான படையின் அதிநவீன ரபேல் போர் விமானம் அடையாளம் கண்டுபிடித்து ஏவுகணையை ஏவி வெற்றிகரமாக தாக்கி அழித்தது.
இந்த சம்பவம் சில மாதங்கள் முன்பு நடைபெற்றதாக இந்திய விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த பயிற்சியை தற்போதைய இந்திய விமானப்படையின் தலைமை தளபதி ஏர் சீப் மார்ஷல் அமர் பிரீத் சிங் அந்த நேரத்தில் விமானப்படை துணை தளபதியாக இருந்தபோது அவரது மேற்பார்வையில் நடத்தியதாகவும், அப்போது தற்போதைய விமானப்படை துணை தளபதி ஏர் மார்ஷல் சுஜித் பிரபாகர் தர்கார் கிழக்கு பிராந்தி விமானப்படை தளபதியாக இருந்தார் மேலும் தற்போதைய கிழக்கு பிராந்திய விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் சூரத் சிங் அப்போது இந்திய விமானப்படையின் நடவடிக்கைகள் பிரிவு இயக்குனராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பயிற்சியின் போது இந்திய விமானப்படை நிஜமான சீன உளவு பலூன்களை விடவும் அளவில் சிறிய ஒரு பலூனை அதில் ஒரு கனமான பறக்கும் கருவியை வைத்து பறக்க விட்டதாகவும் அந்த பலூன் சுமார் 55 ஆயிரம் அடி உயரத்தை எட்டிய போது இந்திய விமானப்படை தனது அதி நவீன ரபேல் போர் விமானம் ஒன்றை அனுப்பி போர் விமானத்திலிருந்து வானில் உள்ள இலக்குகளை தாக்க பயன்படும் ஒரு வான் இலக்கு ஏவுகணையை ஏவி அதனை வெற்றிகரமாக தாக்கி அளித்ததாக கூறப்படுகிறது அனேகமாக இந்த ஏவுகணை ரபேல் விமானத்துடன் பிரான்ஸ் நமக்கு விற்பனை செய்த மைக்கா MICA Air to Air Missile ஏவுகணையாகத்தான் இருக்கும் என கூறப்படுகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஆரம்ப கட்டத்தில் அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்திற்கு அருகே அட்லாண்டிக் பெருங்கடல் மீது பறந்து கொண்டு இருந்த ஒரு பிரம்மாண்ட சீன உளவு பலூன் ஒன்றை அமெரிக்க விமானப்படை தனது அதிநவீன ஐந்தாம் தலைமுறை போர் விமானமான எப் 22 F-22 RAPTOR ஒன்றை அனுப்பி ஒரு Air Interception Missile AIM – 9 Sidewinder வானிலக்கு ஏவுகணையை ஏவி அதை சுட்டு வீழ்த்தியது, பிறகு கடல் பகுதியில் விழுந்த இந்த பலூனின் பாகங்களை மீட்டெடுத்து FBI ஆய்வகத்திற்கு அனுப்பி இது பற்றி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது பின்னர் இது பற்றி பேசிய அமெரிக்க அதிபர் ஜோப் ஐடன் இரண்டு ரயில் பெட்டிகள் அளவிலான உணவு கருவிகள் இந்த பலூனில் இருந்ததாகவும் ஆனால் இது மிகப்பெரிய பாதுகாப்பு பிரச்சனையை ஏற்படுத்தவில்லை எனவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்திற்கு பிறகு ஒரே வாரத்திற்குள் இது போன்ற இரண்டு சம்பவங்கள் அமெரிக்காவில் அப்போது நடைபெற்றதாக கூறப்படுகிறது அதே போல இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் இத்தகைய பலூன்கள் தென்பட்டதாகவும் ஆனால் ஒன்று இரண்டு நாட்களில் அவை மீண்டும் மாயமாகியதாகவும் அல்லது அந்த இடத்தை விட்டு வேறு பகுதிக்கு நகர்ந்து சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது அப்போது இது சார்ந்த நடவடிக்கைகளை இந்திய விமானப்படை எடுக்கவில்லை ஆனால் தற்போது எதிர்காலத்தில் இத்தகைய சூழல்களை எதிர்கொள்ள தயாராகும் விதமாக இந்திய விமானப்படை நடவடிக்கை எடுத்து வருவது மகிழ்ச்சி அளிக்கும் தகவலாகும்.
சீனாவின் இந்த உளவு செயற்கைக்கோள்கள் ஏதோ ஒரு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நகர்வதாக சந்தேகிக்கப்படுகிறது கடந்த 2023 அமெரிக்க பலூன் சம்பவத்திற்கு பிறகு நடைபெற்ற ஆய்வில் இந்த பலூன்களில் நகர்வதற்கு ஏதுவாக ஒரு Propeller அமைப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது அப்படித்தான் இந்த பலூன் சீனாவில் இருந்து தென் கொரியா ஜப்பான் வழியாக அட்லாண்டிக் பெருங்கடலில் பயணித்து அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் வழியாக வட அமெரிக்கா கண்டத்தில் நுழைந்து கனடா வழியாக பயணித்து பின்னர் அமெரிக்காவின் வடமேற்கு பகுதி வழியாக நுழைந்து இறுதியாக தென் கிழக்கில் உள்ள தெற்கு கரோலினா மாகாணத்தை தாண்டி சற்று தூரம் அட்லாண்டிக் பெருங்கடலில் பயணித்த பிறகு சுட்டு வீழ்ததப்பட்டது கூடுதல் சிறப்பு மிக்க தகவலாகும்