இந்தியா கனடா உறவில் தீவிர விரிசல்: ஜஸ்டின் ட்ரூடியு அரசின் மீது நம்பிக்கை இல்லை கனடாவுக்கான தூதர் மற்றும் இதர அதிகாரிகளை திரும்ப அழைத்த இந்தியா !!
1 min read

இந்தியா கனடா உறவில் தீவிர விரிசல்: ஜஸ்டின் ட்ரூடியு அரசின் மீது நம்பிக்கை இல்லை கனடாவுக்கான தூதர் மற்றும் இதர அதிகாரிகளை திரும்ப அழைத்த இந்தியா !!

கடந்த ஒரு சில வருடங்களாக இந்தியா மற்றும் கனடா இடையே காலிஸ்தான் விவகாரம் தொடர்பாக மிகத் தீவிரமான ராஜாங்க ரீதியான மோதல் ஏற்பட்டு இருதரப்பு உறவுகள் மோசமாகி கொண்டு சென்ற நிலையில் நேற்று அதாவது அக்டோபர் 14ஆம் தேதி திங்கட்கிழமை அன்று இந்திய அரசு ஜஸ்டின் ட்ருடியூ தலைமையிலான கனடிய அரசின் மீது எவ்வித நம்பிக்கையும் இல்லை எனக் கூறி கனடாவுக்கான இந்திய தூதர் மற்றும் பல்வேறு முக்கிய தூதரக அதிகாரிகளை திரும்ப அழைத்து உள்ளது உலக அளவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இதன் மூலமாக இந்தியா மற்றும் கனடா இடையான இருதரப்பு உறவுகள் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

மேலும் நேற்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்தியாவுக்கான கனேடிய தூதர் ஸ்டுவார்ட் வீலரை அழைப்பாணை விடுத்து இந்தியாவுக்கு எதிராக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியூ முன்வைத்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும் இதன் காரணமாக கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கனடா அரசின் உறுதித் தன்மை தொடர்பான நம்பிக்கையை முற்றிலும் இந்தியா இழந்துவிட்டதாகவும் ஆகவே கனடாவுக்கான இந்திய தூதர் மற்றும் முக்கிய தூதரக அதிகாரிகளை அவர்களின் பாதுகாப்பு கருதி திரும்ப அழைப்பதாகவும் பொலிரவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இந்த செயல்பாடு கனேடிய அரசு கனடாவில் மர்ம நபர்களால் கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜாரின் கொலை வழக்கில் இந்திய தூதர் மற்றும் முக்கிய இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறி அவர்களை விசாரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தது இதற்கு இந்திய அரசு இத்தகைய குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரம் அற்றவை என்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் கூறி தனது கடுமையான கண்டனங்களை பதிவு செய்திருந்தது.

மேலும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடியு இத்தகைய இந்திய எதிர்ப்பு பிரச்சாரங்களை மேற்கொள்வது மூலம் தனது நாட்டில் தேர்தலில் காலிஸ்தான் ஆதரவு குழுக்களின் ஓட்டுக்களை பெறுவதற்கு முயற்சிப்பதாக கூறி காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகள் உடனான அவரது தொடர்புகளை சுட்டிக்காட்டியது மேலும் இந்திய அரசு கனடா அரசின் இத்தகைய குற்றச்சாட்டுகளை முற்றிலும் நிராகரிப்பதாக கூறியிருந்தது.

இந்த வாரம் பற்றி இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்த கருத்துக்களின் படி கனடா பிரதமரின் இந்திய எதிர்ப்பு மனநிலை தொடர்ச்சியாக அவரது செயல்பாடுகள் மூலம் வெளிப்பட்டு வந்ததாகவும் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு அதிகாரபூர்வ சுற்றுப் பயணமாக வந்த போது தனது நாட்டில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்களின் ஓட்டுகளை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு அதில் தோல்வி அடைந்தது மற்றும் அவரது அரசவையில் உள்ள பல அமைச்சர்கள் காலிஸ்தான் அமைப்புகள் உடன் வைத்திருந்த தொடர்புகள் மேலும் ஆட்சி அமைப்பதற்காக இந்தியாவில் பிரிவினைவாதத்தை வெளிப்படையாக ஊக்குவித்த ஒரு தலைவரின் கட்சியை முற்றிலும் சார்ந்து இருந்தது போன்றவற்றையும் சுட்டிக்காட்டியது கூடுதல் தகவலாகும்.

மேலும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கனடா பிரதமர் இந்திய தூதரக அதிகாரிகள் மீது இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்த பிறகு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கோரிக்கைபடி இதுவரை இந்தியா அதிகாரிகளுக்கு எதிரான எவ்வித ஆதாரங்களையும் கனடா அரசு இந்திய அரசிடம் சமர்ப்பிக்கவில்லை எனவும் ஆகவே தற்போது இந்திய தூதரக அதிகாரிகளுக்கு எதிராக கனடா அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர் நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்தியாவுக்கு முழு உரிமை உள்ளதாகவும் கனடாவின் இத்தகைய செயல்பாடுகள் எவ்வித அடிப்படை ஆதாரம் அற்றவை எனவும் ஆகவே விசாரணை என்ற பெயரில் இந்தியாவை அரசியல் ஆதாயம் கருதி தாக்குவதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தற்போது கனடாவுக்கான இந்தியாவின் தூதராக பணியாற்றுபவர் சஞ்சய் குமார் வர்மா ஆவார், இவர் இந்தியாவின் மூத்த வெளியுறவுத்துறை அதிகாரிகளில் ஒருவர் ஆவார் இந்திய வெளியுறவுத் துறையில் சுமார் 36 ஆண்டுகாலம் பணியாற்றிய அனுபவம் மிக்க இவர் இதுவரை தனது பனிக்காலத்தில் ஜப்பான் சூடான் இத்தாலி துருக்கி வியட்நாம் மற்றும் சீனா போன்ற நாடுகளில் பணியாற்றியுள்ளார் இத்தகைய அனுபவம் வாய்ந்த ஒரு மூத்த அதிகாரி மீது கனடா அரசு முன் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் முட்டாள்தனமானவை எனவும் இந்த குற்றச்சாட்டுகளை எவ்வித மதிப்பும் இன்றி கடந்து செல்ல வேண்டியது அவசியம் எனவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

கனடா அரசு தனது நாட்டில் உள்ள காலிஸ்தான் பயங்கரவாதிகளை கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் தொடர்ந்து ஆதரித்து வருவதும் இந்தியாவில் பிரிவினைவாத தேசவிரோத செயல்களை புரிந்து விட்டு சட்டவிரோதமாக கனடாவுக்குள் நுழைந்த காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு கனடா அரசு அவர்கள் சட்ட விரோதமாக வந்தவர்கள் என தெரிந்தும் அவர்களுக்கு மிக வேகமாக குடியுரிமை வழங்கி உள்ளது மேலும் இத்தகைய காகிஸ்தான் ஆதரவாளர்கள் பயங்கரவாதிகள் மற்றும் இவர்களுடன் தொடர்புடைய சட்டவிரோத செயல்கள் புரியும் கும்பல்களின் தலைவர்கள் ஆகியோரை நாடு கடத்த கோரி இந்திய அரசு பல்வேறுமுறை கனடா அரசிடம் கோரிக்கைகளை சமர்பித்த போதும் அவற்றையெல்லாம் கனடா அரசு நிராகரித்தது குறிப்பிடத்தக்கது