நெஞ்சை உலுக்கும் சம்பவம் ! அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட ராணுவ அதிகாரி தம்பதிகள்

அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட ராணுவ அதிகாரி தம்பதிகள்; எங்களது இறுதி சடங்குகளை அருகருகே செய்யுங்கள் எனக் கடிதம் எழுதி வைத்த மனைவி !!

உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ரா விமானப்படை தளத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று இந்திய விமானப்படையில் பிளைட் லெப்டினன்ட் அந்தஸ்தில் அதிகாரியாக பணிபுரியும் தீன் தயாள் தீப் எனும் 32 வயதான அதிகாரி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இந்த செய்தியை கேட்ட ராணுவ நர்சிங் பிரிவில் பணியாற்றி வரும் அவரது மனைவியான 28 வயதான கேப்டன் ரேணு தன்வார் தலைநகர் தில்லியில் ராணுவ கண்டோன்மெண்டில் உள்ள விருந்தினர் மாளிகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அடுத்தடுத்து 250 கிலோ மீட்டர் தொலைவில் ராணுவ தம்பதிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பையும் சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பிளைட் லெப்டிநன்ட் தீன் தயாள் தீப் பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார் கேப்டன் ரேணு தன்வார் ராஜஸ்தான் மாநிலம் ஜீன்ஜீனு பகுதியை சேர்ந்தவர் ஆவார், இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர் இதுவரை பிளைட் லெப்டினென்ட் தீன் தயாள் தீப் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை ஒருவேளை தம்பதிகளுக்கிடையே ஏதேனும் பிரச்சினை இருந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக ஆக்ரா காவல் இணை ஆணையர் மாயங்க் திவாரி ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

முதலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிளைட் லெப்டிநெண்ட் தீன் தயாள் தீப் தற்கொலை செய்து கொள்வதற்கு முந்தைய நாள் விமானப்படை தளத்தில் இரவு தனது சக அதிகாரிகளுடன் இணைந்து இரவு உணவு உண்டதாகவும் பின்னர் அவர்களுடன் நீண்ட நேரம் மகிழ்ச்சியுடன் பேசியதாகவும் ஜோக் அடித்ததாகவும் பின்னர் இரவு உறங்க சென்றதாகவும் ஆனால் அவர் அப்படி செல்லும்போது அவரது முகத்தில் எவ்வித கவலையோ சங்கடமோ அல்லது தற்கொலையை தூண்டும் அளவிற்கு ஏதேனும் பாரம் இருப்பதாகவோ தெரியவில்லை எனவும் அவரது சக அதிகாரிகள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர் அடுத்த நாள் காலை மிக நீண்ட நேரம் ஆகியும் அவரது அறை திறக்கப்படாமல் அவரும் வெளியே வராமல் இருந்த நிலையில் கதவை உடைத்து அறையை திறந்து பார்த்தபோது அவர் தற்கொலை செய்தது தெரிய வந்ததாக விமானப்படை நிலைய அதிகாரிகள் மற்றும் விமானப்படை காவல்துறையினர் உத்திரபிரதேச காவல்துறையிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

கேப்டன் ரேணு தன்வார் உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ரா நகரத்தில் உள்ள ராணுவ மருத்துவமனையில் பணியாமத்துப்பட்டிருந்த நிலையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த தனது தாயார் கௌசல்யா அவர்களின் சிகிச்சைக்காக தனது சகோதரருடன் தலைநகர் தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அங்கு தில்லி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்த அவர் செவ்வாய்க்கிழமை அன்று தனது கணவரின் மரண செய்தி கேட்டு அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார் அதற்கு முன்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தில் தங்கள் இருவரையும் அருகருகே வைத்து கைகளை ஒன்றாக வைத்து இறுதி சடங்குகள் செய்யுமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.

இவர்களின் மரணத்தை அடுத்து இருவரின் உறவினர்களும் குடும்பத்தினரும் இருவரது உடல்களையும் பெற்று இறுதிச் சடங்குகள் செய்வதற்கு தீர்மானித்தனர் கேப்டன் ரேணு தன்வாரின் கடைசி ஆசை நிறைவேற்றப்படாமலேயே பிளைட் லெப்ட்நெண்ட் தீன் தயாள் தீப் உடலுக்கு ஆக்ராவில் தாஜ்மஹால் அருகே உள்ள மயானத்தில் ராணு மரியாதையோடு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டது, அவரது மனைவியான கேப்டன் ரேணு தன்வாரின் உடலை அவரது உறவினர்கள் சொந்த ஊருக்கு கொண்டு சென்று அங்கு இறுதி சடங்குகள் செய்துள்ளனர், இந்த சம்பவம் நாடு முழுவதும் குறிப்பாக இராணுவ வட்டாரத்தில் சோகத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது