இந்திய விமானப்படையின் தலைமை தளபதி ஆர் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங் சமீபத்தில் பேசும்போது சுமார் 59 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கடந்த 1965 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்திய விமானப்படைக்கு இருந்த பலத்தை விட தற்போது பலம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார் அதாவது கடந்த 1965 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் இருந்த போர் விமான படையணிகளின் எண்ணிக்கையை விட தற்போது 2024 ஆம் ஆண்டில் இந்திய விமானப்படையில் இருக்கும் போர் விமான படையணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக கூறியுள்ளார்.
இந்திய விமானப்படையில் தற்போது 31 போர் விமான படையணிகள் மட்டுமே உள்ளன இது இந்திய விமானப்படையின் அங்கீகரிக்கப்பட்ட போர் விமான படையணிகளின் எண்ணிக்கையான 42ஐ விட ஒன்பது படை அணிகள் குறைவாகும், ஒரு படையணிக்கு 18 விமானங்கள் வீதம் இந்த ஒன்பது படை அணிகளுக்கு 162 போர் விமானங்கள் வரும், தற்போதுள்ள 31 போர் விமான படையணிகளில் 558 போர் விமானங்கள் உள்ளன, அங்கீகரிக்கப்பட்ட 42 படையணிகளுக்கு 756 போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் இருக்க வேண்டும்.
கடைசியாக கடந்த 1996 ஆம் ஆண்டு தான் இந்திய விமான படையின் பலம் மிக அதிகமாக இருந்தது அந்த சமயத்தில் இந்திய விமானப்படையில் 41 போர் விமான படையணிகள் இருந்தன அதாவது 738 போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் இருந்தன, அதன் பிறகு படிப்படியாக இந்திய விமானப்படையில் பழைய விமானங்கள் படை விலக்கம் செய்யப்பட்டன குறிப்பாக இந்திய விமானப்படையின் முதல் சூப்பர்சானிக் போர் விமானமான சவப்பெட்டி என அழைக்கப்பட்ட 21 போர் விமானங்கள் அதிக அளவில் இருந்ததால் அவற்றை படை விலக்கம் செய்த போது இந்திய விமானப்படையின் பலம் பெருமளவில் குறைந்தது.
இந்திய விமானப்படையின் தலைமை தளபதி ஏர் சீப் மார்ஷல் அமர் பிரீத் சிங் தனது வருடாந்திர ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து பேசும் போது இந்திய தயாரிப்பு இலகு ரக தேஜஸ் போர் விமானத்தை அதிக அளவில் தயாரித்து படையில் இணைப்பதன் முக்கியத்துவத்தை அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்தார் மேலும் பல திறன் போர் விமானங்களை படையில் இணைக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி பேசினார், அந்த வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய விமானப்படைக்கு சுமார் 114 பல திறன் போர் விமானங்களை வாங்குவதற்கான திட்டம் துவங்கப்பட்டது ஆனால் ஆறு ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை இந்தத் திட்டத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது கவலைக்குரிய விஷயமாகும்.
இது பற்றி இந்திய விமானப்படை தளபதி விளக்கம் அளிக்கும்போது போர் விமானங்களை கொள்முதல் செய்வது அத்தனை எளிதான செயல் அல்ல மாறாக இது மிகவும் பொறுமையாக நேரம் எடுத்து செய்ய வேண்டிய செயலாகும் எனவும் போர் விமானங்களை வாங்குவதோடு மட்டும் பிரச்சனை தீர்ந்து விடாது போர் விமானங்களை வாங்கிய பிறகு அந்த விமானங்களில் நமது விமானிகள் போதிய நேரம் பறந்து பயிற்சி பெறவும் அனுபவம் பெறவும் வேண்டியதும் அவசியமாகும், ஆகவே தற்போது இந்திய விமானப்படை இருப்பதை வைத்து போரிடுவதற்கு தயாராகி வருவதாகவும் படையில் உள்ள விமானங்களை பராமரிப்பது மேம்படுத்துவது மற்றும் அது சார்ந்த பயிற்சிகளை படையினருக்கு அளிப்பது ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
வருகிற ஆண்டு அதாவது கடைசி இரண்டு மிக் 21 போர் விமான படையணிகள் படை விலக்கம் செய்யப்படும், இது மேலும் இந்தியாவின் போர் விமான படையணிகளின் எண்ணிக்கையை குறைத்து 29 ஆக்கிவிடும் மேலும் படிப்படியாக மிக் 29 ஜாகுவார் போன்ற விமானங்களும் படையிலிருந்து விலக்கப்படும் சூழல் வருகிறது ஆகவே தேசிய பாதுகாப்பு முன்னிட்டு அதற்கு முக்கியத்துவம் கொடுத்து இந்திய விமானப்படையின் வலியுறுத்தலை கேட்டு இந்திய அரசு அதிக அளவில் தேஜாஸ் போர் விமானங்களை தயாரிப்பதிலும் 114 பல திறன் போர் விமானங்களை வாங்குவதிலும் ஆம்கா போர் விமான திட்டத்திலும் அதிக கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயம் என்றால் மிகை ஆகாது.