அசர்பெய்ஜான் ராணுவத்திற்கு இஸ்ரேல் முன்னர் லோரா LORA பலிஸ்டிக் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்திருந்தது இந்த ஏவுகணைகளை கடந்த 2020 ஆம் ஆண்டு அர்மேனியாவுடன் நடைபெற்ற நகார்னோ காராபக் யுத்தத்தின் போது அசர்பைஜான் ராணுவம் அர்மேனியாவுக்கு எதிராக பயன்படுத்தி இருந்தது இதைத் தொடர்ந்து அர்மேனிய அரசும் தனது பாதுகாப்புக் கருதியும் அஸர்பேஜ்ஜானுக்கு எதிரான தாக்குதல் திறன்களை வலுப்படுத்தும் நோக்கத்துடனும் இத்தகைய ஏவுகணைகளை வாங்குவதற்கு திட்டமிட்டது.
அதன்படி தற்போது அர்மேனியா இந்தியாவிடம் இருந்து PRALAY பிரளய் குறுந்தூர பலஸ்டிக் ஏவுகணைகளை வாங்குவதற்கான கோரிக்கையை சமர்ப்பித்திருந்தது கடந்த ஜூன் மாதம் அர்மேனியா அரசு இந்திய அரசுக்கு இதற்கான அதிகாரப்பூர்வ கோரிக்கையை அனுப்பி இருந்தது இதனைத் தொடர்ந்து தற்போது இந்தியா அர்மேனியா அரசின் இந்த கோரிக்கையை பரிசீலித்து அந்நாட்டு ராணுவத்திற்கு ப்ரளய் குறுந்தூர பலிஸ்டிக் ஏவுகணைகளை விற்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால் இதில் ஒரு சிக்கல் உள்ளது அதாவது இந்தியா MTCR – Missile Technology Corntrol Regime அதாவது ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 35 நாடுகளில் ஒன்றாக உள்ளது, இந்த ஒப்பந்தத்தின் படி 500 கிலோ வெடி பொருளை சுமந்து சென்று 300 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா வானூர்திகளை ஏற்றுமதி செய்யக்கூடாது என்று புரிதலின் அடிப்படையிலான முடிவுக்கு இந்தியா இசைவு தெரிவித்துள்ளது இதனை மீறினால் எந்த விதமான சட்டப்பூர்வ பிரச்சினைகளும் ஏற்படாது எனினும் இந்த புரிதலுக்கு தெரிவித்த இசைவை மீறாமல் பொறுப்புடன் ஒவ்வொரு நாளும் செயல்பட்டு வருகின்றன.
ஆகவே தற்போது அர்மேனியாவுக்கு இந்த ப்ரளய் குறுந்தூர பலிஸ்டிக் ஏவுகணைகளை இந்தியா ஏற்றுமதி செய்ய வேண்டுமானால் அதற்கு முதலில் அந்த ஏவுகணையின் தாக்குதல் தொலைவு மற்றும் வெடிபொருளை சுமக்கும் திறனை குறைக்க வேண்டும், இந்தப் பணிகளை நமது நாட்டின் முன்னணி மற்றும் பிரதான ஆயுத தயாரிப்பு அமைப்பான DRDO Defence Research & Development Organisation பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தியா அர்மினியாவின் இந்தக் கோரிக்கைக்கு இசைவு தெரிவித்திருந்தாலும் அதிகாரப்பூர்வமாக இந்த ஒப்பந்தத்தை இனிதான் இறுதி செய்ய வேண்டும் அதே நேரத்தில் இந்திய அரசு தரப்பில் இருந்து இதற்கு மிக விரைவாக ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் ஏற்கனவே இந்திய விமானப்படை மற்றும் இந்திய தரைப்படை ஆகியவை இதே ஏவுகணைக்கு ஆர்டர் கொடுத்துள்ள நிலையில் இந்த ஏற்றுமதி ஒப்பந்தமும் அதே நேரத்தில் வந்துள்ளது இந்த ஏவுகணையின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது என்றால் மிகையல்ல.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வடிவமைத்துள்ள இந்த ப்ரளய் குறுந்தூர பலிஸ்டிக் ஏவுகனையானது 150 முதல் 500 கிலோமீட்டர் தொலைவு வரை பயணித்து பல்வேறு வகையான வெடிப்பொருட்களை தேவைக்கேற்ப சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஆற்றில் கொண்டதாகும் இந்த ஏவுகணையின் பிரதான பணி என்பது எதிரி ராணுவத்தின் ரேடார் அமைப்புகள் போர் விமானப் படைத்தளங்கள் மற்றும் ஓடு பாதைகள் மேலும் தகவல் தொடர்பு கட்டமைப்புகள் ஆயுதக் கிடங்குகள் முக்கிய ராணுவ தளங்கள் ஆகியவற்றை தாக்கி அழிப்பதாகும்.
அதே நேரத்தில் இந்தியாவிடம் அர்மேனியாவிற்கு சிக்கல் ஏற்படுத்தாத பிரகார் PRAHAAR போன்ற 200 கிலோமீட்டர் தொலைவு மட்டுமே செல்லக்கூடிய குறுந்தூர பலிஸ்டிக் ஏவுகணைகளும் உள்ளன என்பது கூடுதல் சிறப்பு மிக்க தகவல் ஆகும் எந்த ஒப்பந்தத்திற்கான ஆர்மீனியாவின் கோரிக்கை சர்வதேச ஆயுத சந்தையில் அதிகரிக்கும் இந்திய ஆயுதங்களின் மதிப்பு மற்றும் சர்வதேச ஆயுத சந்தையில் அதிகரிக்கும் இந்தியாவின் பங்களிப்பு குறிப்பதாக உள்ளது என்பது இந்தியர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும்.
தற்போது அசர்பைஜான் ராணுவம் பயன்படுத்தி வரும் இஸ்ரேலிய LORA லோரா குறுந்தூர பலிஸ்டிக் ஏவுகணைகள் அண்ணாற்றுக்கு அடுத்தபடியாக இந்திய படைகளிடமும் பயன்பாட்டில் உள்ளன இந்த ஏவுகணை 90 முதல் 430 கிலோ மீட்டர் தொலைவு வரை மட்டுமே பயணிக்க கூடியதாகும் அதாவது இஸ்ரேல் வான்வழி தொழிற்சாலை இந்த ஏவுகணைகளை ஏற்றுமதிக்காக பிரத்தியேகமாக வடிவமைத்துள்ளது என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது