நேற்று இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் இதர முக்கிய தூதரக அதிகாரிகளை திரும்ப இந்தியாவிற்கு அழைத்துக் கொள்வதாக அறிவித்து பரபரப்பை கிளப்பியிருந்த நிலையில் நிலையில் அதற்கு சில மணி நேரம் கழித்து இந்தியா மீண்டும் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்தது அதாவது இந்தியாவுக்கான கனடா தூதர் மற்றும் முக்கிய தூதரக அதிகாரிகளை இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு உத்தரவு பிறப்பித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிக்க வெளியிட்டுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிக்கையில் வருகிற சனிக்கிழமை அதாவது அக்டோபர் 19ஆம் தேதி அன்று இரவு 11.59 மணிக்கு முன்பாக கீழ்க்கண்ட கனடிய அதிகாரிகள் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பித்துள்ளது அந்த அதிகாரிகளின் பெயர்களாவன, கனடா தூதர் ஸ்டிவார்ட் ராஸ் வீலர், துணை தூதர் பேட்ரிக் ஹெர்பர்ட், முதன்மை செயலர்கள் மேரி கேத்தரின் ஜாலி, இயான் ராஸ் டேவிட் ட்ரைட்ஸ், ஆடம் ஜேம்ஸ் சூயிப்கா, போலா ஆர்ஜூவேலா ஆகியோர்தான் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள கன்னடா வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆவர்.
ஏற்கனவே கனடா அரசு காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜாரின் கொலை வழக்கில் இந்திய தூதர் மற்றும் முக்கிய அதிகாரிகளை தொடர்பு படுத்தி அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்து நிலையில் இந்திய அரசு இத்தகைய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனவும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை எனவும் கூறி கனடா அரசின் இத்தகைய செயல்பாடுகளுக்கு இந்தியாவுக்கான கனடா தூதரை நேரடியாக அழைப்பானை விடுத்து அழைப்பித்து கடுமையான கண்டனங்களை பதிவு செய்தது.
தொடர்ந்து கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் இதர மூத்த அதிகாரிகளை அவர்களின் பாதுகாப்பு கருதி உடனடியாக திரும்ப இந்தியாவிற்கு அழைத்துக் கொள்வதாகவும் தூதரக அதிகாரிகளை பாதுகாக்க வேண்டிய கனடா அரசின் கடமை சார்ந்த உறுதி தன்மையில் இந்திய அரசு தனது முழு நம்பிக்கை இழந்து விட்டதாகவும் கனடாவில் நிலவும் வன்முறை மற்றும் பயங்கரவாதம் சார்ந்த சூழல் மேலும் இவர்களின் பாதுகாப்பை கேள்வி குறியாக்கி உள்ளதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி அறிவிக்கை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த பல ஆண்டுகளாக இந்தியா மற்றும் கனடா இடையே நடைபெற்று வந்த ராஜாங்க ரீதியான மோதல்கள் தற்போது அடுத்த கட்டத்தை எட்டி உள்ளன இந்தியா கனடா அரசின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருதரப்பு உறவுகளை பெரிய அளவில் துண்டிக்கும் வகையில் இந்தியாவை விட்டு கனடா தூதர் மற்றும் அதிகாரிகளை வெளியேற உத்தரவிட்டு அதே நேரத்தில் கனடாவில் இருந்து இந்திய தூதர் மற்றும் தூதரக அதிகாரிகளை திரும்ப அழைத்துக் கொண்டுள்ளது, இனி வருங்காலத்தில் இந்தியா கனடா இடையேயான உறவுகள் எப்படி சரி செய்யப்பட உள்ளன என்பது கேள்விக்குறியாக உள்ளது ஆனாலும் கனடா எதிர்க்கட்சி அன்னாட்டு தேர்தலில் வெற்றி பெற்றால் கனடாவின் காலிஸ்தான் ஆதரவு கொள்கை மாறும் மேலும் இந்தியாவிலிருந்து உறவுகளும் மேம்படும் என்பது கூடுதல் சிறப்பு மிக்க தகவலாகும்.