இந்த ஆண்டு இந்திய விமானப்படை தனது 92 ஆவது ஆண்டு விழாவை சென்னையில் கொண்டாட திட்டமிட்டுள்ள நிலையில் வருகிற அக்டோபர் ஆறாம் தேதி சென்னையின் மெரினா கடற்கரைப் பகுதியில் காலை 11 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மிக பிரம்மாண்டமான வான் சாகச நிகழ்ச்சிகளை இந்திய விமான படை நடத்த திட்டமிட்டுள்ளது இது பொதுமக்களின் பார்வைக்கு முற்றிலும் இலவசமாக அனுமதிக்கப்படும் எனவும் இந்திய விமானப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரங் ஹெலிகாப்டர் சாகச குழு, ஸ்காட் விமான சாகச குழு, இந்திய விமானப்படையின் பல்வேறு வகையான ஹெலிகாப்டர்கள் போர் விமானங்கள் போக்குவரத்து விமானங்கள் சிறப்பு படை வீரர்கள் பாராசூட் சாகச வீரர்கள் ஆகியோரின் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்படும் நிலையில் இந்திய விமானப்படை ஒரு விமான நிகழ்ச்சிக்கு அதிக அளவில் பார்வையாளர்கள் கூடும் உலக சாதனையை சென்னை மெரினாவில் படைக்க திட்டமிட்டுள்ளது உலகின் இரண்டாவது நீளமான நகர கடற்கரையான மெரினா சுமார் 13 கிலோமீட்டர் நீளம் கொண்டது அதில் ஆறு கிலோமீட்டர் மிகவும் அகலமானது மேலும் 300 முதல் 437 மீட்டர் அகலம் கொண்டது ஆகவே அதிக அளவில் இந்த சாகச நிகழ்ச்சியை காண்பதற்கு மக்கள் கூடுவர் என இந்திய விமானப்படை எண்ணுகிறது
நிகழ்ச்சிக்கான முக்கிய மேடை மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தா இல்லத்திற்கு எதிரே அமைக்கப்படும் எனவும் ஆனால் பொதுமக்கள் ஒட்டுமொத்த மெரினா கடற்கரை பகுதியையும் இந்த விமான சாகச நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சியை காண்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது மேலும் விமானங்கள் லைட் ஹவுஸ் பகுதியில் இருந்து சென்னை அடையார் கடற்படை தளம் நோக்கிய திசையில் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த நிகழ்ச்சியை மிகவும் சிறப்பாக நடத்துவதற்கு இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது வருகிற அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இந்த நிகழ்ச்சிக்கான பயிற்சிகள் துவங்கும் எனவும் கூறப்படுகிறது இது தவிர வருகிற நான்காம் தேதி வீரர்களின் முழு சீருடை அணிவகுப்பும் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி இந்த அனைவருக்கும் மற்றும் சாகச நிகழ்ச்சியின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஏர் வைஸ் மார்ஷல் பிரேம்குமார் பேசும்போது மெரினா கடற்கரையில் ஆங்காங்கே பார்வையாளர் மாடங்கள் அமைக்கப்படும் எனவும் இது எங்களுக்கு மிகவும் சிறப்பான தினமாக அமையும் எனவும் சென்னை மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்காக இந்திய விமானப்படை நடத்தும் நிகழ்ச்சி எனவும் ஒட்டுமொத்த சென்னையும் இந்த தினத்தை எங்களுடன் கொண்டாடி இந்த நிகழ்ச்சியை கண்டு மகிழும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சிகளுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள விமானப்படை தளங்களில் இருந்து ரபேல், மிராஜ் 2000, சுகோய் 30, தேஜாஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான போர் விமானங்களும், அபாச்சி, த்ருவ், ருத்ரா, பிரச்சந்த், மி – 17, சினூக் போன்ற பல்வேறு வகையான ஹெலிகாப்டர்களும், சி – 295, சி -130ஜே, ஏ.என்-32, சி – 17, ஐ.எல்-76 போன்ற ராணுவ போக்குவரத்து விமானங்களும், ஐ.எல்-78 டேங்கர், நேத்ரா மற்றும் ஃபால்கன் கட்டளை மற்றும் கண்காணிப்பு விமானங்களும் சென்னை வரவுள்ளன என்பது கூடுதல் சிறப்பு மிக்க தகவலாகும்